எல்லாமே மாறுது.. இனி கூகுள் பே இருந்தால் போதும்.. PF பணத்தை எடுப்பது ரொம்ப ஈஸி.. இதோ முழு விவரம்..
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) கொண்டுவரும் ஒவ்வொரு திட்டங்களும் மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது. அதேபோல் இந்த EPFO தொடர்ந்து பல்வேறு புதிய முயற்சிகளைச் செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில் PF பயனர்களுக்கு ஒரு புதிய வசதியை வழங்கத் தயாராகி வருகிறது EPFO அமைப்பு.
அதாவது இனி சந்தாதாரர்கள் UPI மூலம் தங்கள் கணக்கில் உள்ள பிஎப் பணத்தை எடுக்க முடியும். அதுவும் இந்த வசதியின் மூலம் கூகுள் பே (Google Pay), போன்பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற செயலிகள் மூலம் வீட்டில் இருந்தே உங்கள் கணக்கிற்கு நேரடியாக பிஎப் தொகையை மாற்ற முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக இந்த புதிய வசதி பல கோடி பிஎப் வாடிக்கையாளர்களுக்குப் பயனளிக்கும். அதுவும் பிஎப் கணக்கில் யுபிஐ ஒருங்கிணைப்புக்காக அடுத்த 2 மாதங்களில் இந்த வசதியைத் தொடங்கும் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இந்த வசதியின் மூலம் பிஎப் பணத்தை எடுக்க குறைந்த நேரமே எடுக்கும். பின்பு பிஎப் தொகையை எங்கு வேண்டுமானாலும் மிகவும் எளிமையாக எடுக்க முடியும்.
இப்போது வரை யுபிஐ மூலம் பிஎப் தொகையை எடுக்கும் வசதி இன்னும் தொடங்கப்படவில்லை. இருந்தபோதிலும் யுபிஐ மூலம் பணத்தை எப்படி எடுப்பது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி உங்களது மொபைலில் கூகுள் பே, பேடிஎம், போன்பே போன்ற செயலிகளை பதிவிறக்கம் செய்து உங்களது வங்கி கணக்கை அதில் இணைக்க வேண்டும்.
அதன்பின்னர் நீங்கள் பணம் எடுக்க விரும்பும் செயலியைத் திறந்து EPFO Withdrawal என்ற விருப்பத்தைக் கண்டறியவும். குறிப்பாக இந்த வசதி தொடங்கிய பின்பு உங்களால் இந்த EPFO Withdrawal விருப்பத்தைப் பார்க்க முடியும். அதன்பின்பு உங்கள் UAN எண்ணை உள்ளிட வேண்டும். இதில் நீங்கள் PF கணக்கின் குறிப்பிட்ட அளவு தொகையை எடுக்க முடியும் என்று கூறப்படுகிறது.
பிஎப் விதிகளின்படி, மருத்துவ அவசரநிலை, வீட்டு கடன் திருப்பிச் செலுத்துதல் அல்லது கல்விச் செலவுகளுக்குக் குறிப்பிட்ட பணம் அளவில் கிடைக்கும். இதற்கு பிறகு, நீங்கள் விரும்பும் தொகையை உள்ளிட்டு செயல்முறையைத் தொடர வேண்டும். பின்பு உங்கள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு ஓடிபி வரும். அதை உள்ளிட்டுப் பரிவர்த்தனையை உறுதிப்படுத்த வேண்டும். அதன்பின்னர் உங்கள் பிஎப் பணம் உங்களது வங்கி கணக்கு அல்லது டிஜிட்டல் வாலட்டுக்கு வரும்.
அதேபோல் பிஎப் பணத்தை எடுக்க பிஎப் கணக்கின் கேஒய்சி சரிபார்ப்பை முடிக்க வேண்டியது அவசியம். இந்த KYC சரிபார்ப்பில் பான் கார்டு, ஆதார், வங்கிக் கணக்கு தொடர்பான தகவல்கள் அடங்கும். பின்பு உங்களது KYC முழுமையானதா இல்லையா என்பதை ஆன்லைனில் சரிபார்க்க முடியும். இதற்காக உங்கள் பிஎப் கணக்கில் உள்நுழைய வேண்டும். மேலும் தகவலுக்கு. தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான epfindia.gov.in என்ற முகவரியைப் பார்வையிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
விரைவில் கொண்டுவரப்படும் யுபிஐ வசதியின் முக்கிய நன்மை என்னவென்றால், பிஎப் பணம் எடுக்கும் கோரிக்கை நிராகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகளும் குறைவு, பின்பு கிராமப்புறங்களில் இருப்பவர்களும் எளிதாக வீட்டில் இருந்தே பணம் எடுக்க முடியும். ஆனாலும் தற்போது வரை EPFO இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடவில்லை. விரைவில் யுபிஐ மூலம் PF பணத்தை எடுக்கும் வசதி குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








