ரூ.2/-க்கு 100எம்பி; ரூ.20/-க்கு 1ஜிபி டேட்டா வழங்கும் குட்டி அம்பானி.!

வைஃபை டப்பாவின் வருகையானதும் மாபெரும் டெலிகாம் புரட்சியாக வெடித்தால் ஜியோவும் மலிவு விலை திட்டங்களை தொகுத்து வழங்கலாம்.!

|

கடந்த ஆண்டு வரை நாம் 1ஜிபி அளவிலான 3ஜி அல்லது 4ஜி டேட்டாவிற்கு குறைந்தபட்சம் ரூ.250/- செலவு செய்து வந்தோம். இப்போது நினைத்து பார்த்தால் கூட மிக கொடுமையாக இருக்கும் - நாம் வெறும் 300எம்பி 400 எம்பி டேட்டாவை ஒரு மாதம் முழுக்க "பொத்திப்பொத்தி பாதுகாத்து" பயன்படுத்தி வந்தோம்.!

ஆனால்,முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ வருகைக்கு பின்னர் எல்லாமே தலைகீழாய் மாறியது. அதிலும் அறிமுகம் செய்யப்பட்ட அடுத்த சில மாதங்களுக்கு 4ஜி வேகத்திலான டேட்டாவை முற்றிலும் இலவசமாக வழங்கிய அம்பானியின் மாஸ்டர் பிளான் ஆனது நம்மை இன்றும் உளவியல் ரீதியாக ஜியோவிடம் தக்கவைத்துக்கொண்டே உள்ளது என்பது நிதர்சனம்.

இதர நிறுவனங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்தன

இதர நிறுவனங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்தன

ரிலையன்ஸ் ஜியோவின் இலவச சேவைகள் எப்போது முடியும், எப்போது நாமும் விலை மாற்றங்களை நிகழ்த்தலாமென இதர நிறுவனங்கள் தூக்கமில்லாத இரவுகளை கழித்தன. ஜியோ கட்டண சேவைகள் அறிவிக்கப்பட்ட பின்னர் இந்திய தொலைத்தொடர்பு துரையின் ஒட்டுமொத்த முகமும், நிலைமையும் பல மாற்றங்களை (நேற்றுவரை) கண்டு கொண்டே தான் வருகிறது.

வெளிப்படையான கட்டண யுத்தம்.!

வெளிப்படையான கட்டண யுத்தம்.!

முன் எப்போதும் கிடைக்கப்பெறாத மிக மலிவான விலையில் வரம்பற்ற தரவு மற்றும் அழைப்பு நன்மைகளை வழங்குவதன் மூலம் மற்ற நிறுவனங்களுக்கு கடுமையான போட்டியை ஜியோ வழங்கத் தொடங்கியது. அதனை சமாளிக்கும் வண்ணம் "ஜியோ போன்றே" பல வெளிப்படையான திட்டங்களை ஏர்டெல், வோடபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் என மற்ற தொலைத் தொடர்பு இயக்குனர்களும் வழங்கத் தொடங்கின.

என்ன சேவையை வழங்குகிறார்.? எங்கு வழங்குகிறார்.?

என்ன சேவையை வழங்குகிறார்.? எங்கு வழங்குகிறார்.?

ஜியோவுடன் போட்டிபோடும் நிறுவனங்களின் பட்டியலில் தனி மனிதர் ஒருவர் இணைந்துள்ளார். அவர் வழங்கும் திட்டங்களும், அவரின் யோசனைகளும் அவரை ஒரு குட்டி அம்பானியாகவே காட்சிப்டுத்துகிறது. யார் அவர்.? அவர் அப்படி என்ன சேவையை வழங்குகிறார்.? எங்கு வழங்குகிறார்.?

வைஃபை டப்பா ( Wifi Dabba).!

வைஃபை டப்பா ( Wifi Dabba).!

பெங்களூருவை அடிப்படையாகக் கொண்டு தொடங்கப்பட்ட வைஃபை டப்பா ( Wifi Dabba) இணை நிறுவனர் தான் சுபீந்த் ஷர்மா. இவரின் கருத்துப்படி தற்போதும் இந்தியாவில் உள்ள தரவு விலை நிர்ணயம் அதிகமாக உள்ளதாம். ஜியோவை அறிமுகப்படுத்திய பின்னரும் கூட அதே நிலைதான் என்கிறார் சுபீந்த் ஷர்மா.

ரூ.20/-க்கு 1 ஜிபி அளவிலான தரவு.!

ரூ.20/-க்கு 1 ஜிபி அளவிலான தரவு.!

மேலும் இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களால் இன்னும் மலிவான விலையில் சேவைகளை வழங்க முடியும் என்றும் அவர் நம்புகிறார். அதோடு நிறுத்திக்கொள்ளாமல் 13 மாத வயதுடைய அவரின் "வைஃபை டப்பா" வழியாக ஏற்கனவே 100எம்பி அளவிலான டேட்டவை மிக மலிவான விலையில், அதாவது வெறும் ரூ.2/-க்கு வழங்கிக்கொண்டிருக்கிறார். அதாவது 500எம்பி அளவிலான டேட்டாவானது ரூ.10 மற்றும் 1 ஜிபி அளவிலான தரவு ரூ.20/-க்கு வழங்குகிறார்.

ஜியோவை விட மிகவும் மலிவானதாகும்.!

ஜியோவை விட மிகவும் மலிவானதாகும்.!

வைஃபை டப்பா வழங்கும் அனைத்துத் திட்டங்களும் 24 மணிநேரம் என்றவொரு ஒரு சீரான செல்லுபடி காலத்தை கொண்டுள்ளது. இதில் சுவாரசியமான விடயம் என்னவென்றால் முகேஷ் அம்பானியின் கீழ் இயங்கும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் மலிவானதாகும். ஜியோ அதன் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை ரூ.52/-க்கு வழங்குகிறது.

தரவு வரம்பு மற்றும் செல்லுபடியைத் தேர்வு விருப்பம்.!

தரவு வரம்பு மற்றும் செல்லுபடியைத் தேர்வு விருப்பம்.!

ரூ.2/- முதல், மிக குறைந்த விலையில் சூப்பர் பாஸ்ட் டேட்டாவை வழங்கும் நோக்கம் கொண்டுள்ள இந்த வைஃபை டப்பா நிறுவனமானது அதன் வலைத்தளத்தின் வழியாக தேவைக்கேற்ப தரவு வரம்பு மற்றும் செல்லுபடியைத் தேர்வு செய்வதற்கான விருப்பத்தையும் அதன் பயனர்களுக்கு வழங்குகிறது.

ப்ரீபெயிட் டோக்கன் முறையில் டேட்டா.!

ப்ரீபெயிட் டோக்கன் முறையில் டேட்டா.!

இந்த வைஃபை டப்பா நிறுவனமானது பெங்களூரில் உள்ள உள்ளூர் பேக்கரி மற்றும் டீக்கடைகள் போன்ற சிறிய கடைகளின் வழியாக ப்ரீபெயிட் டோக்கன் முறையில் டேட்டாவை வழங்கி வருகிறது. இந்த டோக்கன்களைப் பயன்படுத்துவதற்கு, நீங்கள் எந்தப் பயன்பாட்டையும் உங்கள் தொலைபேசியில் பதிவிறக்கம் செய்யப வேண்டிய அவசியம் இல்லை.

ஒடிபி சரிபார்ப்பு.!

ஒடிபி சரிபார்ப்பு.!

உங்கள் மொபைல் எண்ணில் உள்ளீடுகளை நிகழ்த்தி டோக்கன் சரிபார்ப்பு நோக்கங்களுக்கான ஒடிபி-யை (OTP) நிரப்பினால் போதும் நீங்கள் வைஃபை டப்பா நிறுவனத்தின் வழியாக கிடைக்கும் இணையத்துடன் இணைந்துகொள்வீர்கள்.

50எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம்.!

50எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகம்.!

100 முதல் 200 மீட்டர் ஆரத்தில் சுமார் 50எம்பிபிஎஸ் அளவிலான இணைய வேகத்தை வழங்க முடியும் என்று வைஃபை டப்பா நிறுவனம் கூறுகிறது. ஏற்கனவே, இந்நிறுவனம் பெங்களூரு முழுவதும் சுமார் 350 ரவுட்டர்களை நிறுவியுள்ளது மற்றும் 1800-க்கும் மேற்பட்ட இணைப்பு கோரிக்கைகளை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வைஃபை டப்பா - டெலிகாம் புரட்சி.!

வைஃபை டப்பா - டெலிகாம் புரட்சி.!

ஜியோவின் வருகையால் இதர நிறுவனங்கள் மலிவு விலை திட்டங்களை அறிமுகம் செய்தது போல, வைஃபை டப்பாவின் வருகையானதும் மாபெரும் டெலிகாம் புரட்சியாக வெடித்தால் ஜியோவும் மலிவு விலை திட்டங்களை தொகுத்து வழங்கலாம். மேலும் இதுபோன்ற டெலிகாம் மற்றும் தொழில்நுட்ப செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தமிழ் கிஸ்பாட் உடன் இணைந்திருங்கள்.!

Best Mobiles in India

English summary
You can buy 1GB data at just Rs. 20 from this Bengaluru-based startup. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X