வோடாபோனின் 1500ஜிபி, அதாவது 1.5டிபி என்கிற "கனவு திட்டம்" அறிமுகம்.!
நாட்டின் பல பகுதிகளில், அதன் இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
வோடபோன் இந்தியா நிறுவனத்தின் யூ பிராட்பேண்ட் (YOU Broadband) ஆனது மிகவும் அமைதியாக ஒரு அதிரடியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

வெறும் 30 எம்பி, 100 எம்பி என்ற அளவிலான டேட்டா பயன்பாட்டை கொண்டிருந்த இந்திய பயனர்கள் - முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ அறிமுகத்திற்கு பின்னர் நாள் ஒன்றிற்கு 1ஜிபி அளவிலான டேட்டாவை நுகர தொடங்கின. இப்போது 1ஜிபி, 2.5ஜி தாண்டிய தினசரி பயன்பாட்டை தேடும் நிலைப்பாட்டில் அடுத்தது என்ன வென்று பார்த்தால்.? - 5ஜி வேகம் அல்லது டிபி (TB) அளவிலான டேட்டா தான்.!

இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்கள்
இந்தியாவில் 5ஜி வேகம் சார்ந்த பணிகள் மிக திவீரகமாக நடைபெறும் நிலைப்பாட்டில், வோடாபோனின் யூ பிராட்பேண்ட் ஆனது 250 எம்பிபிஎஸ் என்கிற பதிவிறக்க வேகத்தின் கீழ் நாட்டின் பல பகுதிகளில், அதன் இரண்டு புதிய பிராட்பேண்ட் திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது.

1500ஜிபி ஆகும், அதாவது 1.5டிபி
250 எம்பிபிஎஸ் மற்றும் 200 எம்பிபிஎஸ் என்கிற வேகத்தின்கீழ் வெளியாகியுள்ள இரு திட்டங்களும் 'டூயல் ஸ்பீட்' என்கிற பிரிவின் கீழ் அறிமுகமாகியுள்ளது. இந்த இரு திட்டங்களுமே மாதாந்திர வரம்பு கொண்டு வெளியாகிறது இருப்பினும் கவலை வேண்டாம். ஏனெனில் 250 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டத்தின் வரம்பு 1500ஜிபி ஆகும், அதாவது 1.5டிபி ஆகும்.

250 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டம்
கோயம்புத்தூர் பிராந்தியத்தில் தற்போது யூ பிராட்பேண்ட்டின் 250 எம்பிபிஎஸ் திட்டம் கிடைக்கிறது. மாதாந்திர திட்டமான இது ரூ.2,499/- என்கிற விலை மதிப்பை கொண்டுள்ளது,. இது ஒரு மாதத்திற்கு நம்பமுடியாத 1.5டிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

4 எம்பிபிஎஸ்
ஒருவேளை 1.5டிபி என்கிற முழு டேட்டா அளவையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால், அதன் பின்னர் 4 எம்பிபிஎஸ் என்கிற குறைக்க்கப்பட்ட வேகத்தின்கீழ் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்கலாம்.

200 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டம்
அதே கோயம்புத்தூர் பகுதியில் 200 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமும் கிடைக்கிறது. அந்த திட்டமானது. மாதாந்திர திட்டமான இது ரூ.1,999/- என்கிற விலை மதிப்பை கொண்டுள்ளது,. இது ஒரு மாதத்திற்கு நம்பமுடியாத 1.2டிபி அளவிலான டேட்டாவை வழங்குகிறது.

4 எம்பிபிஎஸ்
ஒருவேளை 1.2டிபி என்கிற முழு டேட்டா அளவையும் நீங்கள் பயன்படுத்தி விட்டால், அதன் பின்னர் 4 எம்பிபிஎஸ் என்கிற குறைக்க்கப்பட்ட வேகத்தின்கீழ் வரம்பற்ற டேட்டாவை அனுபவிக்கலாம்.

சென்னையில் கிடைக்குமா.?
கோயம்புத்தூரில் மட்டுமின்றி யூ பிராட்பேண்ட்டின் பல பிராந்தியங்களில் 200எம்பிபிஎஸ் திட்டம் அறிமுகமாகியுள்ளது. அதாவது அஹமதாபாத், பெங்களூரு, காக்கிநாடா, நவி மும்பை, போவாய், தானே, விஜயவாடா, ஔரங்காபாத், சென்னை, குர்கான், ஜெய்ப்பூர், மும்பை, நாசிக், நாவ்சரி, புனே, சூரத், வதோதரா , வாப்பி மற்றும் விஷாகாபத்னம் ஆகிய பகுதிகளில் கிடைக்கிறது.


பெங்களூரு போன்ற சில பகுதிகளில 500 ஜிபி
200 எம்பிபிஎஸ் வேகத்திலான திட்டமானது. வட்டத்திற்கு ஏற்ப மாறுபடும் டேட்டா நன்மையை கொண்டுள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது. எடுத்துக்காட்டிற்கு பெங்களூரு போன்ற சில பகுதிகளில 500 ஜிபி அளவிலான தரவு மட்டுமே கிடைக்க இதர பகுதிகளில் மாதாந்திர வரம்பானது 1200ஜிபி என்று உள்ளது.


Click it and Unblock the Notifications