ஜனவரி 5-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ்! அப்படி என்ன ஸ்பெஷல்?

|
ஜனவரி 5-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ்!

இந்தியாவில், ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது எப்போது அறிமுகமாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீரிஸின் கீழ் ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி என மொத்தம் 3 மாடல்கள் அறிமுகமாக உள்ளன.

உலகளவில், ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனையானது 300 மில்லியன் யூனிட்களை தாண்டியுள்ளது, இது மிகவும் பிரபலமான சீரீஸ்களில் ஒன்றாகும் என்று சியோமி இந்தியா நிறுவனம் சமீபத்தில் அறிவித்து இருந்தது. மேலும் இந்த எண்ணிக்கையில், இந்தியாவில் மட்டுமே 72 மில்லியன் யூனிட்கள் விற்பனையாகி உள்ளன என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் மிகவும் பாராட்டப்பட்ட மற்றும் மிகவும் பிரபலமான நோட் சீரீஸின் பாரம்பரியத்தை மேலும் தொடரும் வண்ணம், சியோமி நிறுவனம் தனது லேட்டஸ்ட் ரெட்மி நோட் 12 சீரீஸ் ஸ்மார்ட்போன்களை வருகிற ஜனவரி 5, 2023 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இது நிறுவனத்தின் சூப்பர்நோட் (SuperNote) சீரீஸ் ஆக இருக்கும் என்றும் சியோமி குறிப்பிட்டுள்ளது. முன்னரே குறிப்பிட்டபடி, இந்த சீரிஸின் கீழ் மூன்று மாடல்கள் வெளியாகும்: ரெட்மி நோட் 12 5ஜி, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி.

இந்த புதிய ரெட்மி நோட் சீரீஸ் ஸ்மார்ட்போன்கள் ஆனது ஹார்டுவேர் துறையில் குறிப்பிடத்தக்க மேம்படுத்தல்களை கொண்டு வருகிறது, ஏனென்றால், ரெட்மி நோட் 12 சீரீஸ் ஆனது - முதன் முறையாக - 5ஜி கனெக்டிவிட்டியை ஆதரிக்க உள்ளது. மேலும் இது 120ஹெர்ட்ஸ் அமோஎல்இடி டிஸ்ப்ளே மற்றும் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 ப்ராசஸர் போன்ற பவர் பேக்டு காம்போவையும் கொண்டிருக்கிறது. ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது சோனி ஐஎம்எக்ஸ் 766 சென்சாரை கொண்ட சூப்பர் ஓஇஎஸ் அம்சத்தை பேக் செய்கிறது மற்றும் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது சாம்சங் நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்ட, எச்பிஎக்ஸ் சென்சார் உடனான 200எம்பி கேமரா செட்-அப் உடன் இந்தியாவில் அறிமுகமாக உள்ளது. இந்த ஸ்மார்ட்போன்களின் விரிவான அம்சங்கள் அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பக்கத்தில் அணுக கிடைக்கின்றன.

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

ஜனவரி 5-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ்!

ரெட்மி நோட் 12 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 1 கொண்டு இயக்கப்படுகிறது. இது டூயல் 5ஜி பேண்ட் ஆதரவுடன் மென்மையான செயல்திறனை உறுதிப்படுத்தும் ஒரு சிப்செட் ஆகும். இந்த ஸ்மார்ட்போன் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 33வாட் இன்-பாக்ஸ் ஃபாஸ்ட் சார்ஜரையும் வழங்குகிறது.

ரெட்மி நோட் 12 5ஜி ஸ்மார்ட்போனின் க்ளோபல் வேரியண்ட்டில் இருப்பதை போலின்றி, இந்திய வேரியண்ட் ஆனது 48எம்பி மெயின் சென்சார் மற்றும் 8எம்பி அல்ட்ராவைடு சென்சார் மற்றும் 2எம்பி மேக்ரோ சென்சார் என்கிற ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப் உடன் வருகிறது. முன்பக்கத்தை பொறுத்தவரை, 13எம்பி செல்பீ கேமரா உள்ளது.

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

ஜனவரி 5-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ்!

ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ப்ராசஸர் மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி மற்றும் 67வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவையும் கொண்டுள்ளது. இதன் ட்ரிபிள் ரியர் கேமரா செட்டப்பில் 50எம்பி சோனி ஐஎம்எக்ஸ்766 மெயின் ஓஐஎஸ் (ஆப்டிகல் இமேஜ் ஸ்டேபிலைசேஷன்) கேமரா, 8எம்பி அல்ட்ராவைடு ஷூட்டர் மற்றும் 2எம்பி மேக்ரோ கேமரா உள்ளன. செல்பீக்கள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்காக இதன் முன்பக்கத்தில் 16எம்பி கேமரா உள்ளது.

டிஸ்பிளேவை பொறுத்தவரை, ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. மேலும் இது சிறந்த பார்வை அனுபவத்திற்காக டால்பி விஷன் & டால்பி அட்மாஸ் சான்றிதழையும் பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஸ்மார்ட்போனின் அம்சங்கள்:

ஜனவரி 5-ல் இந்தியாவில் அறிமுகமாகும் ரெட்மி நோட் 12 5ஜி சீரீஸ்!

ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் 5ஜி ஆனது 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.67-இன்ச் 10-பிட் அமோஎல்இடி டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இது 240ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட், டால்பி விஷன், டால்பி அட்மோஸ் மற்றும் எச்டிஆர்+ போன்ற ஆதரவுகளையும் கொண்டுள்ளது. கேமராக்களை பொறுத்தவரை, ஓஐஎஸ் உடனான 200 மெகாபிக்சல் சாம்சங் எச்பிஎக்ஸ் மெயின் சென்சார் கொண்டு இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஸ்மார்ட்போன் ஆகும். மேலும் இது வேகமான மற்றும் மென்மையான செயல்திறனை வழங்கும் மீடியாடெக் டைமன்சிட்டி 1080 ப்ராசஸர் மூலம் இயங்குகிறது. இது 120வாட் ஹைப்பர்சார்ஜ் ஆதரவை கொண்ட 4980எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது சுமார் 19 நிமிடங்களில் பூஜ்ஜியத்திலிருந்து 100 சதவிகிதம் வரை சார்ஜ் ஆகும்.

நாம் மேற்கண்ட அம்சங்களை வைத்து பார்க்கும் போது, இந்த பிராண்ட் ரெட்மி நோட் 12 ப்ரோ பிளஸ் ஸ்மார்ட்போனை சுமார் ரூ.30,000 க்கு அறிமுகப்படுத்தினால் நன்றாக இருக்கும். இதேபோல், ரெட்மி நோட் 12 ப்ரோ 5ஜி ஆனது ரூ.25,000 க்கும் மற்றும் ரெட்மி நோட் 12 5ஜி ஆனது ரூ.20,000 க்கும் இந்தியாவில் அறிமுகமானால் நன்றாக இருக்கும். மேலும் தகவல்களுக்கு அமேசான் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தயாரிப்பு பட்டியலை பார்க்கவும்.

Best Mobiles in India

English summary
Xiaomi to unveil the SuperNote Redmi Note 12 5G series in India on January 5

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X