Home
News

மலிவு விலையில் அசத்தல் ஸ்மார்ட்போன், இந்திய நிறுவனம் அறிமுகம்!

இந்திய ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மலிவு விலையில் 4ஜி ஆதரவு கொண்ட கருவி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தக் கருவியில் ஜியோ 4ஜி சேவை சப்போர்ட் வழங்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

By Meganathan

இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான சோலோ, Era 1X என்ற கருவியினை கடந்த மாதம் வெளியிட்டதைத் தொடர்ந்து மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்துள்ளது. 4G VoLTE தொழில்நுட்பம் சப்போர்ட் கொண்டிருப்பதால் சோலோ Era 2 கருவியில் ரிலையன்ஸ் ஜியோ நெட்வர்க் சப்போர்ட் கொண்டுள்ளது. சோலோ நிறுவனத்தின் புதிய கருவியானது ஸ்னாப்டீல் தளத்தில் மட்டும் பிரத்தியேகமாக விற்பனை செய்யப்படுகின்றது.

மலிவு விலையில் அசத்தல் ஸ்மார்ட்போன், இந்திய நிறுவனம் அறிமுகம்!

சோலோ Era 2 கருவியானது ஃபிளாஷ் முறையில் விற்பனை செய்யப்பட இருக்கின்றது. இதற்கான முன்பதிவுகள் ஏற்கனவே துவங்கி விட்டது. ஃபிளாஷ் விற்பனை அக்டோபர் 27 ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. டூயல் சிம் கார்டு கொண்ட இந்தக் கருவி ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மல்லோ இயங்குதளம் கொண்டு இயங்குகின்றது.

மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை 5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட் கோர் பிராசஸர் 1ஜிபி DDR3 ரேம் கொண்டுள்ளது. மெமரியை பொருத்த வரை 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

கேமராவை பொருத்த வரை 5 எம்பி பிரைமரி கேமரா, 4P Largan லென்ஸ், f/2.0 அப்ரேச்சர், 1.4 மைக்ரான் பிக்ஸல் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் 5 எம்பி முன்பக்க கேமரா எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. மேலும் லைவ் ஃபோட்டோஸ், பியூட்டி மோட், பர்ஸ்ட் மோட், டைம்-லேப்ஸ் மற்றும் ஸ்லோ மோஷன் போன்ற அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளது.

புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

மலிவு விலையில் அசத்தல் ஸ்மார்ட்போன், இந்திய நிறுவனம் அறிமுகம்!

சோலோ Era 2 கருவியில் 2350 எம்ஏஎச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 4ஜி VoLTE, ப்ளூடூத் 4.0, மற்றும் வை-பை வழங்கப்பட்டுள்ளது. 4ஜி அன்லிமிட்டெட் டேட்டா வழங்கும் ஜியோ 4ஜி பிரீவியூ சலுகை மற்றும் ஆடியோ நோட், ஸ்மார்ட் ஸ்கிரீன்ஷாட், ஸ்மார்ட் அவேக், அசிஸ்டண்ட் காஸ்ட் ஸ்கிரீன், எல்இடி ஃபிளாஷ், ஃபிளிப் டூ மியூட், குவிக் கேமரா போன்ற கூடுதல் அம்சங்களும் வழங்கப்பட்டுள்ளன.

கேமராவினை வேகமாக இயக்க ஹோம் பட்டனை இரு முறை கிளிக் செய்தால் போதுமானது. இத்தனை அம்சங்கள் கொண்டிருக்கும் சோலோ Era 2 கருவியானது இந்திய சந்தையில் ரூ.4,499 விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றது.

புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

Best Mobiles in India

English summary
Xolo Era 2 With Reliance Jio Support, Launched in india
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X