கின்னுன்னு வந்தாச்சு.. ரூ.3499 போதும்.. 30W ஆடியோ.. 12 மணி நேரம் பேக்கப்.. IP67 வாட்டர் ப்ரூஃப்.. எந்த மாடல்?
சும்மா கின்னு கின்னுனு கேட்கனும்னு ஸ்பீக்கர்களை தேடிக்கொண்டிருந்த ஆடியோ பிரியர்களுக்கு 30W அவுட்புட் மட்டுமல்லாமல் டூயல் லார்ஜ் வூப்பர், 12 மணி நேரத்துக்கு பேக்கப் மற்றும் IP67 வாட்டர் ப்ரூஃப் போன்ற பீச்சர்களுடன் சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் (Xiaomi Sound Outdoor Speaker) களமிறங்கி இருக்கிறது. 25 மீட்டர் கனெக்டிவிட்டி ரேஞ்ச், 15W ஃபாஸ்ட் சார்ஜிங், ஸ்டீரியோ பேரிங் போன்ற மற்ற பீச்சர்களுடம் பட்டையை கிளப்புகின்றன. இந்த சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரில் விவரங்கள் இதோ.
இந்த அவுட்டோர் ஸ்பீக்கரில் பக்கா பீச்சர்கள் மட்டுமல்லாமல், ஆடியோ டெக்னாலஜிகளும் கிடைக்கின்றன. நேச்சுரல் ஆடியோ அவுட்புட்கொடுக்க ஆட்டோமேட்டிக் ஃப்ரிகொன்சி அட்ஜஸ்ட் கிடைக்கிறது. இதுமூலம் டைனாமிக் ஆடியோ அனுபவும் குவாலிட்டியாக கிடைக்கும். ஸ்மார்ட் வால்யூம் பேலன்ஸ் (Smart Volume Balance) சப்போர்ட் கிடைக்கிறது.

இது ஆடியோவுக்கு ஏற்ப வால்யூமை குறைக்கவும், கூட்டவும் செய்யும். இதன் மூலம் கிளாரிட்டியான வாய்ஸ் மற்றும் பேக்கிரவுண்ட் சவுண்ட்களை கேட்க முடியும். சப்வூப்பர் எக்ஸ்டென்சன் சப்போர்ட் கிடைக்கிறது. ஆகவே, ஸ்பீக்கர் மட்டுமல்லாமல் டீப் பேஸ் அவுட் கொடுக்க சப்வூப்பர்கள் பேக் செய்யப்பட்டுள்ளது. மூன்று கலர்களில் வெளியாகி இருக்கிறது.
சிலிகான் ஆன்டி-ஸ்லிப் பேட் டிசைனில் ப்ளூ (Bule), ரெட் (Red) மற்றும் ஆரஞ்ச் (Orange) கலர்களில் ஆர்டர் செய்து கொள்ளலாம். சிலிகான் ஸ்லிப் வருவதால் டூயல்-டோன் லுக் கொடுக்கிறது. லைட் வெயிட் பாடியில் 597 கிராம் எடை மட்டுமே வருகிறது. ஆகவே, போர்டபிள் டிவைஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது, முழு பீச்சர்களை தெரிந்து கொள்வோம்.
சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கர் அம்சங்கள் (Xiaomi Sound Outdoor Speaker Specifications): இந்த சியோமியின் மெயின் ஸ்பீக்கரில் 20W கிடைக்கும். மேலும், 10W ஆடியோ அவுட் கொண்ட டூயல் லார்ஜ் வூப்பர்கள் வருகின்றன. ஆகவே, 30W ஆடியோ அவுட் பெறலாம். 60Hz முதல் 20KHz வரையில் ஃபிரிகொன்சி ரேஞ்ச் கிடைக்கிறது. 25 மீட்டர்கள் வரையில் ப்ளூடூத் கனெக்டிவிட்டி ரேஞ்ச் கிடைக்கும்.
இதற்காக ப்ளூடூத் வி5.4 (Bluetooth v5.4) கனெக்டிவிட்டி கொடுக்கப்பட்டுள்ளது. ஆகவே, ஸ்டீரியோ பேரிங் (Stereo Pairing), டிடபுள்யூஎஸ் பேரிங் (TWS Pairing) செய்து கொள்ள முடியும். அதேபோல மல்டி-ஸ்பீக்கர் (Multi Speaker) சப்போர்ட் கிடைக்கிறது. மேலும், ஹேண்ட்-ப்ரீ காலிங் சப்போர்ட் கிடைக்கிறது. இந்த ஸ்பீக்கரில் பேட்டரி சிஸ்டம் பக்காவாகவே இருக்கிறது.
ஆகவே, 12 மணி நேரங்கள் பேக்கப் கொடுக்கும்படி 2600mAh பேட்டரி பேக் செய்யப்பட்டுள்ளது. இந்த பேட்டரிக்கு 15W ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) சப்போர்ட் கிடைக்கிறது. சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரானது, IP67 வாட்டர் ப்ரூஃப் கொண்டிருக்கிறது. ஆகவே, அவுட்டருக்கு ஏற்படி குவாலிட்டியாக இருக்கிறது. பேர், வால்யூம் கன்ட்ரோல்கள் உள்ளன.
இந்த சியோமி சவுண்ட் அவுட்டோர் ஸ்பீக்கரின் விலை ரூ.3999ஆக இருக்கிறது. ஆனால், அறிமுக சலுகையில் வெறும் ரூ.3,499 பட்ஜெட்டில் கிடைக்க இருக்கிறது. பிளிப்கார்ட் (Flipkart), எம்ஐ (mi) மற்றும் சியோமி ரீடெயில் ஸ்டோர்களில் (Xiaomi Retail Stores) விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது. வரும் டிசம்பர் 13ஆம் தேதி முதல் விற்பனை தொடங்குகிறது.
ஆடியோ பிரியர்களிடையே போர்டபிள் ஸ்பீக்கர்கள் மிகப்பெரும் வரவேற்பை பெற்று வருகின்றன. பேட்டரி வருவதால், அவுட்டோர் அல்லது தேவைப்படும் இடத்துக்கு எடுத்து சென்று பயன்படுத்த முடிகிறது. வயர்லெஸ் கனெக்டிவிட்டி கிடைப்பதால், மொபைல், லேப்டாப் போன்ற டிவைஸ்களின் எளிதாக கனெக்ட் செய்து அவுட்புட் பெற முடிகிறது.


Click it and Unblock the Notifications








