மூன்று வருடங்களில் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்கள்: சியாமியின் விற்பனையில் சாதனை

By Siva
|

இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய வணிகத்தை கொண்டுள்ள சீன நிறுவனத்தின் சியாமி தங்களது தயாரிப்புகளை சரியான விலையில் அதே நேரத்தில் அதிநவீன அம்சங்களையும் கொண்டுள்ளது. ரூ.10000 விலையில் கிடைக்கும் ரெட்மி 4 மற்றும் ரெட்மி 4எஸ் ஆகிய மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளதே இதற்கு சான்றாகும்

விற்பனையில் சியாமி நிறுவனம் செய்த புதிய சாதனை

இந்த நிலையில் தற்போது சியாமி நிறுவனம் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் 3 வருடங்களில் 25 மில்லியன் ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் குறைந்த விலையில் நிறைந்த டெக்னாலஜி கொண்ட ஸ்மார்ட்போன்கள் என்ற பெயரை பெற்றதால் தான் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த மூன்று வருடங்களில் சியாமி நிறுவனத்தின் தயாரிப்புகள் ஒவ்வொரு நாளும் 22000 வரை விற்பனை செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இந்த விற்பனை வேகம் ஒரு நிறுவனத்தின் அசுர வளர்ச்சிக்கு உதாரணம் ஆகும்.

அல்காடெல் ஏ7 எக்ஸ்எல், ஏ7, ஐடால் 5எஸ் மற்றும் ஐடால் 5 (விலை, அம்சங்கள்).!அல்காடெல் ஏ7 எக்ஸ்எல், ஏ7, ஐடால் 5எஸ் மற்றும் ஐடால் 5 (விலை, அம்சங்கள்).!

மிக அதிகமான ஸ்மார்ட்போன்கள் குறைந்த காலத்தில் இந்தியாவில் விற்பனை செய்த முதல் நிறுவனம் என்ற பெருமையையும் இது பெற்றுள்ளது.

கடந்த 2014ஆம் ஆண்டு சியாமி இந்தியாவில் அறிமுகமானபோது முதல் ஆறு மாதங்களில் 5 மில்லியன் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்து சாதனை படைத்தது. குறிப்பாக சியாமி ரெட்மி நோட் 4 மாடலின் விற்பனை வரலாற்று சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போதும் சியாமியின் மூன்று தயாரிப்புகளான ரெட்மி 4ஏ, ரெட்மி நோட் 4 மற்றும் ரெட்மி 4 ஆகிய மாடல்கள் ரூ.10000 விலைக்கு கீழ் விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்களின் நன்மதிப்பை பெற்று அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது.

மேலும் சியாமி நிறுவனம் தனது விற்பனையின் சதவிகிதத்தை உயர்த்த புதியதாக ரெட்மி 4ஏ என்ற மாட்லை 3GB மற்றும் 32 ஸ்டோரேஜுடன் ரூ.6999 என்ற விலையில் அறிமுகம் செய்துள்ளது.

மேலும் தனக்கு கிடைத்த வரவேற்பை பயன்படுத்தி இந்த நிறுவனம் செப்டம்பர் 5ஆம் தேதி புதிய மாடல் ஒன்றை அறிமுகம் செய்யவுள்ளது. இந்த மாடலின் பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் இதுவொரு டூயல் கேமிரா ஸ்மார்ட்போன் என்பது மட்டும் உண்மை

Best Mobiles in India

Read more about:
English summary
Xiaomi has announced that they have sold over 25 million smartphones in India since their launch here three years back.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X