சியோமி ஜேஸன் தான் சியோமி மி 6எக்ஸ் கருவியா?
சியோமி ஜேஸன்: 5.1 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே.!
சியோமி ஜேஸன் தான் சியோமி மி 6எக்ஸ் ஆக இருக்கலாம் என சில அறிக்கைகள் தெரிவிக்கின்றன, மேலும் சியோமி ஜேஸன் என்று மாடல் இனிவரும் மாதங்களில் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் சில வலைதளத்தில் சியோமி ஜேஸன் பற்றிய முக்கிய குறிப்புகள் வெளியாகி உள்ளது.

சியோமி ஜேஸன் விலை பொருத்தமாட்டில் சுமார் ரூ .18,904 என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவற்றுடன் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் இதில் இடம்பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சியோமி ஜேஸன் டிஸ்பிளே பொருத்தமாட்டில் 5.1 அங்குல முழு எச்டி அளவு டிஸ்பிளே. (1920-1080) வீடியோ பிக்சல் கொண்டவையாக உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் ரியர் கேமரா 12 மெகா பிக்சல் கொண்டவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்புற கேமரா 4மெகா பிக்சல் கொண்டுள்ளது.
இந்தக்கருவி 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 64 ஜிபி வரை மெமரி கொடுக்கப்பட்டுள்ளது, 128 ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு இருக்கிறது எனக் கூறப்படுகிறது.
இந்த ஸ்மார்ட்போன் பொருத்தமாட்டில் அட்ரீனோ 512ஜிபியு மற்றும் ஸ்னாப்டிராகன் 660 எஸ்ஒசிஇஆண்ட்ராய்டு7.1.1 மார்ஷ்மெல்லோ மூலம் இவை இயக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மற்ற மொபைல் மாடல்களில் இடம்பெற்றுள்ள இணைப்பு ஆதரவுகள் இதிலும் இடம்பெற்றுள்ளன. அவை வைஃபை802.11, ப்ளுடூத் வி4.1, ஜிபிஎஸ், யுஎஸ்பி-2.0, ஆடியோஜேக் 3.5எம்எம் போன்றவை இதில் இடம்பெற்றுள்ளன. இதன் பேட்டரி பொருத்தவரை 5000எம்ஏஎச் பேட்டரி பாஸ்ட் சார்ஜ் ஆதரவு கொண்ட போன் எனக் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications