Home
News

இது போன் இல்லை சாமி.. Power Bank.. உலகின் அல்ட்ரா-தின் பவர் பேங்க் சாதனமே இதான்.. Xiaomi அறிமுகம்.. என்ன விலை?

சியோமி (Xiaomi) நிறுவனம் புதிதாக அல்ட்ரா தின் பவர் பேங்க் (Ultra thin power bank) சாதனம் என்ற, உலகின் மிகவும் ஸ்லிம்மான பவர் பேங்க் (power bank) டிவைஸை அறிமுகம் செய்துள்ளது.

மற்ற ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்கள் போல இல்லாமல், சியோமி நிறுவனம் அதன் பவர் பேங்க் சாதனங்களுக்காகவும் மிகவும் பிரசித்திபெற்றது. நிறைய மாடல்களில், விதவிதமான பவர் பேங்க் சாதனங்களை சியோமி உலகளவில் விற்பனை (Xiaomi power banks) செய்து வருகிறது. குறிப்பாக, சியோமியின் சொந்த சந்தையான சீனாவில் கூடுதல் பவர் பேங்க் சாதனங்களை (Mi Power Bank Device) நிறுவனம் அறிமுகம் செய்து வருகிறது.

இது போன் இல்லை சாமி.. Power Bank.. உலகின் அல்ட்ரா-தின் பவர் பேங்க்..

அந்த வகையில், சியோமி நிறுவனம் இன்று புதிய பவர் பேங்க் சாதனத்தை அறிமுகம் செய்துள்ளது. இதன் முக்கிய சிறப்பம்சமே இது வெறும் 10mm தடிமனுடன் மட்டுமே உருவாக்கப்பட்டுள்ளது. ஆம், இது மிகவும் ஸ்லிம் சைசில் (Slim size power bank) வடிவமைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இது மிகவும் ஸ்லிம் தோற்றத்தில் வருவதினால் இதன் விலை அதிகமென்று எண்ணிவிடாதீர்கள்.

சியோமி அல்ட்ரா-தின் பவர் பேங்க் (Xiaomi Ultra-Thin Power Bank):

இந்த சியோமி அல்ட்ரா-தின் பவர் பேங்க் (Xiaomi Ultra-Thin Power Bank) சாதனத்தின் விலை கூட மெல்லிதாக தான் இருக்கிறது. அதாவது, நிறுவனம் வழங்கும் மற்ற பவர் பேங்க் சாதனங்களின் விலையை விட குறைவாகவே இருக்கிறது. இந்த அல்ட்ரா தின் பவர் பேங்க் (Ultra-Thin Power Bank) சாதனம் 5000mAh திறனுடன் வருகிறது. இது சீன சந்தையில் 129 யுவான் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இந்திய மதிப்பில் இதன் விலை சுமார் ரூ.1500 விலையை தாண்டுகிறது. இது இப்போது விற்பனைக்கு வாங்க கிடைக்கிறது. இந்த அல்ட்ரா தின் பவர் பேங்க் (Ultra-Thin Power Bank) சாதனம் வெறும் 10mm அளவுடன் 93கிராம் எடையை மட்டுமே கொண்டுள்ளது. இதனால், இதை உங்கள் பாக்கெட்டில் ஒரு கார்டு போல சுலபமாக எடுத்து செல்லலாம்.

இது போன் இல்லை சாமி.. Power Bank.. உலகின் அல்ட்ரா-தின் பவர் பேங்க்..

இந்த பவர் பேங்க் நமது கண்களை கவர்கிறது. இது NCVM என்ற நான்-கண்டக்டிவ் வேக்யூம் மெடலைசேஷன் கோட்டிங் (Non-Conductive Vacuum Metallization) உடன் வருகிறது. இது மெட்டல் பார் (Metal bar) போன்று பொலிவுடன் காட்சியளிக்கிறது. உண்மையில், பார்ப்பதற்கே ஒரு பிரீமியம் (Premium) தோற்றத்தை வழங்குகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இது மிகவும் ஸ்லிம் தோற்றத்தில் வருகிறது.

இதன் பிளஸ் அண்ட் மைனஸ் என்ன? (What are the pros and cons of this power bank):

இதனால், இதன் பேட்டரி கெபாசிட்டி வெறும் 5000mAh வரை மட்டுமே தாங்குகிறது. இதனால், உங்களால் தற்போது கிடைக்கும் ஸ்மார்ட்போன் சாதனங்களை ஒரு முறை மட்டுமே முழுமையாக சார்ஜ் செய்துகொள்ள முடியும். சியோமியின் மற்ற 10,000mAh பவர் பேங்க் சாதனங்களின் நீங்கள் உங்கள் போனை 2 முறை அல்லது 3 முறை கூட சார்ஜ் செய்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த அல்ட்ரா தின் பவர் பேங்க் (Ultra-Thin Power Bank) சாதனம் USB Type-C சிங்கிள் போர்ட் உடன் வருகிறது. இதில் USB Type-C to Type-C கேபிள் வழங்கப்பட்டுள்ளது. இது 20W அவுட்புட் மற்றும் 18W இன்புட்டை வழங்குகிறது. இது 9 அடுக்கு பாதுகாப்புடன் வருகிறது. இந்த சியோமி அல்ட்ரா தின் பவர் பேங்க் பவர் பேங்க் டிவைஸ் ஷார்ட் சர்க்யூட் (short circuit), ரீசெட் (reset) அம்சங்களை கொண்டுள்ளது.

இது, இன்புட் ஓவர்வோல்ட்டேஜ் (input overvoltage), இன்புட் ஓவர் கரண்ட் (input over-current), அவுட்புட் ஓவர் வோல்ட்டேஜ் (output over-voltage), பேட்டரி ஓவர் சார்ஜ் மற்றும் ஓவர் டிஸ்சார்ஜ் (battery over-charge and over-discharge) போன்ற பல அம்சங்களை அடக்கியுள்ளது. உண்மையில், இந்த ஸ்லிம் பவர் பேங்க் ஏகபோக அம்சங்களை பேக் செய்துள்ளது. ஆனால், 5000mAh திறனுடன் ஒரு பாக்கெட் பவர் பேங்க் சாதனமாக வெளிவந்துள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Ultra Thin Power Bank Device Launched With 10mm Thickness and 5000mAh Battery Capacity
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X