இனி காற்றிலேயே சார்ஜ் செய்யலாம்: சியோமியின் 'Mi Air Charger'.. வேறலெவல் பியூச்சர் தொழில்நுட்பம்..

|

வயர்லெஸ் டாக் அல்லது வயர்லெஸ் சார்ஜர் ஸ்டாண்ட் எதுவும் இல்லாமல் வயர்லெஸ் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய 'மி ஏர் சார்ஜ்' (Mi Air Charger) என்ற புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் இப்போது அறிமுகம் செய்துள்ளது. Mi Air Charger என்ற பெயருக்கு ஏற்றார் போல, காற்றில் கரண்ட் அனுப்பி ஸ்மார்ட்போன்களை சார்ஜ் செய்வது போன்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை சியோமி நிறுவனம் உருவாக்கியுள்ளது.

ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் முறை

ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் முறை

ரிமோட் வயர்லெஸ் சார்ஜிங் முறையில் பல சாதனங்களை சார்ஜ் செய்யக்கூடிய ஒரு வகையான புதிய சார்ஜிங் தொழில்நுட்பத்தை வெளியிட சியோமி நிறுவனம் டிவிட்டருக்கு நம்மை அழைத்துச் சென்றுள்ளது. அதுவும், இந்த தொழில்நுட்பம் நீங்கள் ஸ்மார்ட்போனில் விளையாடும்போது அல்லது வீடியோக்களைப் பார்க்கும்போது ஒரே நேரத்தில் சார்ஜ் செய்ய அனுமதிக்கும் விதத்தில் வடிவமைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

Mi ஏர் சார்ஜ்

Mi ஏர் சார்ஜ்

சார்ஜருக்கும் ஸ்மார்ட்போனுக்கும் இடையில் எந்த ஒரு இணைப்பும் இல்லாமல் செயல்படும் காரணத்தினால் இந்த தொழில்நுட்பத்தை நிறுவனம் 'Mi ஏர் சார்ஜ்' என்று பெயரிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் செயல்பட, நீங்கள் உங்கள் போனை எந்தவிதமான நிலைப்பாட்டிலும் வைக்க வேண்டியதில்லை, ஆனால் சார்ஜருக்கு அருகில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

தந்தையை பிளாக்மெயில் செய்த 11 வயது மகன்.. 10 கோடி வேணும் இல்லைனா 'அந்த' படம் எல்லாம் லீக்..தந்தையை பிளாக்மெயில் செய்த 11 வயது மகன்.. 10 கோடி வேணும் இல்லைனா 'அந்த' படம் எல்லாம் லீக்..

இதுவரை எந்தவொரு நிறுவனமும் இதைச் செய்துகாட்டவில்லை

இதுவரை எந்தவொரு நிறுவனமும் இதைச் செய்துகாட்டவில்லை

ப்ளூடூத் பயன்படுத்துவது போன்று ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் சார்ஜ் செய்யப்பட வேண்டிய உங்கள் போன் இருந்தாக வேண்டும் என்று நிறுவனம் கூறியுள்ளது. ரிமோட் சார்ஜிங் தொழில்நுட்ப வகையைப் பற்றி நிறைய நிறுவனங்கள் பேசின, ஆனால் இதுவரை எந்தவொரு நிறுவனமும் அதைச் செய்துகாட்டவில்லை. இப்போது, யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சியோமி தனது ரிமோட் சார்ஜிங் வகையை அறிமுகம் செய்துள்ளது.

எதிர்கால சார்ஜிங் முறை இனி காற்றில் நடக்கும்

80W ஃபாஸ்ட் வயர்லெஸ் சார்ஜிங், 120W கம்பி சார்ஜிங் போன்ற பல புதிய தொழில்நுட்பங்களை முதலில் அறிமுகம் செய்த சியோமி நிறுவனத்திடமிருந்து இப்படி ஒரு மிரட்டலான தொழில்நுட்பத்தைப் பார்ப்பது எதிர்கால சார்ஜிங் முறை இனி காற்றில் நடக்கும் என்பது உறுதியாகியுள்ளது. தொழில்நுட்பம் எவ்வாறு இயங்குகிறது என்பது குறித்துப் பல விவரங்கள் பகிரப்படவில்லை என்றாலும், சிலவற்றை வெய்போவில் நிறுவனத்தின் நிறுவனர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!WhatsApp போட்டோஸை யாருக்கும் தெரியாமல் மறைத்து வைக்க இதை பண்ணுங்க! ஈசி டிப்ஸ்!

எப்படி இது சாத்தியமானது? எப்படி இது செயல்படுகிறது?

எப்படி இது சாத்தியமானது? எப்படி இது செயல்படுகிறது?

இது சார்ஜிங் நிலையத்திலிருந்து ஓரிரு மீட்டர் தூரத்திற்கு 5 வாட் மின்சக்தியை வழங்கத் தொழில்நுட்பம் வல்லது என்று கூறினார்.5-கட்ட குறுக்கீடு ஆண்டெனா மூலம் உங்கள் சாதனத்தின் நிலையைத் தீர்மானித்த பிறகு, ஒரு கட்ட கட்டுப்பாட்டு வரிசையை உருவாக்கும் 144 ஆண்டெனாக்கள் மில்லிமீட்டர்-அலை அதிர்வெண்களில் பீம்ஃபார்மிங் மூலம் சக்தியை அனுப்புகின்றது அவர் கூறியுள்ளார். உண்மையில் இந்த கண்டுபிடிப்பு பாராட்டிற்குரியதே.

Best Mobiles in India

English summary
Xiaomi Unveils New 'Mi Air Charge' Technology : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X