ஆன்லைனில் ஆர்டர் செய்தால் வீடுதேடி வரும் பெட்ரோல்-டீசல்
இந்திய அரசு கடந்த சில மாதங்களாகவே பொதுமக்களை டிஜிட்டல் உலகிற்கு கொண்டு செல்ல முயற்சித்து வரும் நிலையில் தற்போதைய லேட்டஸ் டிஜிட்டல் திட்டம் அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆம், இந்திய அரசு தற்போது மற்ற பொருட்களை போலவே டிஜிட்டலில் பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய பொருட்களையும் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது. இந்த திட்டம் டிஜிட்டல் உலகில் ஒரு புரட்சியை செய்யும் என்றாலும் இந்த பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்வதில் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களும் தேவைப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் நடந்த இந்திய மொபைல் காங்கிரஸ் கூட்டம் ஒன்றில் பேசிய மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள், 'இந்த திட்டம் ஐடி மற்றும் தொலைத்தொடர்பு துறையினர்களுடன் இணைந்து செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். இந்த திட்டம் குறித்து அமைச்சர் கடந்த ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி ஸ்ரீநகரில் நடந்த கூட்டம் ஒன்றிலேயே ஆலோசனை வடிவில் தெரிவித்துள்ளார்
இந்திய பெட்ரோல் மற்றும் எரிவாயு விலை நிர்ணய தலைவர் தீபக் மஹுர்கர் அவர்கள் இதுகுறித்து கூறியபோது, 'இகாமர்ஸ் மூலம் பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்வது சாத்தியமே என்றும் இந்த பொருட்களை டோர் டெலிவரி செய்வதில் எந்த பிரச்சனையும் எழ வாய்ப்பு இல்லை என்றும் தெரிவித்தார். இதில் இருக்கும் ஒரே சவால் இத்தகைய பொருட்களை டெலிவரி செய்யும் வரை பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டும் என்பது மட்டுமே.
சீல் செய்த பேக்கிங்கில் டெலிவரி செய்யப்படும்போது இத்தகைய பிரச்சனையை எளிதாக சமாளிக்கலாம். இந்த திட்டம் பெட்ரோல் மற்றும் டீசல் அவசியத் தேவையை பூர்த்தி செய்யும். குறிப்பாக பல மைல்கள் கடந்து சென்று பெட்ரோல் டீசலை வாங்க வேண்டிய நிலையில் உள்ள கிராமப்புற மக்களுக்கு இந்த திட்டம் பெரிதும் பயன்படும்
முன்னால் ONGC தலைவர் மற்றும் மேனேஜிங் டைரக்டர் ஆர்.எஸ். ஷர்மா அவர்கள் இதுகுறித்து கூறும்போது, 'எரிபொருள் ஆன்லைன் விற்பனை செய்வது சாத்தியமான ஒன்று தான் என்றும், ஆனால் பாதுகாப்பு தரநிலைகள் பராமரிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்தார்.
அதேபோல் விற்பனை செய்யப்படும் பெட்ரோல்களை வாகனத்தில் நிரப்பப்படும்போதும் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடிக்க வேண்டியது மிக அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
ஆனால் ஆன்லைனில் விற்பனை செய்யப்படும் பெட்ரோல் விலையை உயர்த்துவதற்காக, தொழில் நுட்ப வல்லுனர்கள் தங்கள் கவலையை தெரிவித்தனர். ஏற்கனவே இருக்கும் எரிபொருள் விலைக்கு கூடுதலாக, வாங்குபவர்கள் தங்கள் வீட்டு வாசல்களுக்கு வழங்குவதற்கு ஒரு சேவை கட்டணம் வசூலிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications