அசுர வளர்ச்சி! நீல பறவையை வீழ்த்திய மஞ்ச பறவை: இந்திய செயலியை பார்த்து கண்ணீர் விடும் ட்விட்டர்!

|

இந்திய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மைக்ரோ பிளாக்கிங் செயலியான "கூ" தற்போது பிரேசிலில் போர்த்துகீசிய மொழி ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலி அறிமுகம் செய்யப்பட்ட 3 நாட்களுக்குள் 1 மில்லியன் பதிவிறக்கங்களை பெற்றிருக்கிறது. ட்விட்டருக்கு இணை மாற்றாக கூ பயன்பாடு வளர்ந்துக் கொண்டிருக்கிறது.

அசுர வளர்ச்சியில் கூ

அசுர வளர்ச்சியில் கூ

இந்தியாவில் பல மொழி ஆதரவு கொண்ட மைக்ரோ பிளாக்கிங் மற்றும் சமூகவலைதளமான "கூ" தற்போது பிரேசிலில் தொடங்கப்பட்டுள்ளது. போர்த்துகீசியத்திற்கான மொழி ஆதரவுடன் பிரேசிலில் இந்த ஆப் கிடைக்கிறது. இந்த ஆப் பிரேசிலிலி அறிமுகம் செய்யப்பட்ட 48 மணி நேரத்திற்குள் 1 மில்லியன் பயனர் பதிவிறக்கங்களை பெற்றிருக்கிறது. மேலும் இந்த ஆப் சுமார் 10 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளது. இந்த ஆப் தற்போது ஆண்ட்ராய்டு ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோர் ஆகிய இரண்டிலும் #1 இடத்தில் இருக்கிறது.

பிரேசிலில் கூ

பிரேசிலில் கூ

கடந்த 48 மணிநேரத்தில் பிரேசிலில் இருந்து 1 மில்லியனு்கும் அதிகமான பயனர்கள் கூ-வில் இணைந்துள்ளனர். இதுவரை கண்டிராத மிக உயர்ந்த வளர்ச்சியை பிரேசிலில் இந்த செயலி பெற்றுள்ளது. பிரேசிலில் இந்த பயன்பாடு அதன் தாய்மொழியான போர்த்துகீசியம் ஆதரவோடு கிடைக்கிறது. கூ பிரேசிலில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது.

மேக் இன் இந்தியா

மேக் இன் இந்தியா

"கூ"வின் இணை நிறுவனர் மயங்க் பிடவட்கா இதுகுறித்து கூறுகையில், தொழில்நுட்ப தயாரிப்பு உலகின் மேக் இன் இந்தியா, மேக் ஃபார் தி வேர்ல்ட் என்ற இயக்கத்தை தொடங்கியதில் பெருமிதம் கொள்கிறோம். பிரேசில் இந்தியாவைக் காதலிக்கச் செய்துள்ளோம். மொழி தடைகளால் பிளவுபட்டுள்ள உலகத்தை ஒன்றிணைக்கும் பணியை நாங்கள் நெருங்கி வருகிறோம் என குறிப்பிட்டார்.

அதிக ஃபாலோவர்களை பெற்ற கூ

அதிக ஃபாலோவர்களை பெற்ற கூ

ரோசானா ஹெர்மன், பாபு சந்தனா, கிளாடியா லெய்ட் மற்றும் செய்தி வெளியீடு சோக்வி உள்ளிட்ட பல்வேறு பிரேசிலிய பிரபலங்களும் இந்த "கூ" ஆப்பில் இணைந்துள்ளனர். பிரேசிலய பிரபலமான பெலிப் நெட்டோ, இந்த தளத்தில் இணைந்த இரண்டே நாட்களில் 450K ஃபாலோவர்களை தாண்டி உள்ளார். கூ செயலி பிரேசிலில் அசுர வளர்ச்சியில் வளர்ந்து வருகிறது.

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவின் நிலை என்ன?

இந்தியாவின் பெங்களூருவை தளமாகக் கொண்ட நிறுவனத்தின் மூலம் "கூ" உருவாக்கப்பட்டது. கன்னட மொழி ஆதரவுடன் தொடங்கப்பட்ட இந்த பயன்பாடு இந்தி, ஆங்கிலம், தமிழ், தெலுங்கு, அசாமிஸ், மராத்தி, பங்களா, குஜராத்தி, பஞ்சாபி மற்றும் ஹவுசா ஆகிய அனைத்து மொழிகளிலும் கிடைக்கிறது. வெளிநாடுகளில் ஆதரவு கிடைக்கும் இந்திய பயன்பாட்டுக்கு இந்தியர்கள் மத்தியில் ஆதரவு கிடைக்கவில்லை என்றால் அது வருத்தம் தான் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

2-வது இடத்தில் கூ

2-வது இடத்தில் கூ

பன்மொழி மைக்ரோ பிளாக்கிங் தளமாக இதை உலகளவில் பல நாடுகளில் கொண்டு சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. வெளியான தகவலின்படி, "கூ" விரைவில் அரபு, ஸ்பானிஷ், பிரஞ்ச், ஜெர்மன், கொரியன், ஜப்பானியம் மற்றும் பிற வெளிநாட்டு மொழிகளை ஆதரிக்கும் என கூறப்படுகிறது.

ட்விட்டரில் உள்ள அனைத்து குழப்பங்களுக்கும் மத்தியில் "கூ" ஆப் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. தற்போது கூ 2-வது பெரிய பல மொழி மைக்ரோ பிளாக்கிங் தளமாக மாறி இருக்கிறது.

ஆரம்பம் முதலே வளர்ச்சி தான்

ஆரம்பம் முதலே வளர்ச்சி தான்

"கூ" செயலி கடந்த மார்ச் 2020 ஆம் ஆண்டில் பதிவிறக்கம் செய்ய கிடைக்கத் தொடங்கியது. துவங்கிய 15- 16 மாதங்களில் ஒரு கோடி பதிவிறக்கங்களை கடந்தது. தொடக்கத்தில் இருந்து பெரிய வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது கூ.

இந்தியர்கள் உருவாக்கிய கூ

இந்தியர்கள் உருவாக்கிய கூ

டுவிட்டர் போன்று செயல்படும் Koo என்ற செயலி இந்தியாவில் மட்டுமின்றி பலபகுதிகளில் பிரபலமடைந்து வருகிறது. மேட் இன் இந்தியா தயாரிப்புகள் மற்றும் சேவைகளில் அதிக கவனம் செலுத்த வேண்டியதன் அவசியத்தை ஊக்குவிக்கத் தொடங்கியதிலிருந்து, ஏராளமான இந்திய பயன்பாடுகள் வெளவந்துள்ளன. அதன்படி வெளியான முக்கிய செயலியே கூ ஆகும். Koo செயலி அப்ரமேயா ராதாகிருஷ்ணா மற்றும் மாயங்க் பிடாவட்கா ஆகியோரால் உருவாக்கப்பட்டது.

Best Mobiles in India

English summary
yellow bird that beat the blue bird: Koo Records 1 Million Download in Brazil Within 3 Days

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X