'ஆடைகளை கழட்டி காட்டு' சீனியர் மாணவர்கள் ஆன்லைன் வழியில் ராகிங்..! இறுதியில் நடந்தது இதுதான்!

|

ராகிங் கலாச்சாரம் என்பது பல ஆண்டுகளாக இன்னும் மறைமுகமாக நடந்துகொண்டே தான் இருக்கிறது. பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரி வாழ்க்கையில் புதியதாக நுழையும் மாணவர்களை, சீனியர் மாணவர்கள் ராகிங் செய்வது இன்னும் சில கல்லூரிகளில் நடைபெற்றுத் தான் வருகிறது. ஆனால், இம்முறை யாரும் எதிர்பார்த்திடாத வகையில் ஆன்லைன் வழி ராகிங் நடந்தேறி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆன்லைன் வழியில் பாலியல் ரீதியான ராகிங்

ஆன்லைன் வழியில் பாலியல் ரீதியான ராகிங்

கொரோனா தொற்றுநோய் காரணமாகக் கல்லூரிகள் மூடப்பட்டு உள்ள இந்த காலத்திலும், ராகிங் நடந்துள்ளது என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விளையாட்டாக ஆரம்பிக்கப்படும் ராகிங் கூட ஒரு சில நேரங்களில், எல்லையை மீறி நடப்பதும் உண்டு.

ஆன்லைன் வழி பாடங்கள்

ஆன்லைன் வழி பாடங்கள்

அப்படி தான் இதுவும், சாதாரண ராகிங் என்று முதலில் நினைக்கப்பட்டது ஆனால், பாலியல் ரீதியான ராகிங் ஆன்லைன் வழியில் நடந்துள்ளதைத் தான் யாராலும் நம்ப முடியவில்லை. கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால், ஆன்லைன் வழியில் மட்டுமே பாடங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

சீனியர் மாணவர்களின் அட்ராசிட்டி

சீனியர் மாணவர்களின் அட்ராசிட்டி

கல்வி கறக்கப் பயன்படுத்தப்படும் ஆன்லைன் சேவையை, சீனியர் மாணவர்கள் ராக்கிங் செய்யப் பயன்படுத்தியுள்ளனர். இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. இணைய வழியில், பாலியல் ரீதியிலான ராகிங் செய்யப்பட்டுள்ளது. இது தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேஸ்புக், வாட்ஸ் அப் வீடியோ கால்

பேஸ்புக், வாட்ஸ் அப் வீடியோ கால்

பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலம் சீனியர் மாணவர்கள் சிலர், ஜூனியர் மாணவர்களுக்கு வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டு அவர்களை ராகிங் செய்துள்ளனர். ஆன்லைன் வீடியோ காலில் குரூப் கால் செய்து சீனியர் மாணவர்கள் 4 பேர் ஒன்றிணைந்து ஜூனியர் மாணவர்களை ராகிங் செய்துள்ளனர்.

உடைகளைக் கழட்டி காட்டுங்கள்!

உடைகளைக் கழட்டி காட்டுங்கள்!

ஒருகட்டத்தில் ஜூனியர் மாணவர்களின் உடைகளைக் கழட்டி உடலைக் காட்டுங்கள் என்றும் வற்புறுத்தியுள்ளனர். அத்துடன் மட்டும் நிறுத்திவிடாமல், மாணவர்களை நீலப்படத்தில் நடிப்பதில் போல் செய்ய சொல்லியும் வற்புறுத்தியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

உலகளவில் இதுவே முதல் முறை

உலகளவில் இதுவே முதல் முறை

ஆன்லைன் வழியில் ராகிங் நடந்ததற்குக் காரணமாக இருந்த சீனியர் மாணவர்களை விசாரணை செய்து அவர்களை இடைநீக்கமும் செய்துள்ளது என்று அதிகாரப்பூர்வமாகத் தெரிவித்துள்ளது. உலகளவில் ஆன்லைனில் ராகிங் நடந்திருப்பது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Yalpanam University Senior Students Ragging Juniors Through Online : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X