Home
News

ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கிமீ வரை இயங்கும் சியோமி ஸ்மார்ட் சைக்கிள் அறிமுகம்: விலை?

1400எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

சியோமி நிறுவனம் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப், ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல்வேறு சாதனங்களை அறிமுகம் செய்ததை தொடர்ந்து தற்சமயம் எலக்ட்ரிக் சைக்கிள் (himo t1) ஒன்றை சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் சைக்கிள்
அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளது.

 சியோமி ஸ்மார்ட் சைக்கிள் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

குறிப்பாக சியோமி himo t1 ஸ்மார்ட் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால், 120 கிமீ வரையில் இது தொய்வில்லாமல் இயங்கும் என்று அந்நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

 விலை:

விலை:

சியோமி அறிமுகம் செய்த ஸ்மார்ட் சைக்கிளின் ஆரம்ப விலை (இந்திய மதிப்பில்) ரூ.31,183-ஆக உள்ளது. மேலும் இந்த ஸ்மார்ட் சைக்கிள் அதிகளவு விற்பனை செய்யப்படும் என அந்நிறுவனம் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த சைக்கிள் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சியோமி

சியோமி

சியோமி நிறுவனம் இதுவரை ஸ்மார்ட் டிவி, மி டிவி, வைஃபை, ஸ்மார்ட் வாட்ச்,ஸ்மார்ட் ஷூ, ஸ்பீக்கர்கள், லேப்டாக்,போன்ற சாதனங்களை தான் அறிமுகம் செய்து வந்தது, ஆனால் இப்போது முதல்முறையாக ஸ்மார்ட் சைக்கிளை
அறிமுகம் செய்து சாதனைப் படைத்துள்ளது.

பேட்டரி:

பேட்டரி:

பேட்டரியில் இயங்கும் இந்த சியோமி ஸ்மார்ட் சைக்கிள் ஒரு முறை சார்ஜ் செய்தால் போதும், 120 கிமீ தொலைவு வரையில் தொய்வில்லாமல் இயங்கும் எனவும்,பின்பு 1400எம்ஏஎச் பேட்டரி இதில் பொருத்தப்பட்டுள்ளது எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

பின்புற சக்கரத்தில்..

பின்புற சக்கரத்தில்..

மேலும் இந்த சைக்கிளின் முன்பக்கத்தில் Suspension Fork பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. பின்பு
இந்த ஸ்மார்ட் சைக்கிள் பின்புற சக்கரத்தில் Dual coilover Supspension வசதியும் உள்ளது
என்பது குறிப்பிடத்தக்கது.

53 கிலோ எடை

53 கிலோ எடை

மேலும் பைக்கில் உள்ளது போன்று ஹைட்ராலிக் டிஸ்க் பிரேக், இரவில் பயனம் மேற்கொள்வதற்கு ஹெட்லைட் வசதிகளும் உள்ளது. பின்பு சார்ஜ் போட மறந்தால் கூட பெடல் வைத்து ஈசியாக சைக்கpளை இயக்க முடியும். குறிப்பாக 53 கிலோ எடை, சாம்பல், வெள்ளை, சிவப்பு போன்ற நிறங்களில் இந்த சியோமி ஸ்மார்ட் சைக்கிள்
வெளிவந்துள்ளது.

Best Mobiles in India

English summary
xiaomis-himo-t1-electric-bicycle-launched-in-china-check-here-for-india-release-price-specs-and-features: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X