சியோமி ரூ.1 ப்ளாஷ் விற்பனை, தெரிந்து கொள்ளுங்கள்..!!
சியோமி நிறுவனம் கடந்த வாரம் அறிவித்த அதிரடி தீபாவளி விற்பனை இன்று துவங்குகின்றது.
சிலிர்க்க வைக்கும் சியோமி.!!
நவம்பர் மாதம் ஐந்தாம் தேதி வரை நடைபெற இருக்கும் சியோமி நிறுவனத்தின் அதிரடி தீபாவளி விற்பனை குறித்த தகவல்களை அடுத்து வரும் ஸ்லைடர்களில் பாருங்கள்..!

ப்ளாஷ் விற்பனை
சியோமி நிறுவனத்தின் அதிரடி தீபாவளி விற்பனை நவம்பர் 3, 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் மதியம் 2 மற்றும் மாலை 6 மணிக்கு ப்ளாஷ் விற்பனை நடைபெறும்.

பதிவு
ப்ளாஷ் விற்பனையில் பங்கேற்க சியோமி இந்தியா இணையதளம் சென்று லாக் இன் செய்து உங்களது சமூக வலைதளங்களில் ஷேர் செய்ய வேண்டும்.

குறிப்பு
2 மணி ப்ளாஷ் விற்பனைக்கு 12 மணி வரை மட்டுமே பதிவு செய்ய வேண்டும், இதே போன்று 6 மணி ப்ளாஷ் விற்பனைக்கு 4 மணிக்கே பதிவு செய்ய வேண்டும்.

செயலி
கூகுள் ப்ளே ஸ்டோரில் இருந்து எம்ஐ ஸ்டோர் செயலியை பதிவிறக்கம் செய்தால் விற்பனை குறித்த தகவல்களை எளிமையாக பெற முடியும்.

தகவல்
தற்சமயம் வரை ப்ளாஷ் விற்பனைக்கு வர இருக்கும் கருவிகள் குறித்த தகவல்கள் அறிவிக்கப்படவில்லை என்றாலும் சில கருவிகளுக்கு சலுகைகள் மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரெட்மி 2 ப்ரைம்
ரூ.6,999 மதிப்புள்ள சியோமி ரெட்மி 2 ப்ரைம் கருவியின் விலை தற்சமயம் ரூ.6,499க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ4
சியோமி எம்ஐ4 16 ஜிபி மாடல் ரூ.14,999 இல் இருந்து ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ.12,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ4ஐ
சியோமி எம்ஐ4ஐ 16 ஜிபி ரூ.12,999 இல் இருந்து ரூ.2000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ. 10,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

எம்ஐ பேட்
இதே போன்று எம்ஐ பேட் கருவியும் ரூ. 12,999 இல் இருந்து ரூ.3,000 தள்ளுபடி செய்யப்பட்டு ரூ,9,999க்கு விற்பனை செய்யப்படுகின்றது.

முகநூல்
மேலும் பல தொழில்நுட்ப செய்திகளை முகநூலில் படிக்க தமிழ் கிஸ்பாட் முகநூல் பக்கம்.


Click it and Unblock the Notifications
