ஆண்ட்ராய்டு லாலிபாப் கொண்ட ஸ்மார்ட்போன் ரூ.7,999 தான்
இந்திய ஸ்மார்ட்போன் நிறுவனமான சோலோ, பட்ஜெட் விலையில் புதிய ஸ்மார்ட்போன் ஒன்றை வெளியிட்டுள்ளது. கருப்பு, வெள்ளை, மற்றும் தங்க நிறங்களில் கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போன் 6.9 எம்எம் தட்டையாக இருக்கின்றது.
பயனுள்ள ஜிமெயில் சேவைகள் - இதெல்லாம் உங்களுக்கு தெரியுமா

புதிய சோலோ க்யூப் 5.0 இந்தியாவில் ரூ.7,999க்கு கிடைக்கின்றது. 5 இன்ச் ஐபிஎஸ் டிஸ்ப்ளே 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 1ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் வாங்க சிறந்த 10 பவர் பேங்க்ஸ்..!
ஆண்ட்ராய்டு 5.0 லாலிபாப் கொண்டு இயங்கும் சோலோ க்யூப் 5.0, 8 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் கொண்டிருக்கின்றது. கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா, 2 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டிருப்பதோடு ஹெச்டி வீடியோ பதிவு செய்யும் வசதியும் பல கேமரா அம்சங்களும் வழங்கப்பட்டிருக்கின்றது.
விஜய் ரசிகர்களுக்கு நிச்சயம் இந்த கேம் பிடிக்கும்.!

இதோடு டூயல் சிம் ஸ்லாட் கொண்டிருக்கும் சோலோ க்யூப் 5.0, 3ஜி, ஜிபிஎஸ்>ஏஜிபிஎஸ், மைக்ரோ யுஎஸ்பி 2.0 போர்ட், ப்ளூடூத் 4.0, வை-பை, போன்ற கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் 2100 எம்ஏஎச் பேட்டரியும் வழங்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








