இது வெறும் Xiaomi ஸ்பீக்கர் இல்ல! அதுக்கும் மேல! வாய்ஸ் மூலம் கூட "இதையெல்லாம்" கண்ட்ரோல் செய்யலாமா? அடடே!

|

Xiaomi நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து சில புதிய கேட்ஜெட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் கடந்த வாரம், சியோமி நிறுவனம் Xiaomi 360° Home Security Camera 1080p 2i என்ற மலிவு விலை செக்யூரிட்டி ஸ்மார்ட் கேமராவை அறிமுகம் செய்தது. அதனைத் தொடர்ந்து அடுத்தபடியாக நிறுவனம் இந்தியாவில் Xiaomi Smart Standing Fan 2 என்ற சாதனத்தையும் அறிமுகம் செய்தது. இப்போது நிறுவனம் புதிய ஸ்பீக்கர் டிவைஸை அறிமுகம் செய்துள்ளது.

Xiaomi IR கண்ட்ரோல் உடன் ஸ்பீக்கர்

Xiaomi IR கண்ட்ரோல் உடன் ஸ்பீக்கர்

Xiaomi இந்தியாவில் புதிதாக IR கண்ட்ரோல் உடன் இயங்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் என்ற புதிய ஆடியோ தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் பெயர் குறிப்பிடுவது போல, இந்த ஸ்பீக்கர் ஒரு ஐஆர் பிளாஸ்டருடன் வருகிறது. இது பயனருக்குக் குரல் வழியாக வீட்டில் உள்ள சில சாதனங்களைக் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது. ஆம், உங்கள் வீட்டில் இருக்கும் மற்ற டிவைஸ்களை கூட நீங்கள் இதன் மூலம் கட்டுப்படுத்தலாம். இது சிங்கிள் ஸ்பீக்கர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi ஸ்மார்ட் IR ஸ்பீக்கரின் விலை என்ன?

Xiaomi ஸ்மார்ட் IR ஸ்பீக்கரின் விலை என்ன?

இருப்பினும், இதில் உள்ள ஒரு பிரத்தியேக அம்சத்தின் மூலம் நீங்கள் இதை ஸ்டீரியோ சவுண்ட் அனுபவத்திற்காகவும் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த சோலோ ஸ்பீக்கர் உடன் மற்றொரு சிங்கிள் ஸ்பீக்கரை இணைத்து ஸ்டீரியோ அனுபவத்தை அனுபவிக்க இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் உங்களை அனுமதிக்கிறது. IR கட்டுப்பாட்டுடன் கூடிய புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்பீக்கரின் விலை வெறும் ரூ.4,999 விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!மனிதகுலம் இதுவரை கண்டிராத கோணத்தில் கிரகம் 5! மூன்று நிலவுகளை காட்டிய James Webb Space Telescope!

எங்கிருந்து இந்த டிவைஸை வாங்கலாம்?

எங்கிருந்து இந்த டிவைஸை வாங்கலாம்?

இந்த புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் Mi Home Store, Flipkart மற்றும் பிற சில்லறை விற்பனை நிலையங்களில் வாங்குவதற்குக் கிடைக்கும் என்று சியோமி அறிவித்துள்ளது. இது பிளாக் வண்ண விருப்பத்தில் மட்டும் வருகிறது. IR கண்ட்ரோல் உடன் கூடிய Xiaomi ஸ்மார்ட் ஸ்பீக்கர் 1.5' இன்ச் ஃபுள் ரேஞ் ஸ்பீக்கராகும். இதில் ஃபார் பீல்ட் தொலைதூர மைக்ரோஃபோன்களை நிறுவனம் கொண்டுள்ளது. இதன் மூலம், பயனர் வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் அவர்களுக்குத் தேவையான கட்டளைகளை வழங்க முடியும்.

ஐஆர் கண்ட்ரோல் கொண்ட ஸ்பீக்கர்

ஐஆர் கண்ட்ரோல் கொண்ட ஸ்பீக்கர்

நாங்கள் முன்பே சொன்னது போல், ஸ்டீரியோ சவுண்ட் அம்சத்தை வழங்க மற்றொரு ஸ்பீக்கருடன் இந்த ஸ்பீக்கரை நீங்கள் இணைத்துக் கொள்ளலாம். முன்பக்கத்தில், ஸ்பீக்கரில் LED டிஜிட்டல் கிளாக் டிஸ்பிளே உள்ளது. இந்த ஸ்மார்ட் ஸ்பீக்கர் ஐஆர் கண்ட்ரோல் கொண்ட Chromecast செயல்பாட்டையும் கொண்டுள்ளது. பயனர்கள் மற்ற இணக்கமான சாதனங்களின் உள்ளடக்கத்தையும் இதன் மூலம் அனுப்பவிக்க முடியும். இது ஒரு 'ஸ்மார்ட் ஸ்பீக்கர்' என்பதால், இதில் கூகுள் அசிஸ்டண்ட் உட்பொதிக்கப்பட்டுள்ளது.

கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!கம்மி கரண்ட் பில்லுடன் சில்லுனு காத்து வேணுமா? வந்தாச்சு புதிய Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2!

ஆப்ஸ் மூலமாகவும் இதை கட்டுப்படுத்தலாமா?

ஆப்ஸ் மூலமாகவும் இதை கட்டுப்படுத்தலாமா?

இதன் மூலம் வாய்ஸ் அசிஸ்டண்ட் வழியாக மற்ற ஸ்மார்ட் ஹோம் சாதனங்களைக் கட்டுப்படுத்த பயனரை அனுமதிக்கிறது. ஸ்பீக்கரில் உள்ள IR பிளாஸ்டர் மற்ற ஸ்மார்ட் சாதனங்களை Xiaomi Home அல்லது Mi Home ஆப்ஸ் மூலம் பயனரின் ஸ்மார்ட்போனில் கட்டுப்படுத்த அனுமதிக்கிறது என்று நிறுவனம் கூறியுள்ளது. இந்த ஸ்பீக்கர் ஐஆர் கண்ட்ரோலில் வயர்லெஸ் இணைப்புகளை ஆதரிக்க புளூடூத் 5.0 உள்ளது. 12V/1A DC உள்ளீடு மூலம் ஸ்பீக்கருக்கு தேவையான சார்ஜிங் வழங்கப்படுகிறது.

ஸ்மார்ட்டாக மாறி வரும் காலத்திற்கு ஏற்ற டிவைஸ்

ஸ்மார்ட்டாக மாறி வரும் காலத்திற்கு ஏற்ற டிவைஸ்

புதிதாக ப்ளூடூத் ஸ்பீக்கர் வாங்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வாடிக்கையாளர்கள், வெறுமனே ப்ளூடூத் அம்சத்துடன் மட்டும் கிடைக்கும் ஸ்பீக்கர் சாதனங்களை வாங்குவதற்குப் பதிலாக, IR அம்சத்துடன், வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் பிற ஸ்மார்ட் ஹோம் டிவைசைகளையும் சேர்த்து கட்டுப்படுத்தும் இந்த சியோமி ஸ்மார்ட் IR ஸ்பீக்கரை வாங்கி பயன்பெறலாம். உங்களுடைய விருப்பம் எது என்பதை நீங்களே தேர்வு செய்யுங்கள். ஸ்மார்ட்டாக மாறி வரும் காலத்திற்கு ஏற்ற டிவைஸ்களை வாங்குவது சிறந்தது.

திருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2iதிருட்டு பயம் இனி இல்ல..உங்க வீட்டில் 360° டிகிரியும் பாதுகாப்பு! புது Xiaomi ஹோம் செக்யூரிட்டி கேமரா 2i

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2

Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2

சியோமி பிராண்ட் சமீபத்தில் இந்தியாவில் Xiaomi ஸ்மார்ட் ஸ்டாண்டிங் ஃபேன் 2 என்ற சாதனத்தை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய Xiaomi பேன் டூயல் பிளேடு வடிவமைப்புடன் சைலெட்ன் BLDC மோட்டாரைக் கொண்டுள்ளது. இதுவரை சந்தையில் அறிமுகம் செய்யப்படாத பேன்களில் வழங்கப்படும் மின்சார அளவை இந்த பேன் கொண்டுள்ளது. சியோமி மதிப்பீட்டின் படி, இது வெறும் 15Wக்கும் குறைவான மின்சாரத்தில் சிறப்பாகச் செயல்படுகிறது. அத்துடன், இந்த ஸ்மார்ட் பேன் உடைய தரம் மற்றும் திறன்கள் மிகவும் சிறப்பாக இருக்கும் என்பர் நிறுவனம் கூறியுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi Smart Speaker With IR Control Launched in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X