Home
News

பிராட்பேண்ட் கதையை முடிச்சுவிட்ட Elon Musk.. Starlink யூசர்களுக்கு இலவச ரூட்டர் அறிவிப்பு!

எலான் மஸ்க் (Elon Musk) தலைமையின் கீழ் இயங்கும் செயற்கைக்கோள் அடிப்படையிலான இண்டர்நெட் சர்வீஸ் ஆன ஸ்டார்லிங்க் (Starlink) சேவையின் கீழ் இலவச ரூட்டர் (Free Router) கிடைப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இங்கே "இலவசம்" என்பது ஹைலைட் அல்ல.. "யாருக்கெல்லாம் இலவசமாக கிடைக்கும்?"என்பது தான் ஹைலைட்!

உண்மையிலேயே ஸ்டார்லின்க் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு இலவச ரூட்டரை வழங்குகிறது தான். ஆனால் இது முற்றிலும் இலவசமாக கிடைக்கும் ரூட்டர் அல்ல, அடிப்படையில் இது ஒரு இலவச மேம்படுத்தல் (Free Upgrade) ஆகும். அதாவது இது புதிய வாடிக்கையாளர்களுக்கான இலவசம் அல்ல.

Elon Musk.. Starlink யூசர்களுக்கு இலவச ரூட்டர் அறிவிப்பு!

மாறாக இது ஸ்டார்லின்க் நிறுவனத்தின் சேவைகளை ஆரம்பகால பயனர்களாக இருந்த வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும். ஸ்டார்லிங்க் நிறுவனமானது கடந்த 2020 ஆம் ஆண்டிலேயே அதன் சேவைகளை வெளியிட்டு இருந்தது. அந்த நேரத்தில், அதாவது 2020 இல் சேவையை பெற்று, இன்னுமும் ஸ்டார்லின்க் பயனர்களாக இருக்கும் வாடிக்கையாளர்களுக்கு இப்போது இலவச ரூட்டர் அப்கிரேட் கிடைக்கிறது

ஜென் 1 ரூட்டருக்கான மென்பொருள் புதுப்பிப்புகளை அனுப்புவதை நிறுவனம் விரைவில் நிறுத்தவுள்ளதால், இந்த ரூட்டர் மேம்படுத்தல் வாடிக்கையாளர்களுக்கு மிகவு அவசியம் ஆகும். ஜென் 2 ரூட்டர்கள் 2021 இல் ஸ்பேஸ்எக்ஸால் ஒரு பிளாட் ஆன டிஷ் உடன் அறிமுகப்படுத்தப்பட்டன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது

நெட்வொர்க் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நீண்டகால நம்பகத்தன்மை ஆகியவற்றை மனதில் கொண்டு வாடிக்கையாளர்களுக்கு புதிய ஜெனரேஷன் ரூட்டர் அவசியமாக இருக்கும். பழைய ஜெனரேஷன் ரூட்டர்கள் திடீரென வேலை செய்வதை நிறுத்தாது என்பதையும் நினைவில் கொள்ளவும். இருப்பினும் அவைகளுக்கு புதிய மென்பொருள் புதுப்பிப்புகள் கிடைக்காது.

இதன் பொருள், இந்த ரூட்டர்களில் பழைய ஜெனரேஷன் செக்யூரிட்டி தான் இருக்கும், இது பாதிப்புகளுக்கு ஆளாகுவதை அதிகரிக்கும், மேலும் ஸ்டார்லிங்க் நெட்வொர்க் உருவாகும்போது இணக்கத்தன்மை குறைவதற்கான சாத்தியக்கூறுகளும் இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு எளிதாக மாறுவதை உறுதி செய்வதற்காக, நிறுவனம் இலவச ஸ்டார்லிங்க் ரூட்டர் மினியை வழங்குகிறது.

இதன் விலை சுமார் $40 அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்த புதிய ரூட்டரில் வைஃபை 6 மற்றும் டூயல்-பேண்ட் வைஃபைக்கான ஆதரவு உள்ளது, மேலும் இது பயனர்கள் பின்னர், கவரேஜை விரிவுபடுத்த கூடுதல் யூனிட்களை சேர்க்கவும் அனுமதிக்கிறது. இவை அனைத்தும் ஜென் 1 ரூட்டர் ஆதரிக்காத ஒன்று. இந்த தகவலை ஸ்டார்லிங்க் நிறுவனம் கடந்த மாதம் அதன் ஆதரவு பக்கத்தில் அமைதியாக வெளியிட்டது. இப்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக அறிவிக்கப்படுகிறது.

1 மாசத்துக்கு ரூ.8600 லாம் இல்லீங்க: இம்மாத தொடக்கத்தில் ஸ்டார்லிங்க் சேவைக்கான இந்திய விலை (Starlink India Price) நிர்ணயம் வெளியாகி பரபரப்பை கிளப்பி இருந்தது. ஆனால் அது ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளத்தில் ஏற்பட்ட "உள்ளமைவு கோளாறு" (configuration glitch) காரணமாக வெளிபட்ட "டம்மி" விலை என்று விளக்கம் அளிக்கப்பட்டது.

ஸ்டார்லிங்கின் இந்தியா வலைப்பக்கம் (Starlink India Website) நேரலைக்கு வந்ததும், அதன் கீழ் மாதாந்திர சந்தா விலை ரூ.8,600 மற்றும் புதிய பயனர்களுக்கு ரூ.34,000 மதிப்பிலான ஹார்ட்வேர் கிட் தேவைப்படும் என்று சுட்டிக்காட்டி இருந்ததும் தான் இந்த குழப்பத்திற்கு காரணம். பின்னர் "ஸ்டார்லிங்க் இந்தியா வலைத்தளம் நேரலையில் இல்லை, இந்தியாவில் வாடிக்கையாளர்களுக்கான சேவை விலை நிர்ணயம் இன்னும் அறிவிக்கப்படவில்லை, நாங்கள் ஆர்டர்களை எடுக்கவில்லை." என்று ஸ்டார்லிங்க் விளக்கம் அளித்தது.

மேலும் இந்தியாவில் தனது அதிவேக செயற்கைக்கோள் இணையத்தை (high-speed satellite internet) அறிமுகப்படுத்த ஸ்டார்லிங்க் உறுதிபூண்டுள்ளதாகவும், சேவை மற்றும் வலைத்தளம் இரண்டையும் செயல்படுத்த தேவையான இறுதி அரசாங்க ஒப்புதல்களை (final government approvals) பெறுவதற்கு தற்போது செயல்பட்டு வருவதாகவும் ஸ்டார்லிங்க் கூறியுள்ளது.

பிளக்-அண்ட்-ப்ளே நிறுவல், 99.9% இயக்க நேரம், வானிலை மீள்தன்மை மற்றும் தரவு வரம்புகள் இல்லாததற்கு பெயர் பெற்ற ஸ்டார்லிங்க், பாரம்பரிய பிராட்பேண்ட் நம்பகத்தன்மையற்றதாக இருக்கும் தொலைதூர மற்றும் சேவை குறைவாக உள்ள பகுதிகளில் உள்ள பயனர்களுக்கு ஒரு தீர்வாக தன்னை நிலைநிறுத்தி கொண்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Yes Elon Musk Starlink Offering Free Router But Not For New Users Its For Early Users
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X