ரூ.12,999க்கு சோலோ ப்ளாக் வெளியானது..

By Meganathan
|

சோலோ நிறுவனம் ப்ளாக் பிரான்டில் முதல் ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது. சோலோ ப்ளாக் என்ற இந்த ஸ்மார்ட்போன் ரூ.12,999க்கு கிடைக்கும் என்றும் இதன் விற்பனை இம்மாதம் 13 ஆம் தேதி முதல் ப்ளிப்கார்ட் தளத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூ.12,999க்கு சோலோ ப்ளாக் வெளியானது..

சோலோ வாடிக்கையாளர்கள் இந்த ஸ்மார்ட்போனை 12 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 8 மணி வரை வாங்க முடியும், ஆனால் இவ்வாறு செய்ய பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். இந்நிருவனம் வோடாஃபோன் நிறுவனத்துடன் இணைந்து சிம் கார்டு மற்றும் இரு மாத வேலடிட்டியுடன் 1ஜிபி டேட்டா இலவசமாக வழங்குகின்றது. வாடிக்கையாளர்கள் இந்த கருவியை இந்தியாவில் இருக்கும் வோடாஃபோன் நிலையங்களிலும் வாங்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டூயல் சிம் கொண்டிருக்கும் சோலோ ப்ளாக் ஹைவ் அட்லஸ் யூசர் இன்டர்ஃபேஸ் கொண்டு ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் மூலம் இயங்குகின்றது. 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஐபிஎஸ் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 கொண்டு பாதுகாக்கப்படுவதோடு பவர் கீ நோட்டிபிகேஷன் விளக்காகவும் பயன்படுகின்றது.

ரூ.12,999க்கு சோலோ ப்ளாக் வெளியானது..

இந்த கருப்பு கருவி 64-பிட் ஸ்னாப்டிராகன் 615 எஸ்ஓசி, நான்கு கார்டெக்ஸ் ஏ53 கோர் 1.0 ஜிகாஹெர்ட்ஸ், நான்கு கார்டெக்ஸ் ஏ53 1.5 ஜிகாஹெர்ட்ஸ், அட்ரினோ 450 ஜிபியு மற்றும் 2ஜிபி ரேம், 16 ஜிபி இன்டர்னல் மெமரியும், கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 13 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளதோடு 4ஜி எல்டிஈ கனெக்டிவிட்டி, மைக்ரோ யுஎஸ்பி வி2.0, ஏ-ஜிபிஎஸ், ப்ளூடூத் மற்றும் வை-பை போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

Read more about:
English summary
Xolo has launched its first smartphone under its premium 'Black' brand. Called the Xolo Black, the smartphone will be priced at Rs. 12,999 and will go on sale on Flipkart on Monday.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X