13 ஆம் நம்பர் அவ்வளவு மோசமானதா? Xiaomi கூட ஒதுக்கிடுச்சு.! அடுத்த போன் பெயர் என்ன தெரியுமா?

|

இப்படி ஒரு காரியத்தை சியோமி (Xiaomi) நிறுவனம் செய்யுமென்று யாருமே எதிர்பார்க்கவில்லை. சியோமி நிறுவனம் இதுவரை அதன் ஸ்மார்ட்போன் சீரிஸ் வரிசையில் ஒரு ஆர்டரை தொடர்ந்து பின்பற்றி வருகிறது. அதாவது, அடுத்தடுத்த மாடல்களை, எண் வரிசையில் சரியாக ஒன்றுக்குப் பின் ஒன்றாக அறிமுகம் செய்து வருகிறது. ஆனால், இந்த முறை நிறுவனம் ஒரு நம்பரை மட்டும் முழுமையாக ஸ்கிப் செய்துவிட்டது.

முழுசா ஒரு நம்பரை ஸ்கிப் செய்ததா சியோமி.!

முழுசா ஒரு நம்பரை ஸ்கிப் செய்ததா சியோமி.!

ஆம், சரியாக தான் படித்தீர்கள், சியோமி நிறுவனம் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த Xiaomi 12 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலுக்கு அடுத்தபடியாக, இந்த ஆண்டின் புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடலை Xiaomi 13 என்ற பெயரில் அறிமுகம் செய்யுமென்று தான் பெரிதும் நம்பி இருந்தோம். ஆனால், நிறுவனம் நம்முடைய எதிர்பார்ப்பைத் தாண்டி, அந்தர் பல்டி அடித்துவிட்டது.

Xiaomi இன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

Xiaomi இன் அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்

Xiaomi நிறுவனம் தனது அடுத்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் தொடரை விரைவில் சீனாவில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் பல மாடல்களை உள்ளடக்கியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த வரிசையானது Qualcomm Snapdragon 8 Gen2 SoC உடன் வெளிவரும் என்று நிறுவனம் ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளது.

300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?300 வருஷத்தில் இப்படி ஒரு வைரத்தை பூமியில யாரும் கண்டுபிடிக்கல.! மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Xiaomi 13 என்ற பெயரில் எதிர்பார்க்கப்பட்ட போன் பெயரில் மாற்றமா?

Xiaomi 13 என்ற பெயரில் எதிர்பார்க்கப்பட்ட போன் பெயரில் மாற்றமா?

இருப்பினும், இதுவரை நிறுவனம் சார்பில் இந்த வரவிருக்கும் புதிய பிளாக்ஷிப் மாடல்களின் மார்க்கெட்டிங் பெயரை பிராண்ட் குறிப்பிடவில்லை என்றாலும், கடந்த ஆண்டு Xiaomi 12 என அழைக்கப்பட்ட மாறுபாடுகளைக் கருத்தில் கொண்டு, இது Xiaomi 13 என்ற பெயரில் வெளிவரும் என்று பெரிதும் நம்பப்பட்டது. ஆனால், சமீபத்திய தகவல் வேறொரு தகவலைப் பிரதிபலித்துள்ளது.

ரீடைல் பாக்ஸ் பேக்கிங் விபரங்களில் வேற பெயரா? சியோமியா இப்படி செய்தது?

ரீடைல் பாக்ஸ் பேக்கிங் விபரங்களில் வேற பெயரா? சியோமியா இப்படி செய்தது?

Xiaomi நிறுவனம் இந்த புதிய ஸ்மார்ட்போன் தொடரை சியோமி 13 என்று அழைப்பதற்குப் பதிலாக, Xiaomi 14 என்று பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. வரவிருக்கும் புதிய ஸ்மார்ட்போனின் ரீடைல் பாக்ஸ் பேக்கிங் விபரங்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. இதில், பிராண்டின் வரவிருக்கும் பிரீமியம் மாடல் Xiaomi 14 என்ற பெயருடன் காணப்படுகிறது.

போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! அசுர வேகத்தில் பூமி நோக்கி வரும் சிறுகோள்.!

13 ஆம் நம்பரில் அப்படி என்ன சமாச்சாரம் இருக்கிறது?

13 ஆம் நம்பரில் அப்படி என்ன சமாச்சாரம் இருக்கிறது?

ஆக, சீன ஸ்மார்ட்போன் நிறுவனம் கூட இந்த 13 ஆம் நம்பரை ஒதுக்குவது தெளிவாகத் தெரிகிறது. ஏன் 13 ஆம் நம்பரில் அப்படி என்ன சமாச்சாரம் இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பெரும்பாலானோருக்கு, இதன் பின்னணியில் கூறப்படும் கதை தெரிந்திருக்கும். ஆசியா பகுதியில் 13 நம்பர் லக் இல்லாத மோசமான எண்ணாகக் கருதப்படுகிறது. இந்த எண்ணைப் பெரும்பாலானோர் ஒதுக்குகின்றனர்.

இந்த எண் மீது இந்தியர்களுக்கு பெரிய பயம் கலந்த ஐயம் நீண்ட காலமாக இருக்கிறதா?

இந்த எண் மீது இந்தியர்களுக்கு பெரிய பயம் கலந்த ஐயம் நீண்ட காலமாக இருக்கிறதா?

இன்னும் தெளிவாகச் சொல்லப் போனால், சில அடுக்குமாடி வளாகங்களில் கூட 13வது தளம் 14 ஆம் தளமாக பெயர் மாற்றப்பட்டிருக்கும். அதேபோல், வீடுகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறை எண்களில் கூட இந்த எண் ஒதுக்கப்பட்டிருக்கும். இந்தியர்களுக்கு இந்த எண் மீது ஒரு பெரிய பயம் கலந்த ஐயம் நீண்ட காலமாக இருந்து வருகிறது என்பதும் உண்மையே.

இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!இந்த புது WhatsApp அம்சம் பற்றி தெரிஞ்சா உடனே ட்ரை செய்வீங்க.! Android / iOS ரெண்டுக்கும் உண்டு.!

நேரடியாக 14 ஆம் எண்ணிற்கு ஜம்ப் அடிக்க இது தான் காரணமா?

நேரடியாக 14 ஆம் எண்ணிற்கு ஜம்ப் அடிக்க இது தான் காரணமா?

இதையெல்லாம் அறிந்து தான், சியோமி நிறுவனம் இப்போது அதன் வரவிருக்கும் புதிய பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனின் விற்பனை கெட்டுவிடக்கூடாது என்பதைக் கருத்தில் கொண்டு, 13 ஆம் நம்பரை ஸ்கிப் செய்து, நேரடியாக 14 ஆம் எண்ணிற்கு ஜம்ப் அடித்துவிட்டது போல் தெரிகிறது. உண்மையில், இந்த வியாபார தந்திரம் ஒரு நல்ல முடிவு தான். 13 ஆம் எண்ணை நீக்கியது சிறந்த முடிவாகும்.

13 ஆம் நம்பர் பற்றிய முக்கியமான மேட்டரே இது தான்.!

13 ஆம் நம்பர் பற்றிய முக்கியமான மேட்டரே இது தான்.!

ஆனால், இங்கு நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், மேற்கத்திய நாடுகளில் தான் 13 ஆம் நம்பர் துரதிர்ஷ்டவசமாகக் கருதப்படுகிறது. ஆனால் சீன கலாச்சாரத்தில், 13 ஆம் நம்பர் ஒரு அதிர்ஷ்ட எண் ஆகக் கருதப்படுகிறது. அதாவது சீன கலாச்சாரத்தின் படி, 13 ஆம் நம்பர் 'உறுதியான வளர்ச்சி' அல்லது 'நிச்சயமான வெற்றியை' குறிப்பிடுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஒட்டுமொத்த வீட்டிற்கு ஒட்டுமொத்த வீட்டிற்கு "1" Jio பிளான்.! 17 OTT பலன் இலவசம்.! 3TB டேட்டாவுடன் இன்னும் ஏராளம்.!

சீன கலாச்சாரத்தையே வியாபாரத்திற்காக சியோமி ஒதுக்கிவிட்டதா?

சீன கலாச்சாரத்தையே வியாபாரத்திற்காக சியோமி ஒதுக்கிவிட்டதா?

மக்கள் மனதில் சிறியளவு தயக்கம் கூட இல்லாமல் இருப்பது முக்கியம் என்ற எண்ணத்தில் சியோமி நிறுவனம் அதன் கலாச்சாரத்தில் இருக்கும் நம்பிக்கையைக் கூட மாற்றிவிட்டது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த புதிய சியோமி 14 ஸ்மார்ட்போன் பற்றிய கூடுதல் விபரங்களை இப்போது பார்க்கலாம். ரீடைல் பாக்ஸ் விபரங்கள் Xiaomi 14 என்ற பெயரைத் தெளிவாகக் காட்டுகிறது.

Xiaomi 14 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Xiaomi 14 ஸ்மார்ட்போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

இணையத்தில் கசிந்ததாகக் கூறப்படும் சமீபத்திய படம் போனின் 'அபௌட் ஃபோன் (About phone)' பகுதியைக் காட்டுகிறது. இது மீண்டும் Xiaomi 14 பிராண்டிங் பெயரை தெளிவாகக் காட்டுகிறது. அதேபோல், இந்த சாதனம் 12 ஜிபி ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 13 ஓஎஸ் உடன் MIUI 14 ஸ்கின் அவுட் ஆஃப் பாக்ஸுடன் பூட் செய்கிறது என்பதைக் காட்டுகிறது.

இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?இந்தியால அடுத்த தீ-யா விற்பனையாக போகும் Vivo Y02.! காரணம் இதன் விலை தானா?

Xiaomi 14 போனின் சிப்செட் மற்றும் டிஸ்பிளே

Xiaomi 14 போனின் சிப்செட் மற்றும் டிஸ்பிளே

இந்த ஃபோனில் மாடல் எண் 2211133C என்றும் கட்டப்பட்டுள்ளது. இது சீனாவின் 3C சான்றிதழுடன் பொருந்துகிறது. இந்த ஸ்மார்ட்போனின் சிப்செட் பற்றிப் பார்க்கையில், இது 3.2GHz கிளாக் ஸ்பீட் கொண்டுள்ள Qualcomm Snapdragon 8 Gen 2 SoC ஆக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இதற்கு முன், கசிந்த தகவல் படி, Xiaomi 14 ஆனது 6.2' இன்ச் FHD+ AMOLED டிஸ்ப்ளேவுடன் வரும் என்று கூறப்படுகிறது.

சியோமி 14 ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

சியோமி 14 ஸ்மார்ட்போனின் கேமரா விபரம்

இந்த டிப்பிலே 120Hz ரெப்ரெஷ் ரேட் உடன் செல்ஃபி கேமராவிற்கான சென்டர்-பொசிஷன் செய்யப்பட்ட பஞ்ச்-ஹோல் கட்அவுட் உடன் வரும் என்று கூறப்படுகிறது. இதன் பின்புறத்தில் 50MP பிரைமரி கேமரா இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அல்ட்ரா-வைட்-ஆங்கிள் லென்ஸ் மற்றும் டெப்த் ஷூட்டர் மூலம் சேர்க்கப்படும். இதன் ஸ்டோரேஜ் 256ஜிபி வரை இருக்கக் கூடும்.

உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!உங்க 4G டேட்டா திட்டத்துடன் 5G யூஸ் பண்ணலாமா? Airtel, Jio வாடிக்கையாளர்களே கவனியுங்க.!

இந்தியாவில் Xiaomi 14 எப்போது கிடைக்கும்?

இந்தியாவில் Xiaomi 14 எப்போது கிடைக்கும்?

சியோமி 14 ஸ்மார்ட்போனின் சரியான பேட்டரி திறன் விவரங்கள் தெரியவில்லை என்றாலும், இந்த ஸ்மார்ட்போன் 67W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவைப் பெறக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிற்கு அப்பாற்பட்ட சந்தைகளைப் பற்றிப் பார்க்கையில், Xiaomi 14 சாதனம் BIS சான்றிதழைப் பெற்றுள்ளது. அதாவது இந்த போன் இந்தியாவிலும் அறிமுகமாகும், ஆனால் அடுத்த ஆண்டில் தான் இது கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Xiaomi Skipped 13 Series Globally To Produce New Xiaomi 14 Series Flagship Smartphones

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X