ஒரே நாளில் 20 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது சியோமி

By Meganathan
|

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ஒரே நாளில் அதிக ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து கின்னஸ் உலக சாதனையை படைத்திருக்கின்றது.

இது குறித்து சியோமி தரப்பில், எம்ஐ ரசிகர் விழாவில் 24 மணி நேரத்தில் 21.1 லட்சம் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது

இந்நிறுவனம் ப்ளாஷ் விற்பனை திட்டத்தின் மூலம் Mi.com இணையத்தில் விற்பனையை நடத்தி வருகின்றது. சில சமயங்களில் கருவிகளின் ஸ்டாக் இல்லை என்ற தகவலும் இந்த தளத்தில் காணப்படும், இருந்தும் அதன் பாதிப்பு பெரிதாக இருக்காது.

இதற்கு முன் ஆப்பிள் நிறுவனம் சுமார் 10 லட்சம் ஐபோன் 6 மற்றும் ஐபோன்6 ப்ளஸ் வகைகளை கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது.

ஒரே நாளில் 20 லட்சம் போன்களை விற்பனை செய்து கின்னஸ் சாதனை படைத்தது

ஸ்மார்ட்போன்களை தவிற சியோமி நிறுவனம் 770,000 ஸ்மார்ட் கருவிகள், 247,000 பவர் ஸ்ட்ரிப்ஸ், 208,000 பிட்னஸ் வாட்ச்கள், 79,000 வைவை யுனிட் மற்றும் 38,000 ஸ்டார்ட் டிவிகளையும் விற்பனை செய்துள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi sets Guinness World Record for selling 2 million smartphones in a day.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X