சரியான வாய்ப்பு., ரூ.2000 தள்ளுபடி- ரூ.4,499-க்கு ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்கலாம்: இதோ வழிமுறைகள்!

|

ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் ஜியோபோன் ரிலையன்ஸ் ரீடெய்ல் சாதனங்களுக்கு வரையறுக்கப்பட்ட கால எக்ஸ்சேஞ்ச் சலுகையை வழங்கி இருக்கிறது. இந்த எக்ஸ்சேஞ்ச் சலுகையின்படி ரிலையன்ஸின் சமீபத்திய ஸ்மார்ட்போனை ரூ.4,499 என வாங்கலாம்.

ஜியோபோன் நெக்ஸ்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகை

ஜியோபோன் நெக்ஸ்ட் எக்ஸ்சேஞ்ச் சலுகை

ஜியோபோன் நெக்ஸ்ட் எக்ஸ்சேஞ்ச் வெளியீட்டு விலை ஆனது ரூ.6,499 என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. ரூ.2500 முன்பணமாக செலுத்தி இந்த சாதனம் வாங்க நிறுவனம் பயனர்களுக்கு நிதி விருப்பங்களை வழங்குகிறது. மீதமுள்ள தொகையை 24 மாதங்கள் வரை இஎம்ஐ விருப்பத்தில் செலுத்த வேண்டும். பயனர்கள் தேர்ந்தெடுக்கும் திட்டத்தை பொறுத்து மாதம் செலுத்த வேண்டிய தொகை நிர்ணயிக்கப்படும். பயனர்கள் தேர்வு செய்ய ஆல்வேஸ் ஆன், லார்ஜ், எக்ஸ்எல் மற்றும் எக்ஸ்எக்ஸ்எல் ஆகிய நான்கு திட்டங்கள் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.2000 வரை தள்ளுபடி

ரூ.2000 வரை தள்ளுபடி

தற்போது நேரலையில் இருக்கும் எக்ஸ்சேஞ்ச் சலுகை குறித்து பார்க்கையில், ஜியோபோன் நெக்ஸ்ட் வாங்குபவர்களுக்கு ரூ.2000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதன்மூலம் இந்த சாதனத்தை ரூ.4,499 என வாங்கலாம். இந்த தள்ளுபடியானது பழைய சாதனத்தை எக்ஸ்சேஞ்ச் செய்து வர்த்தகம் செய்யும் போது கிடைக்கும். இந்த தள்ளுபடியானது குறிப்பிடத்தக்க வகையில் வழங்கப்படுகிறது. அதாவது பழைய சாதனங்களின் நிலை, 4ஜி ஸ்மார்ட்போன்கள் உள்ளிட்ட பிற செயல்பாட்டு ஸ்மார்போன்கள் அடங்கும். ரிலையன்ஸ் ரீடெய்ல் எக்ஸ்சேஞ்ச் சலுகையின் செல்லுபடி குறித்த முழுவிவரங்களை நிறுவனம் வெளிப்படுத்தவில்லை.

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள்

ஜியோபோன் நெக்ஸ்ட் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த சாதனம் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்புடன் வருகிறது. இது 5.45 இந்ச் மல்டி டிச் எச்டி டிஸ்ப்ளேவை வழங்குகிறது. டூயல் 4ஜி சிம்கார்ட்கள் ஆதரவு, வேகமான சார்ஜிங் தொழில்நுட்பம் இன்றி 3300 எம்ஏஎச் பேட்டரி ஆதரவோடு வருகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் 13 எம்பி ஒற்றை கேமரா ஆதரவோடு வருகிறது. ஜியோபோன் நெக்ஸ்ட் ஸ்மார்ட்போனின் முன்புறத்தில் 8 எம்பி செல்பி கேமரா ஆதரவு இருக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதி

ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனத்தின் குறிப்பிடத்தக்க அம்சம் பிரகதி ஓஎஸ் ஆதரவோடு வருகிறது. இது இந்திய பயனர்களின் தேவையறிந்து உருவாக்கப்பட்டது. ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனமானது ஸ்னாப்டிராகன் 215 எஸ்ஓசி ஆதரவோடு வருகிறது. இந்த ஜியோபோன் நெக்ஸ்ட் சாதனமானது 2 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இதில் மைக்ரோ எஸ்டி கார்ட் ஆதரவு இருக்கிறது இதன்மூலம் இயல்பு நிலை சேமிப்பகத்தை விரிவாக்கம் செய்யலாம்.

வாடிக்கையாளர்களை இணைக்கத் தொடங்கிய ஜியோ

வாடிக்கையாளர்களை இணைக்கத் தொடங்கிய ஜியோ

கடந்த டிசம்பர் மாதம் முதல் ஜியோ நிறுவனம் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் வாடிக்கையாளர்களை இழந்துகொண்டே வந்தது. இந்நிலையில் மார்ச் மாதத்தில் ஒருவழியாக ஜியோ நிறுவனத்தின் இழப்புகள் முடிவுக்கு வந்து புதிய வாடிக்கையாளர்களை சேர்க்கத் தொடங்கியுள்ளது. டிராய் அமைப்பு வெளியிட்ட தகவலின்படி, கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் 12.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை சேர்த்துள்ளது. எனவே இதன்மூலம் ஜியோ நிறுவனத்தின் மொத்த வாடிக்கையாளர் எண்ணிக்கை 40.4 கோடியாக உயர்ந்துள்ளது. குறிப்பாக மூன்று மாத இழப்புக்கு பிறகு மார்ச் மாதத்தில் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளது முகேஷ் அம்பானிக்கு மகிழ்ச்சி செய்தியாக வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ புதிய ப்ரீபெய்ட் திட்டம்

ஜியோ நிறுவனத்தின் ரூ.119 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும். குறிப்பாக 300 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் நன்மைகளை வழங்குகிறது இந்தஅட்டகாசமான திட்டம். அதேபோல் ஜியோ நிறுவனத்தின் ரூ.199 ப்ரீபெய்ட் திட்டம் ஆனது தினசரி 1.5ஜிபி டேட்டா நன்மையை வழங்குகிறது. மேலும் இந்த திட்டத்தின் வேலிடிட்டி 23 நாட்கள் ஆகும். தினசரி 100 எஸ்எம்எஸ், வரம்பற்ற குரல் அழைப்பு நன்மைகள் மற்றும் ஜியோ ஆப் பயன்பாடுகளின் அணுகல் உள்ளிட்ட பல நன்மைகளை வழங்குகிறது இந்த அசத்தலான திட்டம்.

Best Mobiles in India

English summary
You Can Buy Latest JioPhone Next at Rs.4,499 in Reliance Retail: Exchange Offer

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X