எப்பா அது ஆப்பிள் ஏர்பாட் ஆப்பிள் பழமில்ல-எக்ஸ்ரேவில் நெஞ்சுக்குள் இருந்த ஏர்பாட்-தூக்கத்தில் விழுங்கிட்டாராம்

|

அமெரிக்காவை சேர்ந்த 38 வயதான ஒருவர் நெஞ்சு வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு எக்ஸ்ரே எடுத்து பார்த்ததில் உணவுக்குழாயில் ஏர்பாட் சிக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தூக்கத்தில் ஆப்பிள் ஏர்பாடை விழுங்கி இருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது.

38 வயதான பிராகட் கெய்தர்

மாசசூசெட்ஸ் வொர்செஸ்டரில் வசித்து வருபவர் பிராகட் கெய்தர். 38 வயதான இவர் கடந்த செவ்வாய்கிழமை தூங்கி எழுந்தவுடன் ஒரு கிளாஸ் தண்ணீர் குடித்துள்ளார். குடித்தவுடன் அசௌகரியமாக உணர்ந்து இருமலுடன் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. பின் அந்த வலியோடு அன்றாட பணிகளை மேற்கொண்டுள்ளார்.

இயர்பாடை காணவில்லை

இதற்கிடையில் பிராட் தனது இயர் பாட் ஒன்றை காணவில்லை என தொடர்ந்து தேடிக் கொண்டே இருந்துள்ளார். மார்பு வலி தொடர்ந்து இருந்த போதிலும் பிராட் தனது அன்றாட வேலையை செய்து கொண்டே இருந்தார். அதுமட்டுமின்றி இயர்பாடை காணவில்லை என தேடிக்கொண்டிருந்த போது, ஆமா அத விழுங்கியிருப்பிங்க என பிராட் குடும்பத்தில் நகைச்சுவையோடு கிண்டல் செய்தனர். அதற்கு பிராட் புன்னகையுடன் சென்றுள்ளார்.

உணவுக்குழாயில் இருந்த இயர்பாட்

உணவுக்குழாயில் இருந்த இயர்பாட்

ஆனால் தொடர்ந்து பிராடுக்கு தொடர்ந்து மார்பு வலி அதிகரித்துள்ளது. இதையடுத்து பிராட் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு மருத்துவர்கள் பிராடுக்கு எக்ஸ்ரே செய்து பார்த்துள்ளனர். அந்த எக்ஸ்ரேயில் பிராடின் உணவுக்குழாயில் ஒரு இயர்பட் இருப்பதை கண்டு திகைத்து போகியுள்ளனர்.

காதில் ஹெட்செட், தொடர்ச்சியாக 4 மணிநேரம் செல்போனில் கேம்: சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!காதில் ஹெட்செட், தொடர்ச்சியாக 4 மணிநேரம் செல்போனில் கேம்: சிறுவனுக்கு நேர்ந்த விபரீதம்!

உணவு சாப்பிடும்போது விழுங்கியிருக்கலாம்

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட முந்தைய நாள் அவரது மனைவி பிறந்தநாள் என்பதால் அதிக உணவை சாப்பிட்டிருக்கலாம் அப்போது இந்த ஏர்பாடை விழுங்கியிருக்கலாம் என மருத்துவர்கள் யூகித்தனர். ஆனால் இதுகுறித்து மேலும் பிராடுடன் விசாரித்துள்ளனர்.

இரண்டு நாளாக ஏர்பட் காணவில்லை

அப்போது இரண்டு நாளாக ஏர்பட் காணவில்லை என்பது தெரியவந்துள்ளது. அவர் தூங்கிக் கொண்டிருந்தபோது பிராட் காதுகளில் இருந்த இயர்பட்டை கலட்டாமல் இருந்திருக்கலாம் எனவும் அப்போது தூக்கத்திலேயே ஏர்பட் விழுந்திருக்கலாம் எனவும் அப்போது அதை அவர் தெரியாமல் விழுங்கியிருக்கலாம் எனவும் தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார்

இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தாலும் பிராட்டின் உணவுக்குழாயிலேயே இயர்பட் சிக்கியிருந்ததால் அந்த நபர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இதை அகற்ற மருத்துவருக்கு சிறிது நேரம் எடுத்துக் கொண்டது.

சரியான நேரத்தில் அகற்றப்பட்ட ஏர்பாட்

ஏர்பட் பிராட் உடலில் அதிக சேதத்தை ஏற்படுத்தாமல் உணவுக்குழாயிலேயே சிக்கி இருந்துள்ளது. இயர்பட் எடுக்க சிறிது நேரம் தாமதப்படுத்தி இருந்தாலும் அது வயிற்றுக்குள் சென்றிருக்கலாம் எனவும் அது நுரையீரலை சேதப்படுத்த வாய்ப்பிருக்கிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது சரியான நேரத்தில் அகற்றப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

File Images

Source: timesnow.com

Best Mobiles in India

English summary
Xray Revealed Man Swallowed Airpod While Sleeping in US

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X