இந்தியாவில் மி மியூஸிக், மி வீடியோ சேவைகளை வழங்குகிறது சியோமி.!

இந்த இசை சேவைக்காக, இந்தியாவின் 13 மொழிகளின் தேர்வுகளைக் கொண்ட இலவசமாக அளிக்கப்படும் 10 மில்லியன் டிராக்குகளைக் கொண்ட ஹுன்கமா உடன் சியோமி நிறுவனம் கைகோர்த்துள்ளது.

|

தற்போது பீட்டா பதிப்பில் கிடைக்கப் பெறும் இந்தச் சேவைகளின் இறுதிக்கட்டம், இந்த மாத இறுதியில் களமிறக்கப்பட உள்ளது. ஸ்மார்ட்போன் சந்தையை கைப்பற்றிய பிறகு, டிவி சந்தைக்குள் நுழைந்துள்ள சியோமி நிறுவனம், தனது பார்வையை எப்போதும் வளர்ச்சி குன்றாத உள்ளடக்க வணிகம் மீது செலுத்தி உள்ளது. இதன் விளைவாக, சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான இது, இந்தியாவில் தனது மி மியூஸிக் மற்றும் மி வீடியோ ஆகிய சேவைகளை தற்போது அறிமுகம் செய்துள்ளது.

இந்தியாவில் மி மியூஸிக், மி வீடியோ சேவைகளை வழங்குகிறது சியோமி.!

இந்த இசை சேவைக்காக, இந்தியாவின் 13 மொழிகளின் தேர்வுகளைக் கொண்ட இலவசமாக அளிக்கப்படும் 10 மில்லியன் டிராக்குகளைக் கொண்ட ஹுன்கமா உடன் சியோமி நிறுவனம் கைகோர்த்துள்ளது. இந்த மி மியூஸிக் சேவை, வாழ்நாள் முழுவதும் இலவச சேவையாக வழங்கப்படும். ஆனால் பாடல்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால், ஆண்டிற்கு ரூ.899 கட்டணம் செலுத்தி மி மியூஸிக்கில் உள்ள ஹுன்கமா ப்ரோ திட்டத்திற்கு மாற வேண்டும்.

மி மியூஸிக்கில் வரும் பாடல்களுடன் அதன் பாடல் வரிகளும் அளிக்கப்படுவதால், பயனர்களும் சேர்ந்து பாடக்கூடிய அனுபவத்தைப் பெற முடிகிறது.

வீடியோ சேவையைப் பொறுத்த வரை, அதிக பிரபலமான எல்லா வடிவங்களிலும் உள்ள வீடியோக்களையும், மி வீடியோ ஆதரிப்பதோடு, பல்வேறு மொழிகளில் அமைந்த வசன வரிகள், தனிப்பட்ட கோப்புகள் மற்றும் பல்வேறு ஆடியோ டிராக் ஆதரவு ஆகியவற்றை கொண்டிருக்கும் என்று சியாமி தெரிவித்துள்ளது. இதில் 5 லட்சம் மணிநேரத்திற்கும் அதிகமான உள்ளடக்கங்கள் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த உள்ளடக்கத்தைப் பெற, வூட், சோனி லிவ், ஹுன்கமா ப்ளே, சன் நெக்ஸ்ட், ஏஎல்டி, ஸீ 5, வியூ, டிவிஎஃப் மற்றும் ஃபிலிக்ஸ்ட்ரீ ஆகியவற்றுடன் சியாமி நிறுவனம் கைகோர்த்துள்ளது.

இந்தியாவில் மி மியூஸிக், மி வீடியோ சேவைகளை வழங்குகிறது சியோமி.!


இது குறித்து சியோமி தரப்பில் கூறுகையில், "ஏற்கனவே இந்தியாவில் உள்ள முக்கியத்துவம் வாய்ந்த உள்ளடக்க கூட்டாளிகளுடன் நாங்கள் இணைந்து செயலாற்றி வருகிறோம். இந்த எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க திட்டமிட்டுள்ளோம். தற்போது மி வீடியோவிற்கு 15 இந்திய மொழிகளில் இருந்து ஆதரவு கிடைக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிஎல்என்ஏ மற்றும் மிராகேஸ்ட் ஆகியவற்றை மீ வீடியோ சேவை ஆதரிக்கிறது.
தற்போது பீட்டா பதிப்பில் கிடைக்கப் பெறும் இந்தச் சேவைகளின் இறுதிக்கட்டம், இந்த மாத இறுதியில் களமிறக்கப்பட உள்ளது.

இந்தச் சேவைகளைக் குறித்து சியாமியின் துணை தலைவரும் சியாமி இந்தியாவின் நிர்வாக இயக்குனருமான மனு ஜெயின் வெளியிட்டுள்ள ஒரு அறிவிப்பில், "சியாமியின் முக்கியத்துவம் வாய்ந்த நம்பிக்கை என்னவென்றால், சிறந்த தன்மையுடன் கூடிய உயர்தர தயாரிப்புகளை நியாயமான விலை நிர்ணயத்தில் வழங்குவது ஆகும். எங்கள் வணிக முறையின் மூலம் இதை எங்களால் செய்ய முடிகிறது. இந்த வகையில் எங்கள் ஸ்மார்ட்போன்கள் மற்றும் மற்ற ஹார்ட்வேர் தயாரிப்புகளை ஏற்கக்கூடிய விலையில் வழங்கி உள்ளோம்.

How To Increase the Speed of your Laptop (TAMIL)

இந்தியாவில் மி மியூஸிக், மி வீடியோ சேவைகளை வழங்குகிறது சியோமி.!

எங்கள் எம்ஐயூஐ இணையதள சேவைகளை நீண்டகாலத்திற்கு விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். மீ மியூஸிக் மற்றும் மீ வீடியோ என்ற இவ்விரு அப்ளிகேஷன்களையும் அறிமுகம் செய்வதன் மூலம் சிறந்த இணையதள சேவைகளைப் பயன்படுத்தி, லட்சக்கணக்கான சியாமி ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு ஒரு சிறந்த பயனர் அனுபவத்தை அளிக்க முடியும் என்று நம்புகிறோம்" என்று தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
Xiaomi rolls out Mi Music, Mi Video services in India ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X