Home
News

AC, ஏர் கூலர் இல்லாமல் வீட்டை குளிர்ச்சியா வைக்கலாமா? அது எப்படி? இந்த 7 ட்ரிக்கை ட்ரை செய்து பாருங்க..

சுட்டெரிக்கும் சூரியனின் வெப்பம் நம் மண்டையில் ஸ்ட்ரா போட்டு ஒட்டுமொத்த சக்தியையும் உறுஞ்சுவிடுகிறது. வெளியே சென்று வீடு திரும்பினால், வீட்டிற்குள்ளும் சூரியனின் வெப்பத்தை நம்மால் உணர முடிகிறது. எல்லோராலும், எல்லா நேரங்களிலும் ஏசி (AC) மற்றும் ஏர் கூலர் (Air cooler) போன்ற சாதனங்களை பயன்படுத்த முடியாது. இது மின் கட்டணத்தை கண்டபடி உயர்த்திவிடும். மின்சார கட்டணம் உயராமல், உங்கள் வீட்டு அறையை சாமர்த்தியாமாக குளிர்விக்க சில தந்திரங்கள் (tricks to cool your room in smart way) உள்ளன. அதை எப்படி செய்வதென்று தான் இந்த பதிவின் மூலம் தெரிந்துகொள்ளப் போகிறோம்.

இந்த கோடை கால வெப்பத்தில் இருந்து தப்பிக்க நீங்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்க்கலாம். இயற்கையான முறையுடன் கொஞ்சம் ஸ்மார்ட்டான தந்திரங்களை (smart tricks to cool your room) சேர்த்து பயன்படுத்துவதன் மூலம், உங்கள் வீட்டு அறையில் தேங்கிக்கிடக்கும் வெப்பத்தையும், வெப்ப காற்றையும் உங்களால் குறைக்க முடியும். தினசரி ஏசி (AC) மற்றும் ஏர் கூலர் போன்ற சாதனங்களை பயன்படுத்துவதன் மூலம் உங்கள் மின்சாரம் கட்டணம் அதிகரிப்பதையும் உங்களால் இப்போது குறைக்க முடியும்.

AC, ஏர் கூலர் இல்லாமல் வீட்டை குளிர்ச்சியா வைக்கலாமா? அது எப்படி?

1. அடர்த்தியான திரைகள் மற்றும் பிளாக்அவுட் கர்ட்டைன்ஸ்:
உங்கள் வீட்டு அறைக்குள் நுழையும் வெப்ப காற்றை தடுக்க தடிமனான ஸ்கிரீன் (thick screens and curtains) துணிகளை பயன்படுத்தலாம். குறிப்பாக, பிளாக்அவுட் கார்டைன்ஸ்களை (blackout curtains) நீங்கள் பயன்படுத்தலாம். இது நேரடியான சூரிய ஒளி மற்றும் அதனால் ஏற்படும் வெப்பத்தையும், யுவி கதிர்களின் ஊடுருவளையும் இந்த திரைகள் அறைக்குள் நுழையாமல் தடுக்கிறது. மதியம் 12 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த திரைகளை பயன்படுத்தி ஜன்னல் மற்றும் கதுவுகளை மூடி வைப்பதன் மூலம் அறையை வெப்பமடையாமல் தடுக்கலாம்.

2. காலையிலும் மாலையிலும் கிராஸ் வென்டிலேஷன் முக்கியம்:
உங்கள் வீட்டில் உள்ள அணைத்து ஜன்னல் (windows) மற்றும் கதவுகளை (doors) விடியற்காலை மற்றும் மாலை நேரங்களில் திறந்து வைப்பது முக்கியமானது. இது குளிர்ந்த காற்றை அறைக்குள் வரவைத்து, வெப்ப காற்றை மற்றொரு திசையில் வெளியேற்ற அனுமதிக்கும். இதனால், உங்கள் அறை வெப்பமடையாமல், குளிர்ச்சியாக இருக்கும். கிராஸ் வென்டிலேஷன் (cross ventilation) என்ற இந்த இயற்கையான முறையை பின்பற்றினால், மின்சார செலவை (current bill) குறைக்க முடியும்.

3. DIY ஏர் கூலர் மற்றும் ஐஸ் கியூப்ஸ் ட்ரிக்:
உங்கள் வீட்டில் ஏர் கூலர் (air cooler) அல்லது ஏசி போன்ற சாதனங்கள் இல்லாவிட்டாலும் கூட, உங்கள் அறையை குளிர்விக்க ஒரு சூப்பரான DIY ஐடியா (DIY ideas to cool your room) இருக்கிறது. இரண்டு அல்லது கூடுதல் வாட்டர் பாட்டில்களில் நீர் நிரப்பி, அவற்றை ஃபிரீஸரில் (freezer) வைத்து ஐஸ் கட்டியாக மாற்றிக்கொள்ளுங்கள். மாலை நேரத்தில், நீங்கள் பயன்படுத்தும் டேபிள் ஃபேன் (table fan) முன்னிலையில் இந்த ஐஸ் பாட்டில்களை சிறிய இடைவெளி விட்டு வைத்துவிடுங்கள். இதன் நடுவே காற்று ஊடுருவும் போது, குளிர்ச்சியான காற்றை உங்கள் அறையில் பரப்ப முடியும்.

4. வெப்பத்தை உமிழும் சாதனங்களை OFF செய்யுங்கள்:
லேப்டாப் (laptop), டிவி (TV) மற்றும் லைட்கள் (lights) போன்ற சாதனங்கள் வெப்பத்தை வெளியிடுகின்றன. பயன்பாட்டில் இல்லாதபோது அவற்றை OFF செய்து வைப்பது சிறப்பானது. பாரம்பரிய பல்புகளுடன் ஒப்பிடும்போது, LED லைட்கள் (LED lights) மற்றும் CFL பல்புகள் (CFL bulbs) குறைவான வெப்பத்தை உருவாக்குகின்றன.

5. தரையில் படுக்கையை பயன்படுத்துங்கள்:
உயர்வான இடத்தில் சூடான காற்றின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆகையால், தரைக்கு நெருக்கமாக தூங்குவது இரவில் குளிர்ச்சியாக இருக்க உதவும். இன்னும் சிறந்த உறக்கத்திற்கு மூங்கில் பாய் (bamboo mattresses) போன்ற விரிப்புகளை பயன்படுத்தலாம்.

6. படுக்கை விரிப்பில் கவனம் செலுத்துங்கள்:
பட்டு (silk) மற்றும் சாட்டின் (satin) துணிகளால் ஆன படுக்கை விரிப்புகளை கோடை காலத்தில் தவிர்ப்பது சிறந்தது. சுத்தமான பருத்தி விரிப்புகளை பயன்படுத்துவது குளிர்ச்சியான அனுபவத்தை வழங்கும். வெளியில் செல்லும் பொழுது கூட, பருத்தி ஆடைகளை (cotton dresses) அணிந்து செல்வது காற்றோட்டமாக இருக்க அனுமதிக்கும்.

7. ஈரமான விருப்புகளை ஜன்னல்களில் பயன்படுத்தவும்:
இது பழங்காலத்து செயல்முறை தான் என்றாலும், இன்னும் பல வீடுகளில் ஏசி இல்லாத குறையை ஈரமான போர்வைகள் (wet sheets) தான் பூர்த்தி செய்கின்றன. ஈரமான போர்வைகளை (wet bedsheets) ஜன்னல் மற்றும் கதுவுகளில் விடுவதன் மூலம், அதன் வழி வரும் காற்று கூலான அனுபவத்தை அனுபவிக்க அனுமதிக்கும்.

இந்த எளிமையான 7 சாமர்த்தியமான தந்திரங்களை பின்பற்றுவதன் மூலம், உங்கள் அறை வெப்பமாவதை நம்மால் குறைக்க முடியும். இதன் மூலம் மின்சார கட்டணம் அதிகமாவதையும் நம்மால் குறைக்க (how to cool your bedroom without AC) முடியும். ஏசி மற்றும் ஏர் கூலர் இல்லாத வீடுகளில் இந்த எளிமையான ட்ரிக்ஸ்களை (cooling tips to use at homes) பின்பற்றுவதன் மூலம், வழக்கமான வெப்பத்தை காட்டிலும், உங்கள் அறையை இயற்கையான குளிர்ச்சியில் இருப்பதை உங்களால் உறுதி செய்ய முடியும்.

அதேபோல், உங்கள் வீட்டில் ஏசி (AC) அல்லது ஏர் கூலர் போன்ற சாதனங்களை நீங்கள் பயன்படுத்தி வந்தாலும் சரி, இந்த தந்திரங்களில் உள்ள சில தந்திரங்களை நீங்கள் பின்பற்றலாம். இதன் மூலம் உங்கள் வீட்டின் அறை இயற்கையாக குளிர்ச்சி அடைவதோடு, நீங்கள் ஏசி மற்றும் ஏர் கூலர் சாதனங்களை நீண்ட நேரம் பயன்படுத்துவதையும் குறைக்க உதவுகிறது. இதன் மூலம் உங்கள் மாதாந்திர மின்சார கட்டணத்தில் ஒரு பெரும் தொகையை உங்களால் குறைக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
You Can Keep Your House Cool Without an AC or Air Cooler Try These 7 Smart Tricks Now
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X