அதிருதுல.,சும்மா வீடே தியேட்டர்தான்: ரூ.15,499 முதல் சியோமி ஸ்மார்ட்டிவி அறிமுகம்:ஓஎல்இடி விஷன் பார்வை அனுபவம்

|

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ இந்தியாவில் மூன்று அளவுகளில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்டிவி ஓஎல்இடி விஷன் டிவியை அறிமுகம் செய்திருக்கிறது. சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.15,499 ஆக இருக்கிறது. அதேபோல் சியோமி ஓஎல்இடி விஷன் டிவியின் விலை ரூ.89,999 ஆக இருக்கிறது.

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ முழு எச்டி தெளிவுத்திறன் உடன் வருகிறது. சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ ஆனது இந்தியாவில் சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி பேட் 5 உள்ளிட்ட சாதனங்களை ஏப்ரல் 27 (இன்று) சியோமி நெக்ஸ்ட் நிகழ்வில் அறிமுகம் செய்திருக்கிறது. சீன நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்டிவி ஆனது 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவியானது டிடிஎஸ் எக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவு உள்ளிட்ட அம்சங்களைக் கொண்டிரு்ககிறது. சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சாதனத்துடன் சியோமி ஓஎல்இடி விஷன் டிவியை அறிமுகப்படுத்தி இருக்கிறது. புதிய சியோமி டிவி ஆனது நிறுவனத்தின் மெலிதான டிவியாக இருக்கும் என கூறப்படுகிறது.

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ, சியோமி ஓஎல்இடி விஷன் டிவி இந்திய விலை

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ, சியோமி ஓஎல்இடி விஷன் டிவி இந்திய விலை

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சாதனத்தின் 32 இன்ச் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.15,499 என கிடைக்கிறது. அதேபோல் சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சாதனத்தின் 40 இன்ச் வேரியண்ட் ஆனது இந்தியாவில் ரூ.22,999 என கிடைக்கிறது. சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ ஸ்மார்ட்டிவியானது 43 இன்ச் வேரியண்ட் விலை ரூ.25,999 என கிடைக்கிறது. இந்த மூன்று மாடல்கள் டிவிகளையும் எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட்கள் மூலம் ஈசி இஎம்ஐ விருப்பங்கள் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.2000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ 32 இன்ச் மற்றும் 43 இன்ச் மாடல்களானது இந்தியாவில் பிளிப்கார்ட், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் கடைகள் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை கடைகள் மூலம் வாங்குவதற்கு கிடைக்கும். இந்த டிவியை ஏப்ரல் 30 மதியம் 12 மணிமுதல் வாங்கலாம். இந்தியாவில் சியோமி ஓஎல்இடி விஷன் டிவியானது 55 இன்ச் அளவோடு கிடைக்கிறது. இந்த விலை ரூ.89,999 என கிடைக்கிறது. எச்டிஎஃப்சி வங்கி கிரெடிட் கார்ட் மற்றும் ஈசி இஎம்ஐ விருப்பம் மூலம் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.6000 தள்ளுபடி வழங்கப்படுகிறது. சியோமி ஓஎல்இடி டிவியானது அமேசான், பிளிப்கார்ட், எம்ஐ.காம், எம்ஐ ஹோம் கடைகள் மற்றும் சில்லறை விற்பனையாளர்கள் கடைகளில் மே19 ஆம் தேதி மதியம் 12 மணி முதல் இந்த சாதனம் கிடைக்கும். இந்த டிவியை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மூன்று வருட இலவச உத்தரவாதம் கிடைக்கும்.

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சிறப்பம்சங்கள்

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ சிறப்பம்சங்கள்

சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ ஆனது மூன்று அளவுகளில் கிடைக்கிறது. இது 32 இன்ச், 40 இன்ச் மற்றும் 43 இன்ச் அளவுகளில் கிடைக்கிறது. இது முழு எச்டி தெளிவுத் திறன் ஆதரவைக் கொண்டிருக்கிறது. 32 இன்ச் டிவியானது எச்டி ரெடி டிஸ்ப்ளே உடன் கிடைக்கிறது. இது ஆண்ட்ராய்டு 11 அடிப்படையாகக் கொண்டு இயக்கப்படுகிறது. இது குவாட்கோர் கார்டெக்ஸ் ஏ55 சிபியூ மற்றும் 1.5 ஜிபி ரேம் ஆதரவோடு வருகிறது. இந்த ஸ்மார்ட்டிவி ஆனது டிடிஎஸ் எக்ஸ், டிடிஎஸ் விர்ச்சுவல் எக்ஸ் மற்றும் டால்பி ஆடியோ ஆதரவோடு வருகிறது. இது 24 வாட்ஸ் ஆடியோ வெளியீட்டைக் கொண்டிருக்கிறது.

சியோமி ஓஎல்இடி விஷன் டிவி சிறப்பம்சங்கள்

சியோமி ஓஎல்இடி விஷன் டிவி சிறப்பம்சங்கள்

சியோமி ஓஎல்இடி விஷன் டிவி சிறப்பம்சங்கள் குறித்து பார்க்கையில், இது பேட்வால் அம்சத்தோடு இயங்குகிறது. இது 97 சதவீத டிஸ்ப்ளே டூ உடல் விகிதத்தைக் கொண்டிருக்கிறது. இது பெசல் லெஸ் வடிவமைப்புடன் வருகிறது. ஓஎல்இடி டிவியானது 55 இன்ச் டிஸ்ப்ளே அளவோடு (3,840x2,160 பிக்சல்கள்) கூர்மையான பார்வை அனுபவத்தை வழங்குகிறது. இது 10 பிட் வண்ண ஆதரவைக் கொண்டிருக்கிறது. இது 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கிறது. இது டால்பி விஷன் ஐக்யூ ஆதரவை உள்ளடக்கி இருக்கிறது. இது டிசிஐ-பி3 வண்ண வரம்புடன் வருகிறது. இந்த சாதனத்தின் ஆடியோ 30 வாட்ஸ் ஆடியோ வெளியீட்டைக் கொண்டிருக்கின்றன.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Xiaomi SmartTV 5A, Xiaomi OLED Vision SmartTV Launched: Price, Specs Details

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X