Home
News

Jio 8 அடி பாய்ந்தா Airtel 16 அடி பாயுது.. சர்ப்ரைஸ் கொடுத்த ஏர்டெல்! இதை செக் பண்ணிட்டு நெட் யூஸ் பண்ணுங்க.!

Airtel முன்னதாகவே டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரூ, சென்னை, சிலிகுரி, வாரணாசி மற்றும் நாக்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வருகிறது. இந்த நிலையில் ஏர்டெல் 5ஜி சேவை கிடைக்கும் பகுதி விரிவாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

8 அடி பாய்ந்தால் 16 அடி பாயும் ஏர்டெல்

8 அடி பாய்ந்தால் 16 அடி பாயும் ஏர்டெல்

அதிக வாடிக்கையாளர்கள் உடன் ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவில் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமாக இருக்கிறது. இரண்டாவது இடத்தில் ஏர்டெல் இருக்கிறது. ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய இரண்டு நிறுவனங்களிடையே கடுமையான போட்டி நிகழ்ந்து வருகிறது. முன்னதாக வாடிக்கையாளர்களை இழந்த நிலையில் இருந்த ஏர்டெல் சமீப காலமாக அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. ஜியோவின் ஒவ்வொரு நடவடிக்கைக்கும் எதிர் நடவடிக்கை எடுத்து வருகிறது ஏர்டெல்.

நேற்று அறிவித்த ஜியோ

நேற்று அறிவித்த ஜியோ

அதன்படி சமீபத்தில் அறிமுகமான 5ஜி சேவையிலும் இந்த போட்டி தொடர்கிறது. ரிலையன்ஸ் ஜியோ தனது ஜியோ 5ஜி சேவையை கூடுதல் நகரங்களில் விரிவுப்படுத்துவதாக வியாழக்கிழமை அறிவித்தது. தற்போது மும்பை, டெல்லி, கொல்கத்தா, சென்னை, வாரணாசி, நாத்வாரா, பெங்களூரு மற்றும் ஐதராபாத் உள்ளிட்ட 8 நகரங்களில் ஜியோ 5ஜி கிடைக்கிறது.

இன்று அறிவித்த ஏர்டெல்

இன்று அறிவித்த ஏர்டெல்

இந்த நிலையில் பாரதி ஏர்டெல் தனது 5ஜி சேவையை கூடுதல் நகரங்களில் விரிவுப்படுத்தி உள்ளதாக இன்று அறிவித்திருக்கிறது. ஏர்டெல் முன்னதாகவே 8 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கியது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

விரிவு செய்யப்பட்ட பகுதி

விரிவு செய்யப்பட்ட பகுதி

ஏர்டெல் நிறுவனம் தனது 5ஜி சேவையை பானிபட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஏர்டெல் 5ஜி சேவையானது டெல்லி, மும்பை, ஐதராபாத், பெங்களூரு, சென்னை, சிலிகுரி, வாரணாசி மற்றும் நாக்பூர் உள்ளிட்ட 8 நகரங்களில் 5ஜி சேவையை வழங்கி வந்தது. இந்த நிலையில் இந்த 5ஜி சேவையானது தற்போது பானிபட்டிலும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. எனவே இப்போது பானிபட்டில் உள்ள ஏர்டெல் பயனர்கள் தங்களது 5ஜி மொபைலில் 5ஜி சேவையை பயன்படுத்தலாம்.

நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது?

நாடு முழுவதும் 5ஜி சேவை எப்போது?

நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஏர்டெல் 5ஜி சேவை எப்போது கிடைக்கும் என்ற தகவலை பார்க்கலாம். நாடு முழுவதும் 5ஜி சேவை 2023 டிசம்பருக்குள் அறிமுகமாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இலக்கு நிர்ணயித்ததை விட முன்னதாகவே ஏர்டெல் 5ஜி சேவையை அறிமுகம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதை ஏர்டெல் தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதி செய்தார்.

Airtel Vs Jio

Airtel Vs Jio

2023 மார்ச் இறுதிக்குள் ஏர்டெல் 5ஜி சேவை நாட்டின் அனைத்து மூலைகளிலும் சென்றடையும் என தலைமைச் செயல் அதிகாரி கோபால் விட்டல் உறுதிப்படுத்தினார். ஆனால் ரிலையன்ஸ் ஜியோ 5ஜி சேவை நாடு முழுவதும் டிசம்பர் 2023 இறுதிக்குள் அறிமுகம் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.

5G ரீசார்ஜ் திட்டம் விலை என்ன?

5G ரீசார்ஜ் திட்டம் விலை என்ன?

ஏர்டெல் 5ஜி சேவையை பயன்படுத்த புதிய சிம்கார்ட் எதுவும் தேவையில்லை. அதாவது பயனர்கள் தற்போதுள்ள 4ஜி சிம் மூலமாகவே 5ஜி அணுகலை பெறலாம். எந்தவொரு தொலைத்தொடர்பு நிறுவனங்களும் 5ஜி சேவையின் விலை குறித்து விவரங்களை வெளியிடவில்லை. தற்போதுள்ள 4ஜி ரீசார்ஜ் திட்டத்தில் 5ஜி சேவை இலவசமாக வழங்கப்படுகிறது. ரூ.239க்கு மேல் உள்ள ரீசார்ஜ் திட்டங்களை தேர்ந்தெடுத்தாலே 5ஜி இணைய வேகத்தை பெறலாம்.

5ஜி வேகம் எப்படி இருக்கும்?

5ஜி வேகம் எப்படி இருக்கும்?

ஏர்டெல் 5ஜி சேவையை பொறுத்தவரை சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், ஏர்டெல் பயனர்கள் 5ஜி சேவையை எந்தவித கூடுதல் கட்டணமும் செலுத்தலாம் அனுபவிக்கலாம். ஏர்டெல் 5ஜி சேவை 5ஜி பிளஸ் என அழைக்கப்படுகிறது. ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் குறித்த தகவலும் வெளியாகி இருக்கிறது. ஏர்டெல் 5ஜி சேவையின் வேகம் ஒவ்வொரு இடத்திலும் மாறுபடுகிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று. அதன்படி பயனர்கள் 700Mbpsக்கும் மேல் பதிவிறக்க வேகத்தை எட்ட முடிந்ததாக கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Yesterday Jio, Today Airtel: Now Airtel Expand its 5G Service in New Cities: Is 5G available in your city?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X