என்ஜாய் மக்களே- சியோமி ஸ்மார்ட்போன் பயனர்களா நீங்கள்: மேம்பட்ட, புதிய அட்டகாச செய்தி உங்களுக்காக இதோ!

|

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் பிராண்டுகளில் ஒன்று சியோமி ஸ்மார்ட்போன் ஆகும். சியோமி ஸ்மார்ட்போன்களின் பெரும்பகுதி பட்ஜெட் மற்றும் இடைநிலை ஸ்மார்ட்போனாகவே இருக்கிறது. சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு இருக்கிறது. எம்ஐயூஐ என்பது சியோமியின் சொந்த யூஐ ஆகும். நிறுவனம் ஆண்ட்ராய்டு அடிப்படையிலான எம்ஐயூஐ ஸ்கின் ஓஎஸ் அடிப்படையிலான ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்துகிறது. சமீபத்திய புதிய ஸ்மார்ட்போன்கள் எம்ஐயூஐ 12 உடன் வெளியிப்படும் எனவும் எம்ஐயுஐ 12 அப்டேட் விரைவில் வரும் என்பதும் கூறப்படுகிறது.

எம்ஐயுஐ 13 அப்டேட்

எம்ஐயுஐ 13 அப்டேட்

உங்களிடம் குறிப்பிட்ட இந்த ஸ்மார்ட்போன்கள் இருந்தால் இந்த போன் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் வகையிலான அப்டேட் வழங்கப்பட இருக்கிறது. அது எம்ஐயுஐ 13 ஆகும். சியோமி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட எம்ஐயுஐ 13 அப்டேட்டை விரைவில் வழங்கப்பட இருக்கிறது. முதற்கட்டமாக மொத்தம் ஒன்பது சியோமி ஸ்மார்ட்போன்களுக்கு எம்ஐயுஐ 13 அப்டேட் இந்த ஆண்டு இறுதிக்குள் வெளியிடப்படும் என சியோமி சிஇஓ லீ ஜுன் தெரிவித்துள்ளார். புதிய அப்டேட்டின் வெளியீட்டு தேதியை நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தற்போது வரை வெளியிடவில்லை. இந்த அப்டேட் விரைவில் வெளியிடப்படும் எனவும் டிசம்பரில் இந்த போன்கள் லேட்டஸ்ட் அப்டேட்டை பெறும் எனவும் அறிக்கை தெரிவிக்கிறது. இந்த அப்டேட்டை பெறும் குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களை பார்க்கலாம்.

சியோமி எம்ஐ பிரிவு

சியோமி எம்ஐ பிரிவு

புதிய எம்ஐயுஐ 13 அப்டேட் முதலில் சியோமி எம்ஐ பிரிவில் இருக்கும் குறிப்பிட்ட சாதனங்களுக்கு கிடைக்கும். எம்ஐயுஐ 13 ஆரம்பரத்தில் சியோமி எம்ஐ மிக்ஸ் 4, சியோமி எம்ஐ11, சியோமி எம்ஐ11 ப்ரோ, சியோமி எம்ஐ 11 அல்ட்ரா, சியோமி எம்ஐ 11 லைட் மற்றும் சியோமி எம்ஐ 10 எஸ் ஆகியவைகளுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. சியோமி போன்களை தவிர சில சிறந்த ரெட்மி போன்களும் அப்டேட்டை பெறும் என அறிகுறிகள் தெரிவிக்கின்றன.

குறிப்பிட்ட போன்களுக்கு மட்டுமே அப்டேட்

குறிப்பிட்ட போன்களுக்கு மட்டுமே அப்டேட்

எம்ஐயுஐ 13 அப்டேட்டை பெறக்கூடிய ரெட்மி ஸ்மார்ட்போன்களில் ரெட்மி கே40, ரெட்மி கே40 ப்ரோ மற்றும் ரெட்மி கே40 ப்ரோ ப்ளஸ் ஆகிய சாதனங்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆரம்பத்தில் இந்த அப்டேட் சில போன்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது பிறகு படிப்படியாக அடுத்த மாடல்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. எம்ஐயுஐ 13 அப்டேட் விரைவில் புதிய போன்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது. அதேபோல் ஆண்ட்ராய்டு 12 அடிப்படையிலான எம்ஐயுஐ 13 அடுத்து வரவிருக்கும் ஸ்மார்ட்போன்களுக்கு கிடைக்கும் என கூறப்படுகிறது.

போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியல்

ஆரம்பத்தில் எம்ஐயுஐ 13 அப்டேட் பெறும் போக்கோ ஸ்மார்ட்போன்களின் பட்டியல் குறித்து பார்க்கையில், அதில் போக்கோ ஸ்மார்ட்போன்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. சியோமியின் துணை பிராண்டாக போக்கோ இருந்தது. பின்னர் நிறுவனத்தால் சுயாதீன பிராண்டாக மாற்றப்பட்டது. இருப்பினும் இது சியோமிக்கு சொந்தமானது ஆகும் எனவே எம்ஐயுஐ இன்னும் போக்கோ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் ஓஎஸ் ஆக இருக்கிறது. முதல் கட்டத்தில் அப்டேட் பெறும் பட்டியலில் போக்கோ ஸ்மார்ட்போன்கள் இல்லாத காரணத்தால் அவை அடுத்த கட்டத்தில் சேர்க்கப்படும் என கூறப்படுகிறது. அதேபோல் போக்கோவின் வரவிருக்கும் மாடல்களுக்கு எம்ஐயுஐ 13 அப்டேட் கிடைக்கும் என கூறப்படுகிறது.

பல வடிவமைப்பு மாற்றங்கள்

பல வடிவமைப்பு மாற்றங்கள்

எம்ஐயுஐ 13 புதுப்பிப்பில் என்ன இருக்கும் என்று அம்சத்தை பார்க்கையில், இதில் பல வடிவமைப்பு மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முதலாவதாக எம்ஐயுஐ 13 அப்டேட் ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ்-ஐ அடிப்படையாகக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. எம்ஐயுஐ அப்டேட் ஆனது பல புதிய காட்சி மாற்றங்கள், மேம்படுத்தப்பட்ட யுஐ ஆகியவற்றைக் கொண்டிருக்கும் என அறிக்கைகள் தெரிவிக்கின்றன. இருப்பினும் இதுகுறித்து சியோமி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐஓஎஸ் போன்ற விட்ஜெட்கள்

ஐஓஎஸ் போன்ற விட்ஜெட்கள்

ஐஓஎஸ் போன்ற விட்ஜெட்களை எம்ஐயுஐ 13-க்கு கொண்டுவர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எம்ஐயுஐ அப்டேட்டில் முன்பக்க கேமரா உதவியாளர், நினைவக நீட்டிப்பு மற்றும் ஸ்மார்ட் டூல்பாக்ஸ் போன்ற அம்சங்களை கொண்டு வரும் என கூறப்படுகிறது. வரவிருக்கும் சியோமி 13 போன் அடுத்த தலைமுறை ஸ்னாப்டிராகன் 898 சிப்செட் மூலம் இயக்கப்படும் என கூறப்படுகிறது. இதில் எம்ஐயுஐ 13 அப்டேட் இருக்கும் என கூறப்படுகிறது. யுஐ உடன் வரும் முதல் சாதனமாக சியோமி 12 இருக்கும் என அறிகுறிகள் தெரிவிக்கின்றன.

உலக சந்தையில் முன்னணி பிராண்ட்

உலக சந்தையில் முன்னணி பிராண்ட்

சியோமி உலக சந்தையில் முன்னணி பிராண்டாக இருக்கிறது. அதிக எண்ணிக்கையிலான ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து இந்திய சந்தையை ஆக்கிரமித்த நிறுவனமாக சியோமி இருக்கிறது. புதிய ஓஎஸ் அப்டேட்டில் சிறந்த அம்சங்களை நிறுவனம் கொண்டு வரும் என நிறுவனம் கூறுகிறது. சியோமியின் துணை பிராண்டான ரெட்மி சமீபத்திய சாதனங்களாக ரெட்மி நோட் 11, ரெட்மி நோட் 11 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 11 ப்ரோ ப்ளஸ் ஆகியவை இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. ரெட்மி நோட் 11டி இந்த மாத இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போனுக்கு பிற சந்தையில் அமோக வரவேற்பு இருந்த நிலையில், இந்தியாவிலும் சிறந்த வரவேற்பு கிடைக்கும் என கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Smartphones Soon to Get Miui 13 Updates: Testing in Progress

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X