Home
News

வெறும் ரூ.249-க்கு புதிய ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை அமேசானில் வாங்கலாம்- உடனே முந்துங்கள்!

அமேசான் ஃபேப் போன்ஸ் விழா இன்று (மார்ச் 14) முதல் தொடங்குகிறது. இந்த அறிவிப்பில் ஆப்பிள் முதல் போக்கோ வரை ஒவ்வொரு பிராண்டின் ஸ்மார்ட்போன்களுக்கும் சிறந்த சலுகைகள் வழங்கப்படுகிறது. பட்ஜெட் விலையில் ஸ்மார்ட்போனை வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போனே அமேசான் தளத்தில் பட்ஜெட் விலையில் கிடைக்கிறது. நினைத்துக் கூட பார்க்க முடியாத அளவிற்கு அமேசான் தளத்தில் சலுகைகள் வழங்கப்படுகிறது. நீங்கள் தற்போது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.249-க்கு வாங்கலாம்.

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை வெறும் ரூ.249-க்கு எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கலாம். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது ரூ.16,999-க்கு அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது அமேசான் ஃபேப் போன்ஸ் ஃபெஸ்ட் விற்பனையில் இந்த ஸ்மார்ட்போனை ரூ.13,999-க்கு வாங்கலாம். அமேசானில் சலுகை தின அறிவிப்பின் ஒரு பகுதியாக உங்களுக்கு தள்ளுபடி கூப்பனும் வழங்கப்படுகிறது. இந்த கூப்பன் மூலம் நீங்கள் ரூ.500 தள்ளுபடியை பெறுவீர்கள். இந்த கூப்பனை பயன்படுத்தி இந்த போனை ரூ.13,499 என்ற விலைக்கு வாங்கலாம்.

வெறும் ரூ.249-க்கு எப்படி வாங்குவது

வெறும் ரூ.249-க்கு எப்படி வாங்குவது

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனை ரூ.13,499-க்கு வாங்கலாம், வெறும் ரூ.249-க்கு எப்படி வாங்குவது என்பது குறித்து பார்க்கையில், எக்ஸ்சேஞ்ச் சலுகையை பயன்படுத்தி இந்த சாதனத்தை வாங்கும் போது கிடைக்கும். உங்கள் பழைய ஸ்மார்ட்போனுக்கு ஈடாக இந்த ஸ்மார்ட்போனை வாங்கினால் இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு பலனையும் பெற்றால் இந்த சாதனத்தின் விலை ரூ.13,250 ஆகக் குறையும். அப்படி வாங்கும் பட்சத்தில் இந்த சாதனத்தை ரூ.249 மட்டுமே செலுத்த வேண்டும்.

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு

4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்சேமிப்பு

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனானது 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் விலை ரூ.13,999-ஆக உள்ளது. பின்பு 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 10டி 5ஜி மாடலின் விலை ரூ.15,999-ஆக அறிமுகம் செய்யப்பட்டது. ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மாடல் 6.5-இன்ச் எல்சிடி டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது. பின்பு 2400 x 1080 பிக்சல்கள் தீர்மானம், Reading Mode 3.0, 1500: 1 கான்ட்ராஸ்ட் ரேஷியோ மற்றும் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு போன்ற பல்வேறு சிறப்பான அம்சஙகைள கொண்டு இந்த புதிய ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளது.

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதி

மேலும் இந்த சாதனம் தனித்துவமான அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன் மீடியாடெக் Dimensity 700 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது. எனவே இயக்கத்திற்கு மிகவும் அருமையாக இருக்கும். மேலும் MIUI 12 சார்ந்த ஆண்ட்ராய்டு 11 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த புதிய ஸ்மார்ட்போன். ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனின் பின்புறம் 48எம்பி பிரைமரி சென்சார் + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் உள்ளன. மேலும் 8எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம்.

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

5000 எம்ஏஎச் பேட்டரி வசதி

ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போனில் 5000 எம்ஏஎச் பேட்டரி இடம்பெற்றுள்ளது. எனவே சார்ஜ் பற்றிய கவலை இருக்காது. மேலும் 18 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு, கைரேகை சென்சார் வசதி உள்ளிட்ட பல்வேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த ஸ்மார்ட்போன். குறிப்பாக இதன் வடிவமைப்புக்கு அதிக கவனம் செலுத்தியுள்ளது அந்நிறுவனம். 5ஜி, 4ஜி எல்டிஇ, வைஃபை, புளூடூத் வி 5.1, ஜிபிஎஸ்/ ஏ-ஜிபிஎஸ், என்எப்சி, யூ.எஸ்.பி டைப்-சி மற்றும் 3.5 மிமீ ஆடியோ ஜாக் போன்ற பல்வேறு இணைப்பு ஆதரவுகளை கொண்டுள்ளது ரெட்மி நோட் 10டி 5ஜி ஸ்மார்ட்போன். இதுதவிர கைரோஸ்கோப், ப்ராக்ஸிமிட்டி சென்சார் உள்ளிட்ட பல சென்சார் வசதிகளை கொண்டுள்ளது இந்த சாதனம்.

Best Mobiles in India

English summary
You can buy the new Redmi Note 10T 5G smartphone for just Rs 249 on Amazon
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X