ஏப்ரல் 27 சியோமி திருவிழா- அறிமுகமாகும் சியோமி ஸ்மார்ட்டிவி 5ஏ: சுவரில் ஒட்டியது போல் இருக்கும்!

|

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ இந்தியாவில் ஏப்ரல் 27 அன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ஆனது குறைவான பெசல் வடிவமைப்பைக் கொண்டிருக்கிறது. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ ஆனது பேட்ச் வால் யூஐ மூலம் இயக்கப்படுகிறது.

பிக் ஸ்பிரிங் சம்மர் ஃபிளாக்ஷிப் நிகழ்வு

பிக் ஸ்பிரிங் சம்மர் ஃபிளாக்ஷிப் நிகழ்வு

சியோமி நிறுவனம் ஏப்ரல் 27 ஆம் தேதி இந்தியாவில் பிக் "ஸ்பிரிங் சம்மர் ஃபிளாக்ஷிப் நிகழ்வை" நடத்த இருக்கிறது. இந்த நிகழ்வில் சியோமி நிறுவனம் சியோமி 12 ப்ரோ மற்றும் சியோமி பேட் 5 சாதனத்தை வெளியிட இருக்கிறது. தற்போது பிராண்ட் ஒரு புதிய ஸ்மார்ட்டிவியை அறிமுகப்படுத்துவதாக அறிவித்துள்ளது. சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ சாதனம் குறித்து பிராண்ட் அதிக தகவலை வெளியிடவில்லை, தற்போது சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ வடிவமைப்பு குறித்து டீஸ் செய்யப்பட்டுள்ளது.

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

சியோமி ஸ்மார்ட் டிவி 5ஏ

சியோமி தற்போது ஸ்மார்ட் டிவி 5ஏ சாதனத்துக்கான டீஸரை அதன் இணையதளத்தில் கொண்டிருக்கிறது. அதன் வடிவமைப்பு மற்றும் சிப்செட்டை தவிர ஸ்மார்ட்டிவியை குறித்து அதிகத் தகவல் வெளிப்படுத்தவில்லை. ஸ்மார்ட் டிவி 5ஏ மேற்புறம், வலது மற்றும் இடது பக்கங்களில் மிக மெல்லிய பெசல்களை கொண்டிருக்கும் இதில் தடிமனான சியோமி பிராண்டிங் இடம்பெறும் என டீஸர் தகவல் தெரிவிக்கிறது. கூடுதல் விவரங்கள் வெளிப்படுத்தப்படாத நிலையில், இந்த ஸ்மார்ட் டிவி "ஏ55" சிப் செட் உடன் பேக் செய்யப்பட்டிருக்கும் என கூறப்படுகிறது.

ஆண்ட்ராய்ட் ஆதரவுடன் ஸ்மார்ட் டிவி

டீஸர் படங்களில் சியோமியின் பேட்ச்வால் யூஐ அம்சத்தைக் கொண்டிருக்கும். இது ஆண்ட்ராய்ட் ஆதரவை அடிப்படையாகக் கொண்டது. அதேபோல் டேப்லெட் என்று பார்க்கையில், ஆகஸ்ட் மாதம் சீனாவில் வெளியான சியோமி டேப்லெட் விவரக்குறிப்புகள் உடன் வரவிருக்கும் டேப்லெட் விவரக்குறிப்புகள் ஒத்துப் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் ஆனது 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம், டால்பி விஷன் மற்றும் எச்டிஆர் 10 ஆதரவைக் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

டபிள்யூ க்யூஎச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

டபிள்யூ க்யூஎச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே

இது 11 இன்ச் டபிள்யூ க்யூஎச்டி ப்ளஸ் டிஸ்ப்ளே (1,600×2,560 பிக்சல்) ட்ரூடோன் டிஸ்ப்ளே இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த டேப்லெட் ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 860 எஸ்ஓசி ஆதரவோடு வரும் என கூறப்படுகிறது. இந்த டேப்லெட் 6ஜிபி ரேம் ஆதரவை கொண்டிருக்கும் எனவும் சியோமி பேட் 5 256 ஜிபி வரை உள்சேமிப்பு வசதியைக் கொண்டிருக்கும் எனவும் கூறப்படுகிறது.

சியோமி 12 ப்ரோ சாதனம்

சியோமி 12 ப்ரோ சாதனம்

சியோமி 12 ப்ரோ சாதனத்தை பொறுத்தவரை, இந்த சாதனம் க்யூஎச்டி ப்ளஸ் (3200 x 1440 பிக்சல்கள்) தீர்மானம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இந்த சாதனம் 6.73 இன்ச் அமோலெட் எல்டிபிஓ சாம்சங் இ5 டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் 120 ஹெர்ட்ஸ் புதுப்பிப்பு வீதம் 480 ஹெர்ட்ஸ் டச் மாதிரி வீதத்தைக் கொண்டிருக்கிறது. இது 100% டிசிஐ-பி3 வண்ண வரம்பு கவரேஜ் ஆகியவற்றைக் கொண்டிருக்கிறது. இந்த சாதனம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 எஸ்ஓசி ஆதரவோடு 12 ஜிபி ரேம் அம்சத்தைக் கொண்டிருக்கிறது.

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போன்

சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போன்

அதேபோல் சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போன் வியாழக் கிழமை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த சாதனம் செப்டம்பர் 2021-ல் அறிமுகம் செய்யப்பட்ட சிவி ஸ்மார்ட்போனின் வரிசையில் வருகிறது. செல்பி விரும்பும் நபர்களை மையமாக வைத்து இந்த ஸ்மார்ட்போன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சாதனம் 2எக்ஸ் ஜூம் மற்றும் ஆட்டோஃபோகஸ் போன்ற அம்சங்கள் உடன் 32 எம்பி செல்பி கேமராவைக் கொண்டிருக்கிறது. 4டி லைட் சேஸிங் பியூட்டி மற்றும் நேட்டிவ் பியூட்டி போர்ட்ரெய்ட் 2.0 தொழில்நுட்பங்கள் போன்ற பல ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது. ஸ்மார்ட்போனானது "மிராக்கிள் சன்ஷைன்" வடிவமைப்பு ஆதரவோடு வருகிறது. இது டைமண்ட் பூச்சு போன்ற தனித்துவமான தோற்றத்தை கொண்டிருக்கிறது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 32 எம்பி செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 778ஜி ப்ளஸ் எஸ்ஓசி வசதியோடு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சியோமி சிவி 1எஸ் ஸ்மார்ட்போனானது 55 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியோடு 4500 எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்கிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Smart TV 5A Going to Launch on April 27 in Big Spring Summer Flagship Event

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X