வெளியான சியோமி டீசர் : வெளிப்பட்ட மற்றும் புதிய 'லீக்' தகவல்கள்..!
சியோமி அதன் வரவிருக்கும் ஸ்மார்ட்போன் சார்ந்த ஒரு புதிய டீஸரை வெளியிட்டுள்ளது. வெளியான டீஸர் அடுத்த வரவிருக்கும் புதிய சியோமி ஸ்மார்ட்போனில் ஒரு இரட்டை கேமரா அமைப்பு இடம்பெறும் என்று வெளிப்படுத்துகிறது. சீன நிறுவனமான சியோமி வரும் செப்டம்பர் 27 அன்று ஒரு தயாரிப்பு வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது அன்று அதன் புதிய ஸ்மார்ட்போனான சியோமி மி 5எஸ்வெளியிடப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்பு வெளியான கசிவு செய்திகளின்படி சியோமி மி 5எஸ் கருவியானது 5.5 இன்ச் முழு எச்டி (1080x1920 பிக்சல்கள்) கொண்ட ஸ்க்ரீன் அட்ரெனோ 530 ஜிபியூ கொண்ட ஒரு 64-பிட் ஸ்னாப்டிராகன் 821 க்வாட்-கோர் ப்ராசஸர் 256ஜிபி அளவிலான மெமரி, ஆண்ட்ராய்டு 6.0 மார்ஷ்மெல்லோ இயங்குதளம் கொண்டுருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடன் முன்பக்க கேமிராவானது 16 மெகாபிக்சலும், பின்புற கேமிரா 4 - மெகாபிக்சலும் கொண்டிருக்கும்,உடன் ஒரு கைரேகை ஸ்கேனர் ஆதரவு, முக்கியமாக ஐபோன் 7 போன்ற தொட்டுணரக்கூடிய ஹோம் பொத்தான் கொண்டிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

இப்பொது வெளியாகியுள்ள புதிய கசிவு செய்தியின்படி சியோமி மி 5எஸ் ஆனதில் ஒரு சிறிய 4 இன்ச் ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்த படலாம் என்று கூறுகிறது.உடன் இந்த சாதனம் ஒரு ஸ்னாப்டிராகன் 820 ப்ராசஸர், 3ஜிபி ரேம் மற்றும் 32ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட 4.3 அங்குல 720பி ஸ்க்ரீன் கொண்டு வெளியாகும் என்று பரிந்துரைக்கிறது. உண்மையாகவே சியோமி தனது புதிய கருவில் என்னென்ன இணைத்துள்ளது என்பதை செப்டம்பர் 27-ஆம் தேதி வரையிலான காத்திருந்தே நாம் அறிந்துக்கொள்ள முடியும்.
மேலும் படிக்க :
பிஎஸ்என்எல்-ன் பூஜ்ய-குரல் கட்டண திட்டம், இதுதான் 'நிஜமான' அதிரடி திட்டம்..!
புதிய ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்


Click it and Unblock the Notifications