இனி இந்த 4 தேவைகளுக்கு RTO அலுவலகம் போகத் தேவையில்லை! ஏன் தெரியுமா?
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் சில முக்கியமான வேலைகளை செய்துமுடிக்க முடியும் என்ற நிலை வந்துள்ளது. அதேபோல் சில ஆப் வசதிகள் நமது தினசரி வேலைகளை கூட எளிமையாக்குகிறது என்றுதான் கூறவேண்டும்.

இந்நிலையில் ஆர்டிஓ-வின் சில சேவைகள் எங்கிருந்து வேண்டுமானுலும் பெறும் சிறப்பு திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் அறிமுகம் செய்துள்ளது. அதாவது பொதுமக்கள் ஆர்டிஓஅலுவலங்களுக்கு நேரில் செல்லாமலேயே ஆன்லைன் மூலம் சேவைகளை பெறும் வசதி துவங்கி வைத்திருக்கின்றது.குறிப்பாக இந்த வசதி மிகவும் பயனுள்ள வகையில் இருக்கும்.

குறிப்பாக அரசு வெளியிட்டிருக்கும் தகவலின்படி, இனி மக்கள் ஆர்டிஓ அலுவலகங்களுக்கு வராமலேயே LLR எனப்படும் Learners Licence எடுக்க, தொலைந்து போன உங்கள் லைசென்ஸை டூப்ளிகேட் எடுக்க, லைசென்ஸில் முகவரி மாற்றம் செய்ய, டிரைவிங் லைசென்ஸை ரினியூவல் உள்ளிட்ட சில சேவைகளை ஆன்லைன் மூலம் பெற்றுக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இதற்கு பெயர் Contactless Service Operation என்று கூறப்படுகிறது. குறிப்பாக இந்த ஆப்பரேஷனை மத்திய அரசு 2018-லேயே அறிவித்துவிட்டது. இருந்தபோதிலும் நம் மாநில அரசு இதை சமீபத்தில் தான் இம்பிளிமென்ட் செய்திருக்கிறது.

மேலும் பாரிவாஹன் (www.parivahan.gov.in) தளத்தில் தான் இதற்கான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக இதற்கு முக்கியமாக உங்களிடம் இருக்க வேண்டிய ஆதாரம் ஆதார் கார்டு தான். குறிப்பாக LLR எடுப்பதற்கு உங்கள் ஆதாரங்களை அப்லோடு செய்தால், ஒரு சின்னப் பரீட்சை வைக்கிறார்கள். அதாவது போக்குவரத்து சிக்னல்கள், விதிமுறைகள், சிம்பல்கள் என்று பல விஷயங்களை நீங்கள்சரியாக பரீட்சை எழுத வேண்டும். பின்பு அதிகபட்சம் 8 மார்க் எடுத்து பாஸ் ஆகிவிட்டால், கட்டணம் செலுத்தி ஆன் தி ஸ்பாட்டிலேயே LLR -யை ப்ரின்ட் எடுத்துக் கொள்ள முடியும். பின்பு LLR வைத்திருக்கும் 30 நாட்களுக்குப் பிறகு உங்களுக்குத் தோதான நாளில் 8 போட்டு ஓட்டிக் காட்டி, டிரைவிங் லைசென்ஸ் பெற்றுக் கொள்ளலாம். இந்த எல்எல்ஆர் 150 நாட்கள் வரை செல்லுபடியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக லைசென்ஸ் ரினியூவல் செய்வது, முகவரி மாற்றம் செய்வது, டூப்ளிகேட் லைசென்ஸ் எடுப்பது போன்ற அனைத்தும் இந்த தளத்தில் எளிமையாக இருக்கிறது. சுருக்கமாக கூறவேண்டும் என்றால் ஆர்டிஓ அலுவலகங்களுடனான தேவையில்லாத நேரடி தொடர்பை குறைக்கும் வகையில் இந்த நடவடிக்கை அமைந்துள்ளது.

இந்த சிறப்பு ஆன்லைன் சேவையை தலைமை செயலகத்தின் உள் போக்குவரத்துறை சார்பில் முதலமைச்சர் முக ஸ்டாலின் தொடங்கி வைத்தார். குறிப்பாக தற்போது கூட்ட நெரிசலை தவிர்க்கும்படியும், மக்கள் எளிமையாக பயனடையும் வகையிலும் இந்த ஆன்லைன் சேவைகள் தொடங்கப்பட்டுள்ளன.
NEWS Source: indiatimes.com


Click it and Unblock the Notifications