வந்துவிட்டது சியோமி மி-டிவி: சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்.!

    இந்தியாவில் சியோமி நிறுவனம் தற்போது மி டிவி என்ற புதிய வசதியையும் கொண்டு வந்துவிட்டது. குறைந்த விலையில் தரமான மொபைல் போன்களை வழங்கி வரும் சியோமி நிறுவனம் தற்போது பார்ட்னர்ஷிப் உதவியுடன் டிவியையும் கொண்டு வந்துள்ளது. சியோமி நிறுவனமும், வெப்சீரியல் நிறுவனமான தி வைரல் ஃபீவர் என்ற நிறுவனமும் இணைந்து சமீபத்தில் அறிவித்த அறிவிப்பின்படி மிடிவி 4 மற்றும் மிடிவி 4ஏ ஆகிய இரண்டு ஸ்மார்ட் டிவிக்கள் அறிமுகம் செய்யப்பட்டுளன. இந்த ஒப்பந்தத்தின்படி இந்த இரண்டு டிவியிலும் இனி அனைத்து வெப்சீரியல்கள் மற்றும் பல வீடியோக்களை ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.

    வந்துவிட்டது சியோமி மி-டிவி: சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்.!

    தி வைரல் ஃபீவர் நிறுவனம் சமீபத்தில் தனது புதிய வெப் சீரியலான 'டெக் கான்வர்செஷன் வித் டாட்' என்ற சீர்யலை இளைதலைமுறையினர்களுக்காக வெளியிட்டது. இந்த சீரியலில் ஒரு தந்தை மற்றும் மகனுக்கு ஏற்படும் டெக்னாலஜியின் தொல்லைகள் மற்றும் அதுகுறித்த ஆர்வங்கள் குறித்து விளக்கப்பட்டது.

    வந்துவிட்டது சியோமி மி-டிவி: சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்.!

    இந்த பார்ட்னர்ஷிப் குறித்து தி வைரல் ஃபிவர் நிறுவனத்தின் சிஓஓ கூறியதாவது "டிஜிட்டல் உள்ளடக்கம் பார்வையாளர்களின் வாழ்க்கையில் புதிய நுண்ணறிவுகளை உருவாக்குகிறது, மேலும் சியோமி-ன் புதிய வரப்பிரசாதம் இந்திய சந்தையில் உண்மையிலேயே ஒரு போட்டியை உருவாக்கியுள்ளது. தி வைரல் ஃபிவர் இந்தியாவில் பிரீமியம் டிஜிட்டல் உள்ளடக்கத்தின் முன்னோடியாகும். இந்திய இளைஞர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய புதுமையான சிந்தனைகளில் கவனம் செலுத்துகிறோம். மிடிவி 4 டிவிக்க்கான முதல் பங்காளிகளாக இருப்பதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம், மேலும் மிடிவி 4 தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனுபவிக்கும் பார்வையாளர்களை எதிர்நோக்குகிறோம். எங்களது பார்ட்னர்ஷி நீடிப்பதற்கு சியாமியுடன் இணைந்து எங்கள் பிரபலமான தொடரான 'டெக் உரையாடல்களை டெக் உரையாடல்களின் சிறப்பு அத்தியாயத்தை உருவாக்கியுள்ளோம். எங்கள் ரசிகர்கள் அதை நேசிப்பார்கள் என்பது நிச்சயம். "

    வந்துவிட்டது சியோமி மி-டிவி: சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்.!

    சியோமி இந்தியாவின் மி டிவி மேனேஜர் சுதீப் சாஹு இதுகுறித்து செய்தியாளர்களிடம் கூறியபோது, 'இந்த டிவிஎஃப் டிவி டிஜிட்டல் உலகில் ஒரு புதிய சாதனையை ஏற்படுத்துவதோடு, உயர்தர அதிவேக வீடியோக்களை அனைத்து ரசிகர்களுக்கும் வழங்குவதில் மிகவும் பெருமிதம் கொண்டுள்ளன.மிஎல்.டி. டிவி 500,000 மணிநேர நிகழ்ச்சிகளை வழங்குகிறது. இந்த டிவி இந்தியாவில் உள்ள மற்ற டிவிக்களுக்கு பெரும் சவாலை கொடுக்கும் என்று கூறினார்.

    வந்துவிட்டது சியோமி மி-டிவி: சினிமா பிரியர்களுக்கு கொண்டாட்டம்.!

    Best online converter | Audio, Videos, PDF, Document etc.. (Tamil)

    சியோமி நிறுவனம் தனது மிடிவி4 டிவியை ரூ.39,999 என்ற விலையில் அறிமுகம் செய்கிறது. 55 இன்ச் 4K HDR டிஸ்ப்ளே கொண்டது இந்த டிவி. பெரிய ஸ்க்ரீன் தேவைப்படாதவர்களுக்கும் குறைந்த விலையில் இந்த டிவி கிடைக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும் புதிய மாடலாக இந்த மிடிவி 4ஏ என்ற மாடலில் 32 இன்ச் வடிவில் HD டிஸ்ப்ளேவுடன் ரூ.13,999 என்ற விலையில் கிடைக்கும். அதேபோல் 43 இன்ச் திரையுடன் கூடிய டிவி ரூ.22,999 என்ற விலையில் கிடைக்கும், இதுவும் முழு HD வடிவ பேனல் கொண்டது ஆகும். மேலும் இந்த மாடல் டிவிக்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சியோமி இலவசமாக இன்ஸ்டால் செய்தும் தருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Xiaomi and The Viral Fever announce a strategic partnership to offer videos web series across Mi TVs; Read more about this in Tamil GizBot
    X

    இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more