டிக்கெட் விற்று வீட்டிலேயே படம் ஓட்டலாம்: 4K அல்ட்ரா HD ஆதரவோடு Xiaomi TV A2 அறிமுகம்., நியாயமான விலை!

|

ஸ்மார்ட்போன்கள் எண்ணிக்கை அளவிற்கு ஸ்மார்ட்டிவிகளும் தொடர்ந்து புதுப்புது அம்சங்களோடு அறிமுகமாகி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு எந்த டிவி வாங்குவது என்பதில் பெரிய குழப்பமே வரும். இருப்பினும் குறிப்பிட்ட நிறுவனங்களின் ஸ்மார்ட்டிவிகள் விலைக்கேற்ற தரம் மற்றும் அம்சங்களுடன் சந்தையில் கிடைக்கிறது. அப்படி ஒரு ஸ்மார்ட்டிவி குறித்து தான் நாம் பார்க்கப்போகிறோம்.

Xiaomi TV A2 அறிமுகம்

Xiaomi TV A2 அறிமுகம்

சியோமி நிறுவனம் Xiaomi TV A2 தொடரில் மூன்று மாடல் ஸ்மார்ட்டிவிகளை அறிமுகம் செய்திருக்கிறது. இதன் உயர்தர வேரியண்ட் மாடல் 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே ஆதரவோடு வெளிவந்திருக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவியின் விலை மற்றும் பிற அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.

32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் ஸ்மார்ட்டிவிகள்

சியோமி நிறுவனம் டிவி ஏ2 தொடரை உலக சந்தையில் அறிமுகம் செய்துள்ளது. இந்த தொடரின் கீழ் 32 இன்ச், 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் உட்பட நான்கு அளவுகளில் ஸ்மார்ட்டிவிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து புதிய சியோமி டிவி மாடல்களும் எல்இடி பேக்லிட் எல்சிடி பேனல் வசதியைக் கொண்டிருக்கிறது.

4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே

4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே

A2 மாடலின் 32 இன்ச் டிவியானது HD ரெடி டிஸ்ப்ளே ஆதரவோடு வருகிறது. அதேபோல் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவிகள் டால்வி விஷன் ஆதரவுடன் கூடிய 4K அல்ட்ரா HD டிஸ்ப்ளே அம்சத்தைக் கொண்டுள்ளது. இந்த டிவியின் மாடல்களில் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீத டிஸ்ப்ளே உடன் 178 டிகிரி கோண ஆதரவு இருக்கிறது.

Xiaomi TV A2 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Xiaomi TV A2 விலை மற்றும் கிடைக்கும் தன்மை

Xiaomi TV A2 விலை மற்றும் கிடைக்கும் தன்மை குறித்து பார்க்கையில், இதன் 55 இன்ச் மாடல் டிவியின் விலையானது EUR 529 ஆக இருக்கிறது. இதன் இந்திய விலை மதிப்பு ரூ.43,600 ஆகும். சியோமி நிறுவனம் பிற ஏ2 தொடர் மாடல்களின் விலை மற்றும் கிடைக்கும் தன்மையை அறிவிக்கவில்லை. Xiaomi TV A2 55 இன்ச் டிவியானது சியோமியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வாங்குவதற்கு கிடைக்கும்.

சியோமி புதுமாடல் டிவியின் சிறப்பம்சங்கள்

சியோமி புதுமாடல் டிவியின் சிறப்பம்சங்கள்

Xiaomi TV A2 தொடரின் சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இந்த டிவி எல்இடி பேக்லிட் எல்சிடி பேனல் உடன் வருகிறது. 178 டிகிரி கோணத்துடன் 60 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதத்தை கொண்டிருக்கிறது. இந்த சாதனம். A2 மாடலின் 32 இன்ச் டிவியானது HD ரெடி ஆதரவோடு (1366x768 பிக்சல்கள்) ரெசல்யூஷன் டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் மாடல்கள் ஆனது 4K (3840x2160 பிக்சல்கள்) தெளிவுத்திறன் ஆதரவோடு அல்ட்ரா எச்டி பேனலைக் கொண்டிருக்கிறது. இது டால்பி விஷன் ஆதரவைக் கொண்டிருக்கிறது.

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு

டிவி A2 தொடர்களானது குவாட் கோர் கார்டெக்ஸ் ஏ55 சிபியூ மூலம் இயக்கப்படுகிறது. இதன் ப்ளூடூத் ரிமோட்கள் மூலமாக 360 டிகிரி கோணத்தில் டிவியை இயக்கலாம். இதன் அடிப்படை மாடலான 32 இன்ச் டிவியானது 1.5 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 4கே மாடல்களில் 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள்சேமிப்பு ஆதரவு இருக்கிறது.

12W ஆடியோ வெளியீடு

32 இன்ச் சியோமி டிவி A2 மாடலானது இரட்டை HDMI போர்ட்கள், இரண்டு யூஎஸ்பி போர்ட்கள், வைஃபை மற்றும் ப்ளூடூத் வி5.0 உள்ளிட்ட இணைப்பு ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. அதேபோல் இந்த மாடலில் இரண்டு ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது. ஒவ்வொன்றும் 10W ஆடியோ வெளியீட்டு ஆதரவைக் கொண்டிருக்கிறது. அதேபோல் 43 இன்ச், 50 இன்ச் மற்றும் 55 இன்ச் டிவி A2 மாடல்களும் இரட்டை ஸ்பீக்கர்களை கொண்டுள்ளன. ஒவ்வொன்றும் 12W ஆடியோ வெளியீட்டைக் கொண்டுள்ளது. இந்த அனைத்து மாடல்களும் டால்பி ஆடியோ மற்றும் DTS HD ஆதரவைக் கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi TV A2 series Launched with 4K Ultra HD, DTS HD Support: price

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X