யாஹூவில் தற்போது 80 கோடி பயனாளிகள்!!!

Written By:

உலக அளவில் பிரபலமான் இன்டர்நெட் கம்பெனிகளில் ஒன்றான யாஹூ நிறுவனம் தற்போது 80 கோடிக்கும் அதிகமான பயனாளிகளை கொண்டுள்ளதாக அந்நிறுவனத்தின் சிஈஓ வான மரிஸா மேயர் தெரிவித்தார்.

கடந்த 15 மாதங்களுக்கு முன்பு கூகுள் நிறுவனத்தில் இருந்து விலகி யாஹூ நிறுவனத்தில் சிஈஓவாக பதவி ஏற்றார் மரிஸா மேயர். இவர் பதவி ஏற்ற 15 மாதங்களில் யாஹூ நிறுவனத்தின் பயனாளிகளின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரிதுள்ளதாக அவர் தெரிவித்தார்.

யாஹூவில் தற்போது 80 கோடி பயனாளிகள்!!!

இந்த தகவல் சான் பிரான்ஸிஸ்கோவில் நடந்த யாஹூ நிறுவனத்தின் டெக்னாலஜி கான்பிரன்ஸில் தெரிவிக்கப்பட்டது. மரிஸா மேயரின் சிஈஓவாக பதவி ஏற்ற பிறகு யாஹூ நிறுவனம் வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்பதற்க்கு இதுவே உதாரணமாகும்.

இவர் யாஹூ நிறுவனத்தின் தலைவராக ஆன பிறகு இந்நிறுவனத்தின் ஸ்டாக் மார்கெட்டும் இரு மடங்ககாக உயர்ந்து வருவதாக ஊடங்கங்கள் தெரிவிக்கின்றன. 80 கோடி பயனாளிகள் என்பது யாஹூவின் டம்ப்ளர் வெப்சைட்டில் இருந்து வரும் டிராபிக்கை சேர்க்காமல் என்று மரிஸா மேயர் தெரிவித்தார்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot