கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

|

Xiaomi நிறுவனம் இன்று ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 என்ற புதிய சாதனத்தை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 பற்றிய அம்சங்கள், விலை மற்றும் கிடைக்கும் தன்மையைப் பற்றிய விபரங்களை இந்த பதிவில் இருந்து தெளிவாகப் பார்க்கலாம். டேபிள் ஃபேன் போன்று இருக்கும் இதன் டிசைனை பார்த்து சாதாரணமாக நினைத்துவிடாதீர்கள். நீங்கள் இதுவரை பயன்படுத்திய எந்த ஸ்டாண்டிங் ஃபேன் சாதனமும் இந்தளவு குறைந்த கரண்டில் இயங்கியிருக்க முடியாது.

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 அறிமுகம்

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 அறிமுகம்

அந்த அளவிற்கு இந்த ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 டிவைஸில் சியோமி நிறுவனம் பல புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. உங்கள் வீட்டில் ஒரு டேபிள் பேன் அல்லது ஸ்டாண்டிங் பேன் தேவைப்படுகிறது என்றால், உங்களுக்கான பெஸ்ட் சாய்ஸ் பேனில் இந்த சாதனம் இருக்க வேண்டும். இதன் விலை கூட உங்கள் பட்ஜெட்டிற்குள் கிடைக்கும் படி தான் இருக்கிறது. நங்கள் முன்பே சொன்னது போல, இந்த ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் வெறும் 15W-க்கும் குறைவான மின்சாரத்தில் இயங்குகிறது.

புதிய சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 விலை என்ன?

புதிய சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 விலை என்ன?

இதனால், உங்களுக்கான மாதாந்திர கரண்ட் பில் கட்டணம் வெகுவாக குறைகிறது. பார்ப்பதற்கும் ஸ்டைலான தோற்றத்துடன், மிகவும் குறைந்த எடையுடனும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் ஒட்டுமொத்த எடையே வெறும் 3 கிலோ மட்டும் தான். இந்த புதிய சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் பேன் 2 சாதனத்தின் விலை வெறும் ரூ.5,999 மட்டுமே. தற்போது, இந்த சாதனம் Mi India இணையதளத்தில் வாங்குவதற்குக் கிடைக்கிறது. இது வெள்ளை நிறத்தில் விற்பனைக்குக் கிடைக்கிறது.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 அம்சங்கள்

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 அம்சங்கள்

புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 டூயல் பிளேடு வடிவமைப்புடன் சைலன்ட் BLDC மோட்டாரைக் கொண்டுள்ளது. இது மற்ற ஸ்டாண்டிங் ஃபேன் சாதனங்களை விட குறைந்தளவு மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. சியோமி நிறுவனத்தின் தகவலின் படி, இது வெறும் 15Wக்குக் குறைந்த அளவிலான மின்சாரத்தை மட்டுமே பயன்படுத்துகிறது. சந்தையில் இருக்கும் அலுமினியம் வயர் மோட்டாரை விட, இந்த மோட்டார் அதிக இயக்க திறன் மற்றும் நீண்ட சேவையை வழங்கும்.

சத்தமே இல்லாமல் ஃபாஸ்டா சில்லனு காத்து

சத்தமே இல்லாமல் ஃபாஸ்டா சில்லனு காத்து

சியோமி ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 சாதனத்தின் 7+5 விங் வடிவ பிளேடுகள் வழங்கப்பட்டுள்ளது. இது அதிக சக்தி வாய்ந்த, குளிர்ச்சியான காற்றோட்டத்தை அதிகரிக்கும் படி நிறுவனம் வடிவமைத்து உருவாக்கியுள்ளது. இது குறைந்தபட்ச நாய்ஸ் அளவை கொண்டுள்ளது. குறிப்பாக இது 30.2 dB இல் இயங்குகிறது. அதே நேரத்தில் இந்த ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 சாதனத்தின் அதிகபட்ச நாய்ஸ் அளவு 55.8 dB என்ற அளவை மட்டுமே எட்டுகிறது. இதனால் உங்கள் உறக்கம் கெடாது.

Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?Asus-ஆ இப்படி செஞ்சது! Asus ZenFone 9 போனின் 'அந்த' வீடியோ லீக் ஆகிடுச்சா? அச்சச்சோ அப்புறம் என்னாச்சு?

இந்த பேனின் எடை கூட கம்மி தானா?

இந்த பேனின் எடை கூட கம்மி தானா?

சியோமியின் இந்த புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 தயாரிப்பு மிகவும் இலகுவானது. இது வெறும் 3 கிலோ மட்டுமே எடையுள்ளதாக இருக்கிறது. இது மிகவும் சிறியதாகவும் உள்ளது. Xiaomi இன் நேச்சுரல் ப்ரீஸ் சிமுலேஷன் அல்காரிதம் (Natural Breeze Simulation Algorithm) மூலம் சத்தமில்லாத மற்றும் இடையூறு இல்லாத அனுபவத்தை மிகவும் மென்மையான, இயற்கையான தென்றல் போன்ற காற்றுடன் வழங்குகிறது. இந்த புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 இப்படிப் பல வழிகளில் மேம்படுத்தப்பட்டுள்ளது.

Xiaomi Home App மூலம் கூட இயக்கலாமா?

Xiaomi Home App மூலம் கூட இயக்கலாமா?

Xiaomi Smart Standing Fan 2 டிவைஸை நீங்கள் 6 ஸ்டேப் அசெம்ப்ளி செயல்முறை மூலம் தனித்தனியாகப் பிரித்து எடுக்கலாம். இது 140° பக்கவாட்டிலும் மற்றும் 39° சுழலும் படி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சியோமி புதிய ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 உங்களுக்கு வாய்ஸ் கண்ட்ரோல் அம்சத்தைக் கூட வழங்குகிறது. அலெக்சா மற்றும் கூகுள் வாய்ஸ் அசிஸ்டன்ட் மூலம் உங்கள் குரலை வைத்தே இந்த ஃபேனை கட்டுப்படுத்தலாம். Xiaomi Home App மூலம் இந்த பேனின் வேகத்தை 1 முதல் 100 வரை அமைக்கலாம்.

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Standing Fan 2 Launched in India For Rs 5999

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X