இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சோலோ க்ரோம்புக்

Written By:

அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சோலோ க்ரோம்புக் இந்தியாவில் விற்பனைக்கு வந்தது. கூகுள் க்ரோம் இயங்குதளம் மூலம் இயங்கும் இந்த க்ரோம்புக் இந்தியாவில் விலை ரூ.12,999, என நிர்ணயக்கப்பட்டு தற்சமயம் ரூ.12,480 என சலுகை விலையில் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் விற்பனைக்கு வந்தது சோலோ க்ரோம்புக்

சோலோ க்ரோம்புக் 11.6 இன்ச் டிஎப்டி டிஸ்ப்ளே 1366*768 ரெசல்யூஷன் கொண்டிருக்கின்றது. மேலும் 1.8 ஜிகாஹெர்ட்ஸ் கார்டெக்ஸ் ஏ17 ராக்சிப் குவாட்கோர் பிராசஸர் மற்றும் 2ஜிபி டிடிஆர்3 ரேம் வழங்கப்பட்டுள்ளது.

மெமரியை பொருத்த வரை 16 ஜிபி இன்டர்னல் மெமரியும் கூடுதலாக மெமரி கார்டு மூலம் நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொருத்த வரை 2 யுஎஸ்பி 2.0 போர்ட், ஹெச்டிஎம்ஐ போர்ட் மற்றும் ப்ளூடூத் 4.0 கொண்டிருப்பதோடு 4200 எம்ஏஎஹ் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகின்றது. இதோடு 1 எம்பி வெப் கேமராவும் வழங்கப்பட்டுள்ளது.

 

Read more about:
English summary
Xolo Chromebook which is powered by Google’s Chrome OS is now available for sale on Snapdeal for Rs 12,999.
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot