வா தலைவா., வா தலைவா: மின்சார கார் தயாரிக்கும் சியோமி., ஆண்டுக்கு 3 லட்சம் கார்கள்- விலை குறைவாகதான் இருக்கும்!

|

சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரான சியோமி பல துறைகளில் தங்களை நிலை நிறுத்த அடியெடுத்து வைக்கிறது. தற்போது நிறுவனம் மற்றொரு துறையில் கவனம் செலுத்துகிறது. அது மின்சாரக் கார்கள் துறையாகும். சீனாவில் மின்சார வாகனங்கள் தயாரிப்பதற்கு சியோமி உருவாக்கி உள்ள கார் ஆலையின் விவரங்கள் தற்போது தெரியவந்துள்ளது. சியோமியின் கார் ஆலையில் தற்போது ஆண்டுக்கு மூன்று லட்சம் கார்கள் உற்பத்தி செய்யப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த கார் ஆலைகள் இரண்டு கட்டங்களாக கட்டப்பட்டு வருகிறது.

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதி

பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதி

சியோமி தனது கார் ஆலையுடன் ஒரு ஆட்டோ யூனிட் தலைமையகம், விற்பனையகம் மற்றும் ஆராய்ச்சி அலுவலகங்களை அமைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பெய்ஜிங்-ன் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுப் பகுதியில் கார் ஆலை கட்டப்படும் என பெய்ஜிங் இ-டவுன் அதன் அதிகாரப்பூர்வ வீ-சேட் கணக்கு மூலம் தெரிவித்துள்ளது. இந்த உற்பத்தி அலகு ஆனது நிறுவனம் எலெக்ட்ரானிக் வாகனம் தயாரிப்பு துறையில் மிகப்பெரிய முதலீடை கொண்டு வரும் என கூறப்படுகிறது.

சியோமி எலெக்ட்ரானிக் வாகனம்

சியோமி எலெக்ட்ரானிக் வாகனம்

சியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில் எலெக்ட்ரானிக் வாகனம் வகைக்குள் நுழைவதை உறுதிப்பட அறிவித்துள்ளது. சியோமி நிறுவனம் கார் தயாரிப்பாளராகும் இலக்கை விரைவில் அடையும் என அந்நிறுவனத்தின் சமீபத்திய நிதிநிலை அறிக்கை தெரிவிக்கிறது. பெய்ஜிங் இ-டவுன் நிறுவனம், சியோமி ஆலை 2024 ஆம் ஆண்டு வெகுவான உற்பத்தியை எட்டும் என உறுதி செய்திருக்கிறது. சியோமி தலைமை நிர்வாக லி ஜுன் இதை அக்டோபர் மாதம் உறுதிப்படுத்தினார்.

மின்சார வாகன பிரிவு

மின்சார வாகன பிரிவு

சியோமி இந்த ஆண்டின் தொடக்கத்தில் மின்சார வாகன பிரிவில் நுழைவதை உறுதிப்படுத்தியுள்ளது. இதன்மூலம் சியோமி நிறுவனம் கார் தயாரிப்பாளராகும் இலக்கை அடையும் என அந்த நிறுவனத்தின் நிதிநிலை அறிக்கை தெரிவித்திருக்கிறது. சியோமி சமீபத்தில் எலெக்ட்ரானிக் வாகன திட்டத்தில் பணி புரிய சுமார் 300 பணியாளர்களை பணியமர்த்தி இருக்கிறது. அடுத்த 10 ஆண்டுகளில் தனது எலெக்ட்ரானிக் வாகன யூனிட்டில் 10 பில்லியன் டாலர் சுமார் ரூ.73000 கோடி முதலீடு செய்ய தயாராகி இருப்பதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இருப்பினும் இந்த முதலீடு குறித்த விவரங்களை சியோமி இன்னும் வெளியிடவில்லை. மார்ச் மாதத்தில் அதன் அறிவிப்புக்கு பிறகு 2000-க்கும் மேற்பட்ட நேர்காணல், 10-க்கும் மேற்பட்ட தொழில் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாக சியோமி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்சார கார் துறை

மின்சார கார் துறை

அதேபோல் மின்சார கார் துறையில் நுழையும் முதல் ஸ்மார்ட்போனஅ தயாரிப்பாளர் சியோமி அல்ல. ஆப்பிள் நிறுவனமும் சில காலமாக இதே சிந்தனையில் செயல்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பகுதியில் ஆப்பிள் பல சவால்களை எதிர்கொண்டு வருகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மின்சார கார்

ஆப்பிள் நிறுவனத்தின் முதல் மின்சார கார்

ஆப்பிள் நிறுவனம் தனது முதல் மின்சார காரை அறிமுகப்படுத்தி எலெக்ட்ரிக் வாகன துறையில் அடியெடுத்து வைக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறது. ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் மின்சார காரை உருவாக்க நிறுவனம் திட்டமிட்டிருக்கிறது. நிறுவனம் தொடர்ந்து மின்சார காரின் உற்பத்தியை துரிதப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆப்பிள் நிறுவனம் 2025-ல் எலெக்ட்ரிக் வாகனத்தை அறிமுகப்படுத்த விரும்பி ஆட்டோமொபைல் துறையில் அடியெடுத்து வைக்கிறது.

300,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி

300,000 மின்சார வாகனங்கள் உற்பத்தி

சீனாவில் உள்ள சியோமியின் கார் ஆலையில் ஒவ்வொரு ஆண்டும் 300,000 மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக கூறப்படுகிறது. புதிய கார் ஆலையானது பெய்ஜிங்கில் இரண்டு கட்டங்களாக கட்டப்படும். சியோமி பெய்ஜிங் பொருளாதார மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டு மண்டலத்தில் ஆட்டோ யூனிட் தலைமையகம், விற்பனை மற்றும் ஆராய்ச்சி அலுவலகங்களை கட்டும் என அரசாங்க ஆதரவு ஆதரவு பொருளாதார மேம்பாட்டு நிறுவனம் பெய்ஜிங் இ-டவுன் அதன் அதிகாரப்பூர்வ வீ-சாட் கணக்கில் தெரிவித்துள்ளது.

புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனம்

புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனம்

சியோமி தனது புதிய எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தை ஆகஸ்ட் மாதம் 10 பில்லியன் யுவான் அதாவது ரூ.11000 கோடி முதலீடு செய்யும் என கூறப்படுகிறது. மேலும் தற்போது வரை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவில் மொத்தம் 10,000 பேர் பணி புரிகின்றனர் என தெரிவிக்கப்படுகிறது. அதேபோல் இவி திட்டத்தில் தற்போது 300 பணியாளர்கள் நியமிக்கப்பட்டிருக்கின்றனர். அதேபோல் இ-வி யூனிட்டில் 10 பில்லியன் டாலர் சுமார் ரூ.73000 கோடி முதலீடு செய்ய தயாராக இருப்பதாகவும் இதை அடுத்த 10 ஆண்டுகளில் செலவழிக்க தயாராக இருப்பதாகவும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Xiaomi's Open Car Plant: Xiaomi Going to Manufacture 3 Lakh Electric Vehicles Per Year

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X