கொத்தா ஆஃபர்.. வெறும் ரூ.19,999 போதும்.. ரெட்மி நோட் 12 போன்.. ஸ்மார்ட்வாட்ச்.. இயர்பட்ஸ்.. பவர் பேங்க்!
இந்திய மார்கெட் மிரளும்படியான டிஸ்கவுண்ட்டில் ரூ.33,696 மதிப்பிலான ரெட்மி நோட் 12 போன், ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச், ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் இயர்பட்ஸ் மற்றும் எம்ஐ பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ ஆகியவை வெறும் ரூ.21,999க்கு கிடைக்கிறது.
ரெட்மி நோட் 12 (Redmi Note 12): இந்த போன் 6.67 இன்ச் ஃபுல்எச்டி பிளஸ் (FHD+) (1080×2400 பிக்சல்கள்) சூப்பர் அமோலெட் (Super AMOLED) டிஸ்பிளே கொண்டிருக்கிறது. இந்த டிஸ்பிளேவில் 120Hz ரெஃப்ரெஷ் ரேட், 1200 நிட்ஸ் பிரைட்னஸ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 (Corning Gorilla Glass 3) பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் கொண்ட ஆக்டா கோர் ஸ்னாப்டிராகன் 4 ஜென்1 6என்எம் மொபைல் (Octa Core Snapdragon 4 Gen 1 6nm Mobile) சிப்செட் கொண்டுள்ளது. அதோடு அட்ரினோ ஜிபியு (Adreno GPU) கிராபிக்ஸ் கார்டு வருகிறது. இந்த போனில் 5 ஜிபி விர்ச்சுவல் ரேம் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது.
அதோடு 4 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி மெமரி ஆகிய 2 வேரியண்ட்கள் கிடைக்கிறன. 1 டிபிக்கான மைக்ரோ எஸ்டி கார்டு சப்போர்ட் உள்ளது. இந்த போனில் 48 எம்பி மெயின் கேமரா + 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கிள் கேமரா + 2 எம்பி மேக்ரோ கேமரா வருகிறது.
இந்த மாடலில் சைடு மவுண்டெட் ஃபிங்கர்பிரிண்ட் சென்சார் வருகிறது. 33W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. இந்த போனின் 6 ஜிபி ரேம் மாடலின் விலை ரூ.21,999ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. ஆனால், இப்போது, டிஸ்கவுண்ட்டில் வெறும் ரூ.17,999க்கு கிடைக்கிறது.
ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active): இந்த வாட்ச் 1.83 இன்ச் (240×280 பிக்சல்கள்) எல்சிடி டிஸ்பிளே கொண்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 450 நிட்ஸ் பீக் பிரைட்னஸ் வருகிறது. ப்ளூடூத் வி5.3 கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ப்ளூடூத் காலிங் சப்போர்ட்டுக்காக இன்பில்ட் மைக் மற்றும் ஸ்பீக்கர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஆக்டிவிட்டி டிராக்கிங், ஸ்லீப் மானிட்டர், ஸ்ட்ரெஸ் லெவல் மானிட்டர் மற்றும் ஃபீமேல் பீரியட் சைக்கிள் மானிட்டர் ஆகியவை வருகின்றன. 289mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. 12 நாட்கள் பேக்கப் கொடுக்கிறது. இந்த வாட்ச்சின் விலை ரூ.2999ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இப்போது டிஸ்கவுண்ட்டில் ரூ.2,599க்கு கிடைக்கிறது.
ரெட்மி பட்ஸ் 4 ஆக்டிவ் (Redmi Buds 4 Active): இந்த இயர்பட்ஸ் ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி கொண்டுள்ளது. கூகுள் ஃபாஸ்ட் பேர் சப்போர்ட் வருகிறது. 12 மிமீ டிரைவர்கள் கொண்டிருக்கிறது. அதோடு ப்ரோ பேஸ் டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டுள்ளது. இஎன்சி (ENC) சப்போர்ட் உள்ளது.
60 எம்எஸ் லோவ் லேட்டன்சி கேமிங் மோட் வருகிறது. டச் கன்ட்ரோல் கொண்டிருக்கிறது. இதன் சார்ஜிங் கேஸ் 440mAh பேட்டரி கொண்டுள்ளது. இந்த பேட்டரி 30 மணி நேரம் பேக்கப் கொடுக்கக்கூடியது. இதன் விலை ரூ.1399ஆக நிர்ணயம் செய்யப்பட்டது. இப்போது, டிஸ்கவுண்டில் ரூ.999க்கு கிடைக்கிறது.
எம்ஐ பாக்கெட் பவர் பேங்க் ப்ரோ (Mi Pocket Power Bank Pro): இந்த பவர் பேங்க் 10000mAh பேக்கப் கொண்டிருக்கிறது. இதில் டூயல் யுஎஸ்பி போர்ட், டைப் - சி போர்ட் மற்றும் மைக்ரோ யுஎஸ்பி போர்ட் வருகிறது. அட்வாஸ்ட் சர்கியூட் பாதுகாப்பு கொண்டிருக்கிறது. இதன் விலை ரூ.2,699ஆக நிர்ணயிக்கப்பட்டது. இப்போது, ஆஃபரில் ரூ.1,599க்கு கிடைக்கிறது.
ஆகவே, மேற்கூறிய நான்கு டிவைஸ்களையும் டிஸ்கவுண்ட் போக வெறும் ரூ.21,999க்கு சியோமி நிறுவனம் வழங்குகிறது. இதுவொரு லிமிடெட் பீரியட் ஆஃபர் என்பதால் விரைவில் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவற்றை எம்ஐ.காம் (mi.com) தளத்தில் ஆர்டர் செய்து வாங்கிக் கொள்ளலாம். இதோடு ரூ.2000 மதிப்பில் பேங்க் ஆஃபர்களும் வழங்கப்படுகின்றன. ஆகவே, இவற்றை வெறும் ரூ.19,999க்கு வாங்கலாம்.


Click it and Unblock the Notifications








