Home
News

ப்ரீ சர்வீஸ்.. Xiaomi போன்களுக்கு ப்ரீ சர்வீஸ்.. 10 நாட்கள் மட்டும்.. முழு விவரம் உள்ளே!

இந்தியாவில் உள்ள சியோமி (Xiaomi) மற்றும் ரெட்மி (Redmi) யூசர்கள் அனைவரும் உங்களது ஸ்மார்ட்போன்களை (Smartphone) ப்ரீ சர்வீஸ் செய்ய ரெடியாக எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். சியோமி நிறுவனம் சம்மர் சர்வீஸ் கேம்ப் (Xiaomi Summer Service Camp) என்னும் பெயரில் ப்ரீ சர்வீஸ் திட்டத்தை அறிவித்துள்ளது.

இந்த மிகப்பெரும் அறிவிப்பு மூலம் நாடு முழுவதும் உள்ள 1,000 சியோமி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் (Xiaomi Authorised Service Centers) மட்டும் சம்மர் சர்வீஸ் கேம்ப் தொடர்ந்து 10 நாட்கள் நடக்கும் என்பதை விளக்குகிறது. இந்த சர்வீஸ் கேம்ப்பில் என்னென்ன சலுகைகள் வழங்கப்படும், எந்த தேதியில் தொடங்கும், சியோமி, ரெட்மி போன்களை எப்படி சர்வீஸ் கொடுக்க வேண்டும் உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

Xiaomi போன்களுக்கு ப்ரீ சர்வீஸ்.. 10 நாட்கள் மட்டும்.. எங்கு தெரியுமா?

சீன (China) ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி உலகம் முழுவதும் மிட்-ரேன்ஞ் விலை போன்கள் விற்பனையில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இந்தியாவில் கோடிக்கணக்கான மக்கள் சியோமி போன்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த போன்களை சர்வீஸ் செய்ய நாடு முழுவதும் சியோமி நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்கள் ஆயிரத்துக்கும் மேல் உள்ளன.

இந்த சர்வீஸ் சென்டர்களில் தொடர்ந்து 10 நாட்களுக்கு சம்மர் சர்வீஸ் கேம்ப் நடத்தப்படும் என்று சியோமி இந்தியா (Xiaomi India) அறிவித்துள்ளது. இந்த சர்வீஸ் கேம்ப்பில் பணம் வசூலிக்கப்படும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. பேட்டரியை மாற்ற மட்டுமே பணம் வசூலிக்கப்படும், அதுவும் 50 சதவீத ஆஃபர் விலையில் பேட்டரியை வாங்கிக் கொள்ளலாம். இதோடு பல சலுகைகள் உள்ளன.

இதுகுறித்து சியோமி நிறுவனம் தரப்பில், "நாடு முழுவதும் ஜூன் 1ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரையில் சியோமி சம்மர் சர்வீஸ் கேம்ப் நடக்கும். இந்த சர்வீஸ் கேம்ப் அங்கீகரிக்கப்பட்ட சர்வீஸ் சென்டர்களில் மட்டுமே நடக்கும் என்பதால், சியோமி வெப்சைட்டில் சர்வீஸ் சென்டர்களின் முகவரியை தெரிந்து கொள்ளலாம். இந்த சர்வீஸ் கேம்ப்பில் சியோமி மற்றும் ரெட்மீ போன்களை முழுவதுமாக செக்-அப் செய்துகொள்ளலாம்.

இதற்கு பணம் வசூலிக்கப்படாது. அதேபோல போன்களில் இருக்கும் குறைகளை சரிசெய்து கொள்ளலாம். இதற்கு லேபர் சார்ஜ் வசூலிக்கப்படாது. அதாவது, நீங்கள் கேமரா லென்ஸ்களை மாற்ற விரும்பினால், லென்ஸ்களுக்கான தொகையை மட்டுமே கொடுத்தால் போதும், லேபருக்கான பணம் கொடுக்க தேவையில்லை. இந்த கேம்ப்பில் சியோமி மற்றும் ரெட்மீ போன்களுக்கும் இலவசமாக சாப்ட்வேர் அப்டேட் செய்து கொடுக்கப்படும். குறிப்பாக, போனின் பேட்டரியை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால், அதற்கு 50 சதவீத தள்ளுபடி வழங்கப்படும்.

மேலும் விவரங்களுக்கு சியமோ நிறுவனத்தின் வெப்சைட் அல்லது சர்வீஸ் சென்டர்களை தொடர்பு கொள்ளலாம்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 8 நாட்கள் மட்டுமே சியோமி சம்மர் கேம்ப் நடக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Summer Service Camp 2023 offering free phone health check-up for 10 days in India from 1st June
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X