Home
News

பிரமாண்டம்னா அது இந்த ஸ்மார்ட் டிவி தான்! சியோமியின் பிக் டிவி எக்ஸ் சீரிஸ் ரெடி டோய்..

சியோமி (Xiaomi) நிறுவனம் இன்று புதிதாக சியோமி ஸ்மார்ட் டிவி ஏ-சீரிஸ் (Xiaomi Smart TV A Series) சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது. இந்த சீரிஸின் கீழ் நிறுவனம், இப்போது 32', 40' மற்றும் 43' இன்ச் மாடல்களை அறிமுகம் செய்துள்ளது.

இது ஒரு புறம் இருக்க, சியோமி நிறுவனம் மிக விரைவில் பிரமாண்டமான மற்றொரு ஸ்மார்ட் டிவி சீரிஸை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின் படி, சியோமி நிறுவனம் மிகவும் பிரமாண்டமான உயர் தர ஸ்மார்ட் டிவி மாடல்களை அதன் சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் (Xiaomi Smart TV X Series) வரிசையின் கீழ் அறிமுகம் செய்யவுள்ளதாக இப்போது டீஸ் செய்துள்ளது.

பிரமாண்டம்னா அது இந்த ஸ்மார்ட் டிவி தான்! சியோமியின் பிக் டிவி ரெடி!

இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல்களை நிறுவனம் வரும் ஆகஸ்ட் 1 ஆம் தேதி அறிமுகம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இத்துடன் நிறுவனம், ரெட்மி 12 (Redmi 12) மற்றும் ரெட்மி வாட்ச் 3 ஆக்டிவ் (Redmi Watch 3 Active) போன்ற சாதனங்களை அறிமுகம் செய்யுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது புதிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு 43', ​​50' மற்றும் 55' இன்ச் அளவுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட 4K TV மாடல்களின் வாரிசாக புதிய சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்களை அறிமுகம் செய்கிறது என்று அறிவித்துள்ளது. இது கடந்த ஏப்ரல் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட Xiaomi Smart TV X Pro மாடல்கள் போன்ற அம்சங்களை கொண்டிருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய சியோமி ஸ்மார்ட் டிவி எக்ஸ் சீரிஸ் மாடல்கள் 32' இன்ச், 40' இன்ச் மற்றும் 43' இன்ச் போன்ற டிஸ்பிளே அளவுகள் மற்றும் பெரிய 55' இன்ச் மற்றும் 65' இன்ச் மாடல்களில் அறிமுகம் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டிவியில் உள்ள அம்சங்கள் எல்லாம் 'பிக் (Big)' என்ற வார்த்தையுடன் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.

இந்த புதிய ஸ்மார்ட் டிவி மாடல் பெரிய மற்றும் போல்டானவடிவமைப்பைக் கொண்டிருக்கும், என்று கூறப்படுகிறது. இதன் டிஸ்பிளே மற்றும் வீடியோ அனுபவம் உங்களின் பொழுதுபோக்கு அம்சங்களை கட்டாயம் பிரமாண்டமான அனுபவத்தை வழங்க போகிறது என்று கூறப்படுகிறது. தியேட்டர் போன்ற ஆடியோ அனுபவத்திலும் இது பிக் அம்சத்தை கொண்டிருக்கும்.

பிக் என்ற பெயருக்கு ஏற்றார் போல், இதன் பெர்பார்மென்ஸ் மற்றும் செயல்திறன் போன்ற அம்சங்களும் அட்டகாசமாக இருக்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல், இந்த டிவிகள் சேனல் தேர்வில் பெரியதாக இருக்கும் என்று நிறுவனம் கூறுகிறது. பெரிய என்ற இடங்களில் எல்லாம் நிறுவனம் பிக் என்ற வார்த்தையை பயன்படுத்தியுள்ளது.

இந்த ஸ்மார்ட் டிவியின் வேறு எந்த விவரக்குறிப்புகள் அல்லது அம்சங்களையும் நிறுவனம் இன்னும் வெளிப்படுத்தவில்லை. ஆனால், டிவி மாடல்கள் அடுத்த வாரம் அதிகாரப்பூர்வமாக வருவதற்கு முன்பு, வரும் நாட்களில் டிவிகளைப் பற்றிய கூடுதல் விவரங்களை நாம் தெரிந்துகொள்ள முடியும் என்பதனால் தொடர்ந்து இணைந்திருங்கள்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV X series The Big Feature Tv Launch Confirmed in India On August 1
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X