சீனாவில் சியோமி ரெட்மி ப்ரோ முக்கியமான ஏழு அம்சங்கள்!

Written By:

சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி ரெட்மி ப்ரோ என்ற புதிய கருவியைச் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. டூயல் கேமரா கொண்ட முதல் சியோமி ஸ்மார்ட்போன் கருவி இது என்பதோடு இந்தக் கருவி கோல்டு, சில்வர் மற்றும் கிரே நிறங்களில் கிடைக்கின்றது.

தொடர்ந்து வரும் ஸ்லைடர்களில் சியோமி ரெட்மி ப்ரோ கருவியில் வழங்கப்பட்டிருக்கும் முக்கிய அம்சங்களைத் தெரிந்து கொள்ளுங்கள்.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
டூயல் கேமரா செட்டப்

டூயல் கேமரா செட்டப்

டூயல் கேமரா கொண்ட முதல் சியோமி கருவி இது ஆகும். 13 எம்பி சோனி IMX258 சென்சார் மற்றும் 5 எம்பி சாம்சங் சென்சார் வழங்கப்பட்டுள்ளது. இதோடு டூயல் டோன் பிளாஷ் 5 எம்பி முன்பக்க கேமரா வழங்கப்பட்டுள்ளது.

டிஸ்ப்ளே

டிஸ்ப்ளே

ரெட்மி ப்ரோ கருவியில் 5.5 இன்ச் ஃபுல் எச்டி ஓஎல்இடி 2.5டி கர்வ்டு திரை 1080*1920 பிக்சல் ரெசல்யூஷன் வழங்கப்பட்டுள்ளது.

வன்பொருள்

வன்பொருள்

ரெட்மி ப்ரோ கருவியில் 2.5 ஜிகாஹெர்ட்ஸ் டீகா-கோர் மீடியாடெக் ஹீலியோ எக்ஸ்25 பிராசஸர், 3 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி இன்டர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது.

வடிவமைப்பு

வடிவமைப்பு

அலுமினியம் பாடி மற்றும் சிஎன்சி வளைவுகள் கொண்ட ரெட்மி ப்ரோ கருவியின் ஹோம் பட்டனில் கைரேகை ஸ்கேனர் வழங்கப்பட்டுள்ளது. யுஎஸ்பி டைப்-சி போர்ட் கொண்டுள்ளதோடு 4000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் வேகமாக சார்ஜ் ஆகும் அம்சம் போன்றவை வழங்கப்பட்டுள்ளன.

கனெக்டிவிட்டி

கனெக்டிவிட்டி

4ஜி, எல்டிஇ, 3ஜி, வை-பை, ப்ளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யுஎஸ்பி போன்றப கனெக்டிவிட்டி ஆப்ஷன்களும் வழங்கப்பட்டுள்ளன. மேலும் ஆண்ட்ராய்டு மார்ஷ்மல்லோ சார்ந்த MIUI8 இன்டர்ஃபேஸ் வழங்கப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!
English summary
Xiaomi's killer Smartphone Redmi Pro launched in China Tamil
Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot