சென்னை ஐஐடியில் ஆய்வு மையம் அமைக்கும் யாஹூ!

Posted By: Staff
சென்னை ஐஐடியில் ஆய்வு மையம் அமைக்கும் யாஹூ!

யாஹூ நிறுவனம் புதிய க்ளவுடு கம்ப்யூட்டிங் ஆய்வு மற்றும் மேம்பாட்டு மையத்தினை ஐஐடி சென்னையில் இன்று துவங்குகிறது.

கூகுளுடன் சம அளவில் போட்டி போட யாஹு நிறுவனம் புதிய புதிய யுக்திகளை கையாண்டு வருகிறது. அந்த வகையில் இந்திய தொழில் நுட்ப கழகமான சென்னை ஐஐடியின் வளாகத்திற்குள்ளேயே, யாஹூ நிறுவனம் புதிய ஆய்வு மற்றும் மேம்பாட்டு கூடத்தினை அனைக்க உள்ளது.

இந்த புதிய யுக்தியினால் யாஹூ நிறுவனம் மட்டுமல்லாது சென்னை ஐஐடி-க்கும் பெரிய பயன்பாடு உள்ளது. தொழில் நுட்பம் சம்மந்தமாக படிக்கும் மாணவர்கள் சிறந்த வகையில் புதிய தொழில் நுட்பங்களையும், வசதிகளையும் உருவாக்குகின்றனர்.

இதனால் மாணவர்கள் உருவாக்கும் புதிய தொழில் நுட்பங்களை யாஹூ நிறுவனத்திற்கும் பயனளிக்கும். யாஹூவில் உருவாக்கப்படும் புதிய தொழில் நுட்ப முயற்சிகளை பற்றி மாணவர்களும் தெரிந்து கொள்ள இது சிறந்த சந்தர்பம் என்று தான் சொல்ல வேண்டும்.

இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இது ஐஐடி சென்னை மாணவர்களுக்கு ஒரு நேரடி பயிற்சி தான். க்ளவுடு கம்ப்யூட்டிங் பொருத்த வரையில் யாஹூ நிறுவனம் ஒரு முன்னோடி.

இப்போது இந்த க்ளவுடு மையத்தினை ஐஐடி சென்னை வளாகத்தில் அமைப்பதால் இன்னும் நிறைய மற்றும் புதிய முன்னேற்றங்களை காண முடியும்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot