Home
News

மஞ்ச பல்பு சரியா எரியலயோ.. அறிமுகமான வேகத்தில் யெல்லோ கலர் iPhone 14 மீது அபார தள்ளுபடி!

சில வாரங்களுக்கு முன் அறிமுகமான ஐபோன் 14 மாடலின் மஞ்சள் நிற வேரியண்ட்டின் (iPhone 14 Yellow) மீது மிகப்பெரிய தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதற்காக இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளதா? அல்லது இதுவொரு விற்பனை தந்திரமா? என்றெல்லாம் யோசித்து மண்டையை குழப்பிக்கொள்ள வேண்டாம்.

இப்போதைக்கு "எந்த கலர் வேரியண்ட் ஆக இருந்தால் (எப்படியும் பேக் கேஸ் போடத்தான் போகிறோம்) ஐபோன் 14 மீது நல்ல ஆஃபர் கிடைக்கிறதே.. அதுவே போதும்!" என்று எண்ணுவதே புத்திசாலித்தனம். ஒருவேளை இந்த ஆஃபருக்கு பின்னால் உள்ள உண்மையான காரணத்தை அறிந்துகொள்ள விரும்பினால்.. மறைப்பதற்கு ஒன்றுமில்லை!

அறிமுகமான வேகத்தில் யெல்லோ கலர் iPhone 14 மீது அபார தள்ளுபடி!

ஆப்பிள் (Apple) அறிமுகம் செய்த மஞ்சள் நிற ஐபோன் 14 மற்றும் ஐபோன் 14 பிளஸ் (iPhone 14 Plus) மாடல்களானது மிகவும் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது என்றே கூற வேண்டும். பல பயனர்கள் ஒரு ஐபோனில் இதைவிட ஒரு மோசமான கலர் ஆப்ஷன் தேர்வு செய்யப்பட்டதே என்று கழுவி கழுவி ஊற்றுகின்றனர்.

இருப்பினும், சிலர் இது மிகவும் தனித்துவமாக இருப்பதாக கூறுகிறார்கள். இந்த குழப்பத்திற்கு இடையே தான் ஐபோன் 14 யெல்லோ மீது அபார தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. பிரபல இ-காமர்ஸ் வலைத்தளமான பிளிப்கார்ட் (Flipkart) ஐபோன் 14 யெல்லோவை ரூ.12000 தள்ளுபடி விலையில் விற்பனை செய்கிறது.

அசல் விலை VS ஆஃபர் விலை: ஐபோன் 14 யெல்லோவின் அசல் விலை ரூ.79,900. ஆனால் தற்போது இது பிளிப்கார்ட் வழியாக ரூ.71,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. உங்களிடம் எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு (HDFC Credit or Debit Card) இருந்தால், கூடுதலாக ரூ.4,000 தள்ளுபடியும் கிடைக்கும். இப்படியாக மொத்தம் ரூ.12,000 தள்ளுபடி கிடைக்கும்.

ஒருவேளை நீங்கள் ஐபோன் 14 யெல்லோவிற்கு பதிலாக ஐபோன் 14 பிளஸ் யெல்லோவை (iPhone 14 Plus Yellow) வாங்க விரும்பினால்.. அது பிளிப்கார்ட் வழியாக ரூ.79,999 க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த மாடலின் மீது எச்டிஎஃப்சி வங்கியின் கிரெடிட் அல்லது டெபிட் கார்டு வழியாக கிடைக்கும் ரூ.4000 தள்ளுபடி மட்டுமே கிடைக்கும். பிளிப்கார்ட்டின் நேரடி தள்ளுபடி (Flipkart Discount) எதுவும் இல்லை!

ஐபோன் 14 முக்கிய அம்சங்கள்: ஒரு வருட உத்தரவாதத்துடன் வரும் ஐபோன் 14 மிகவும் சக்திவாய்ந்த ஏ15 பயோனிக் (A15 Bionic) சிப்செட் மூலம் இயக்கப்படுகிறது மற்றும் 12எம்பி டூயல் ரியர் கேமராவை பேக் செய்கிறது. மேலும் இது 6.1 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் இதனுள் சக்திவாய்ந்த ஸ்பீக்கர்களும் பொருத்தப்பட்டுள்ளது.

ஐபோன் 14 பிளஸ் முக்கிய அம்சங்கள்: ஐபோன் 14-ஐபோலவே இதுவும் ஏ15 பயோனிக் சிப்செட்டை பேக் செய்கிறது மற்றும் 12எம்பி + 12 எம்பி டூயல் ரியர் கேமரா செட்டப்பை கொண்டுள்ளது. இது 6.7 இன்ச் சூப்பர் ரெடினா எக்ஸ்டிஆர் ஓஎல்இடி டிஸ்ப்ளேவுடன் வருகிறது. கடைசியாக இது 4323mAh பேட்டரியை கொண்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Yellow Color iPhone 14 Gets Rs 12000 Discount in Flipkart
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X