Home
News

இனி இதான் Smart TV.. மாஸ் காட்டும் Xiaomi QLED TV.. கம்மி விலையில் 43, 55, 65 இன்ச் மாடலா? எப்போது அறிமுகம்?

சியோமி (Xiaomi) நிறுவனம் இந்தியாவில் புதிதாக புதிய X சீரிஸ் ஸ்மார்ட் டிவி மாடலக்ளை இன்னும் சில தினங்களில் அறிமுகம் செய்யவுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி வரிசையில் மூன்று டிஸ்பிளே அளவு மாடல்களை இந்திய சந்தை எதிர்பார்க்கிறது. இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி மாடல்களை நிறுவனம் சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi X Pro QLED TV) என்ற பெயருடன் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புதிய ஸ்மார்ட் டிவியை சியோமி எப்போது அறிமுகம் செய்கிறது? இதன் விற்பனை எப்போதென்ற விபரங்கள் இங்கே.

சியோமி வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ தகவலின் படி, சியோமி நிறுவனத்தின் அட்டகாசமான QLED ஸ்மார்ட் டிவி மாடல்கள் வரும் ஆகஸ்ட் 27, 2024 ஆம் தேதி இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi X Pro QLED TV) என்ற பெயருடன் இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரவுள்ளது. இது நிறுவனத்தின் எம்ஐ கியூஎல்இடி டிவி 55" இன்ச் மாடலின் அறிமுகத்தை தொடர்ந்து நடக்கிறது.

இனி இதான் Smart TV.. மாஸ் காட்டும் Xiaomi QLED TV.. கம்மி விலையில் TV

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi X Pro QLED TV):

அதேபோல், இந்த சாதனம் 2021 ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட எம்ஐ கியூஎல்இடி டிவி 75" இன்ச் (Mi QLED TV 75″ model in 2021) மாடலிற்கு பிறகு இந்தியாவிற்குள் நுழைகிறது என்று கூறப்பட்டுள்ளது. இறுதியாக, சியோமி நிறுவனம் அதன் எக்ஸ் சீரிஸ் வரிசையில் சியோமி எக்ஸ் ப்ரோ ஸ்மார்ட் டிவி மாடல்களை 40" இன்ச், 50" இன்ச் மற்றும் 55" இன்ச் மாடல்களில் அறிமுகம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஸ்மார்ட் டிவிகாலை நிறுவனம் 4K எச்டிஆர் (HDR) தர டிஸ்பிளேவுடன் வழங்கியது. இந்த ஸ்மார்ட் டிவியை சியோமி நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 32,999 என்ற விலை வரம்பு முதல் விற்பனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ஸ்மார்ட் டிவி சந்தையில் QLED டிவிக்கு மவுசு அதிகரித்துள்ளதால், நிறுவனம் அதன் எக்ஸ் சீரிஸ் வரிசையிலும் மூன்று டிஸ்பிளே அளவு மாடலக்ளை அறிமுகம் செய்யவுள்ளது.

ஆகஸ்ட் 27 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படவிருக்கும் புதிய சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi X Pro QLED TV) மாடலின் கீழ் நிறுவனம் 43" இன்ச் மாடல், 55" இன்ச் மாடல் மற்றும் 65" இன்ச் மாடல் கொண்ட QLED ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்யுமென்று கூறப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட் டிவி மாடல்கள் அனைத்தும், ஆல் ஸ்கிரீன் டிஸைனுடன் மிகமிக மெல்லிய பேசல்களை கொண்டிருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி எதிர்பார்க்கப்படும் விலை என்ன? (Xiaomi X Pro QLED TV Expecting Price):

சியோமி எக்ஸ் ப்ரோ கியூஎல்இடி டிவி (Xiaomi X Pro QLED TV) ஸ்மார்ட் டிவி மாடல்கள் மினிமலிஸ்ட் வடிவமைப்புடன் சிம்பிள் மற்றும் எலைட் தோற்றத்தில் வெளிவரும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் சினிமாட்டிக் ஆடியோ அனுபவத்தை பயனர்கள் ரசிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. இது 32GB ஸ்டோரேஜ் உடன் Google TV OS மற்றும் சியோமி பேட்ச்வால் அம்சத்துடன் வெளிவரும். இதன் விற்பனை பிளிப்கார்ட் மற்றும் சியோமி தளம் வழியாக அடுத்த வாரம் நடைபெறும்.

புதிதாக ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணம் உங்களுக்கு இருந்தால், ஒரு மூன்று அல்லது 4 நாட்கள் பொருந்திருந்த, இந்த புதிய Xiaomi X Pro QLED TV சாதனங்கள் அறிமுகம் செய்யப்பட்ட பிறகு, இதன் அம்சம் மற்றும் விலை விபரங்களை பார்த்துவிட்டு புதிய டிவியை உங்கள் விருப்பத்திற்கேற்ப ஆர்டர் செய்துகொள்ளுங்கள். இந்த QLED டிவிகளில் விலை ரூ. 35,999 முதல் துவங்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi X Pro QLED TV 43 Inch 55 Inch 65 Inch Launching In India August 27 2024 Expecting Price Details
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X