Xolo நிறுவனத்தின் புதிய மாடல் Era 1X புரோ ரூ.5,888க்கு அறிமுகம்
செல்பி ஸ்பெஷல் மாடல் Era 1X புரோ ஸ்மார்ட்போனில் LED பிளாஷ் உடன் கூடிய 5MP செல்பி கேமிரா உள்ளது
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் Xolo நிறுவனம் Era 1X என்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தது என்பது அனைவரும் அறிந்ததே. இந்த மாடலின் வெற்றியை அடுத்து Xolo நிறுவனம் தற்போது 'Era 1X புரோ' என்ற புதிய மாடலை அறிமுகம் செய்துள்ளது.

சமீபகாலமாக உயர் ரக செல்பி கேமிராவுடன் மொபைல் போன்கள் அறிமுகமாவது அதிகமகி வரும் நிலையில் இந்த மொபைல் போனும் அந்த வகையை சேர்ந்ததே. Era 1X புரோ என்ற இந்த புதிய மாடலில் LED பிளாஷ் உடன் கூடிய 5MP செல்பி கேமிரா உள்ளது. மேலும் இந்த மாடலில் உள்ள கூடுதல் சிறப்பு என்னவெனில் இந்த போன் 4G VoLTE சப்போர்ட் செய்யும் மொபைல் போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த மொபைல் போன் ஆண்ட்ராய்ட் மார்ஷல்லோ ஓஎஸ் வகையை சேர்ந்ஹது
Era 1X புரோ மற்ற அம்சங்கள் குறித்து பார்த்தோம் என்றால் இந்த போனில் 1.5GHz குவாட்கோர் பிராஸசர்ஃஐ கொண்டது. மேலும் 2GB ரேம் மற்றும் 16GB இன்னர் ஸ்டோரேஜ் மற்றும் 32 GB வரை மெமரியை அதிகப்படுத்தும் வகையில் மைக்ரோ எஸ்டி கார்ட் வசதியும் இதில் உண்டு. இந்த Era 1X புரோ ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளே 5 இன்ச் HD 720P வகையை கொண்டது
இந்த ஸ்மார்ட்போனில் 5MP செல்பி கேமிரா உள்ளது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இந்த போனில் 8MP பின்பக்க கேமிராவும் LED பிளாஷ் வசதியுடன் உள்ளது. பின்கேமிராவில் பல புதிய ஆச்சரியத்தக்க வசதிகள் உள்ளது. குறிப்பாக பர்ஸ்ட் மோட், பியூட்டி மோட், டைம் லேப்ஸ் வீடியோ, லைவ் போட்டோக்கள், ஆடியோ நோட் மற்றும் ஸ்லோ மோஷன் வீடியோ வசதிகள் உண்டு. மேலும் இந்த போனி 2500mAh பேட்டரியும் உள்ளதால் சார்ஜ் நிற்பது குறித்த கவலை இல்லை
Era 1X புரோ ஸ்மார்ட்போன் விலை குறித்து பார்த்தோம் என்றால் இவ்வளவு வசதிகள் கொண்ட இந்த போனின் விலை ரூ.5888 மட்டுமே. கருப்பு மற்றும் கோல்ட் என இரண்டு நிறங்களில் வெளியாகியுள்ள இந்த மாடல் ஸ்னாப்டீல் ஆன்லைன் ரீடெய்லர் மூலமே கிடைக்கும்
மேலும் புதிய சலுகையாக இந்த போனை வரும் 31ஆம் தேதிக்குள் வாங்கினால் 365 நாட்கள் டிஸ்ப்ளே ரீபிளேஸ்மெண்ட் வசதி தரப்படுகிறது. இந்த 365 நாட்களில் டிஸ்ப்ளேவில் ஏதாவது பிரச்சனை ஏற்பட்டால் ஒருமுறை இலவசமாக ட்ஸ்ப்ளேவை மாற்றி கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications