ஏப்.15 புது மாடல் வருதுன்னு.. ரூ.8,299 போதும்.. நான்கு Redmi 5ஜி போன்கள் மீது திடீர் தள்ளுபடி!
ஷாவ்மீ நிறுவனம் வருகிற ஏப்ரல் 15 மற்றும் ஏப்ரல் 21 ஆம் தேதிகளில், முறையே புதிய ஸ்மார்ட் வாட்ச் மற்றும் ஸ்மார்ட்போனை, இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய உள்ள நிலையில், அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக ஷாவ்மீ சம்மர் சேவிங்ஸ் சேல் (Xiaomi Summer Savings Sale) என்கிற விற்பனையின் கீழ் 4 ரெட்மி 5ஜி ஸ்மார்ட்போன்களின் விலைகளை குறைத்துள்ளது. இந்த விற்பனை ஏப்ரல் 10 ஆம் தேதியுடன் முடிவடைகிறது.
1. ரெட்மி நோட் 14 5ஜி (Redmi Note 14 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.16,999 க்கு வாங்க கிடைக்கிறது
2. ரெட்மி 13 5ஜி (Redmi 13 5G): இது ரூ.17,999 க்கு பதிலாக ரூ.12,499 க்கு வாங்க கிடைக்கிறது
3. ரெட்மி ஏ4 5ஜி (Redmi A4 5G): இது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.8,299 க்கு வாங்க கிடைக்கிறது
4. ரெட்மி 14சி 5ஜி (Redmi 14C 5G): இது ரூ.8,499 க்கு பதிலாக ரூ.9,499 க்கு வாங்க கிடைக்கிறது

ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனின் விரிவான அம்சங்கள்: இது 720 x 1640 பிக்சல்ஸ் ரெசல்யூஷன், 120ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட் உடனான 6.88-இன்ச் எச்டிபிளஸ் எல்சிடி டிஸ்பிளேவை கொண்டுள்ளது. ப்ராசஸரை பொறுத்தவரை இது 4ஜிபி LPDDR4X ரேம் உடன் இணைக்கப்பட்ட 4என்எம் ஸ்னாப்டிராகன் 4எஸ் ஜென் 2 சிப்செட் (4nm Snapdragon 4s Gen 2 chipset) உடன் வருகிறது
கேமராக்களை பொறுத்தவரை, ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போனில் டூயல் ரியர் கேமரா செட்டப் உள்ளது. அதில் எப்/1.8 அபெர்க்ஷர் உடனான 50 மெகாபிக்சல் ப்ரைமரி கேமரா + குறிப்பிடப்படாத இரண்டாம் நிலை கேமரா உள்ளது. முன்பக்கத்தில், செல்பீக்கள் மற்றும் வீடியோ கால்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்ய 5 மெகாபிக்சல் கேமரா (எப்/2.2 அபெர்க்ஷர்) உள்ளது.
சுவாரசியமாக இது ஆண்ட்ராய்டு 14 ஓஎஸ் அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் (HyperOS) உடன் வருகிறது. இதற்கு 2 வருட ஓஎஸ் அப்டேட்கள் மற்றும் 4 வருட செக்யூரிட்டி அப்டேட்கள் கிடைக்கும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ.10,000 க்குள் என்கிற விலையில் வாங்க கிடைக்கும் இந்த ஸ்மார்ட்போனை அடுத்த 2-3 ஆண்டுகளுக்கு எந்த விதமான சாப்ட்வேர் சிக்கலும் இல்லாமல் பயன்படுத்தலாம்.
பேட்டரியை பொறுத்தவரை ரெட்மி ஏ4 5ஜி ஸ்மார்ட்போன் 18W சார்ஜிங் ஆதரவு உடனான 5160mAh பேட்டரியை கொண்டுள்ளது. மேலும் இது 128ஜிபி வரையிலான UFS 2.2 ஸ்டோரேஜ், மைக்ரோஎஸ்டி கார்டு ஸ்லாட்டை பயன்படுத்தி 1டிபி வரையிலான எக்ஸ்டென்ஷன், ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனர், ஐபி52 ரேட்டிங் போன்ற்வைகளையும் கொண்டுள்ளது.
ரெட்மி 13 5ஜி ஸ்மார்ட்போனின் முக்கிய அம்சங்கள்: இது டூயல் சிம் (நானோ) ஆதரவு, ஆண்ட்ராய்டு 14 அடிப்படையிலான ஹைப்பர்ஓஎஸ் ஸ்கின், கொரில்லா கிளாஸ் 3 உடனான 6.79-இன்ச் எப்எச்டி பிளஸ் ஐபிஎஸ் எல்சிடி டிஸ்பிளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 4 ஜென் 2 ஏஇ சிப்செட், 8ஜிபி வரையிலான ரேம் உடன் வருகிறது.
கேமராக்களை பொறுத்தவரை, இது சாம்சங் ஐசோசெல் எச்எம்6 சென்சார் மற்றும் எப்/1.75 அபெக்ஷர் உடன் கூடிய 108 மெகாபிக்சல் மெயின் கேமராவை கொண்டுள்ளது. இது 3x இன்-சென்சார் ஜூமிங்கை வழங்கும் என்று ரெட்மி நிறுவனம் கூறுகிறது. இந்த ஸ்மார்ட்போனில் 2 மெகாபிக்சல் மேக்ரோ கேமராவும் உள்ளது. முன்பக்கத்தில் 13 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது.
கனெக்டிவிட்டி ஆப்ஷன்களை பொறுத்தவரை இது 5ஜி, 4ஜி, டூயல் பேண்ட் வைஃபை, ப்ளூடூத் 5.4, ஜிபிஎஸ் மற்றும் 3.5மிமீ ஹெட்ஃபோன் ஜாக், யூஎஸ்பி டைப்-சி போர்ட் ஆகியவைகளை கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரை இது 33W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு கொண்ட 5030mAh பேட்டரியை கொண்டுள்ளது. கடைசியாக இது பக்கவாட்டில் பொருத்தப்பட்ட ஃபிங்கர் பிரிண்ட் ஸ்கேனரையும் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications