Home
News

ரூ.8,999/-க்கும் ரூ.6,999/-க்கும் இதைவிட வேறென்ன அம்சங்கள் வேணும்.? இதுவே அதிகம்.!

இன்று அமேசான் இந்தியா மற்றும் சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான மி.காம் (Mi.com) வலைத்தளத்தில் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

By Muthuraj

சியோமி நிறுவனத்தின் சூப்பர் பட்ஜெட் சாதனமான - ரெட்மீ ய்வை1 (Y1) லைட் மற்றும் ரெட்மீ வ்யை1 (Y1) ஸ்மார்ட்போன்கள் இன்று அமேசான் இந்தியா மற்றும் சியோமி நிறுவனத்திற்கு சொந்தமான மி.காம் (Mi.com) வலைத்தளத்தில் 12 மணிக்கு விற்பனைக்கு வருகிறது.

ரூ.8,999/-க்கும் ரூ.6,999/-க்கும் இதைவிட வேறென்ன அம்சங்கள் வேணும்.?

அமேசான் இந்தியாவில் இக்கருவிகளை வாங்க பயனர்களுக்கு முன்கூட்டியே முன்பதிவு செய்திருக்க வேண்டுமென்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் அறிமுகமாகும் இந்த சியோமி ரெட்மீ வ்யை1 வரிசை கருவிகளானது விவரக்குறிப்புகள் மற்றும் வடிவமைப்பால், சீனாவில் தொடங்கப்பட்ட ரெட்மீ நோட் 5ஏ ஸ்மார்ட்போனின் ரீபிராண்ட்டட் பதிப்புகளாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.!

16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா.!

இக்கருவிகள் அம்சங்களை பொறுத்தமட்டில், ரெட்மீ வ்யை1 ஸ்மார்ட்போனின் மிகப்பெரிய சிறப்பம்சமாக - எல்இடி செல்பீ லைட் கொண்ட 16 மெகாபிக்சல் முன்பக்க கேமரா திகழ்கிறது. மறுகையில் உள்ள ரெட்மீ வ்யை1 லைட் ஆனது அதன் உடன்பிறப்பை மாதிரியேயான, ஆனால் முன்பக்க கேமராவில் மட்டும் 5 மெகாபிக்சல் கேமரா என்ற மாற்றத்தை கொண்டுள்ளது. மற்றும் இக்கருவி ஒரு ரீபிராண்டட் ரெட்மீ நோட் 5ஏ போன்றே தெரிகிறது.

மியூஐ 9 க்ளோபல் ரோம்.!

மியூஐ 9 க்ளோபல் ரோம்.!

இணைந்து அறிவிக்கப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட்போன்களில் மொசியோமி நிறுவனத்தின் மியூஐ 9 க்ளோபல் ரோம் கிடைக்கும். இக்கருவிகளுடன் ரெட்மீ நோட் 4, மி மிக்ஸ் 2 மற்றும் மி மேக்ஸ் 2 ஆகிய இதர மற்ற ஸ்மார்ட்போன்களுக்கு இந்த அப்டேட் இம்மாத இறுதியில் கிடைக்கும்.

ரெட்மீ வ்யை1 இந்திய விலை நிர்ணயம்.!

ரெட்மீ வ்யை1 இந்திய விலை நிர்ணயம்.!

இந்தியாவில், சியோமி ரெட்மீ வ்யை1 ஸ்மார்ட்போனின் 32 ஜிபி சேமிப்பு மற்றும் 3 ஜிபி ரேம் கொண்ட மாறுபாடு சுமார் ரூ.8,999/- என்ற விலை நிர்ணயத்தையும், அதன் 4 ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பு மாறுபாடானது ரூ.10,999/- என்ற விலை நிர்ணயப்புள்ளியையும் பெற்றுள்ளது.

ரெட்மீ வ்யை1 லைட் இந்திய விலை நிர்ணயம்.!

ரெட்மீ வ்யை1 லைட் இந்திய விலை நிர்ணயம்.!

மறுகையில் உள்ள ரெட்மீ வ்யை1 லைட் ஸ்மார்ட்போனை பொறுத்தவரை, 2 ஜிபி ரேம் மற்றும் 16 ஜிபி உள் சேமிப்பு கொண்ட மாறுபாடு மட்டுமே வெளிவந்துள்ளது. அது ரூ.6,999/- என்ற விலை நிர்ணயம் பெற்றுள்ளது.

விற்பனை தொடங்கும் நாள்.!

விற்பனை தொடங்கும் நாள்.!

இந்த இரண்டு கருவிகளும் அமேசான் இந்தியா வலைத்தளம் வழியாக வாங்க கிடைக்கும். நவம்பர் 8-ஆம் தேதியன்று அமேசான் மற்றும் மி.காம் வழியாக விற்பனையாகும். அதன்பின்னர் இந்த இரண்டு ஸ்மார்ட்போன்களுமே ஆஃப்லைனில் வாங்குவதற்கு கிடைக்கும்.

சியோமி ரெட்மீ வ்யை1 அம்சங்கள்.!

சியோமி ரெட்மீ வ்யை1 அம்சங்கள்.!

ரெட்மீ வ்யை1 அம்சங்களை பொறுத்தமட்டில், முன்னர் குறிப்பிட்டபடி, இதன் மிகப்பெரிய அம்சம் அதன் 16 மெகாபிக்சல் முன் கேமரா ஆகும். இது குறைந்த ஒளி நிலைமைகளிலும் கூட சிறந்த செல்பீக்களை பதிவு செய்ய உதவும், அதற்கு அதன் ஏற்ப்பீ எல்இடி லைட் அம்சமும் கைகொடுக்கும். உடன் இதன் கேமரா பியூட்டிப்பை 3.0 அம்சத்தையும் ஆதரிக்கிறது. மறுபக்கம் 13 எம்பி ரியர் கேமரா கொண்டுள்ளது.

கைரேகை சென்சார், டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி.!

கைரேகை சென்சார், டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி.!

தவிர பின்புற பேனலில் ஒரு கைரேகை சென்சார் உள்ளது. இந்த புதிய தொலைபேசி தங்கம் மற்றும் அடர் சாம்பல் வண்ண வகைகளில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இரட்டை சிம் ஆதரவு கொண்ட ரெட்மீ வ்யை1 ஆனது கார்னிங் கொரில்லா கண்ணாடி பாதுகாப்புடனான ஒரு 5.5 அங்குல எச்டி (720x1280 பிக்சல்கள்) டிஸ்பிளே கொண்டுள்ளது. இது ஒரு ஆக்டா-கோர் ஸ்னாப்டிராகன் 435 எஸ்ஓசி உடன் 3ஜிபி மூலம் இயக்கப்படுகிறது.

3080எம்ஏஎச் பேட்டரி, 28 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு.!

3080எம்ஏஎச் பேட்டரி, 28 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவு.!

32 ஜிபி அளவிலான உள்ளடங்கிய சேமிப்பு கொண்ட சியோமி ரெட்மீ வ்யை1, மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128 ஜிபி வரை விரிவாக்கக்கூடிய ஆதரவும் வழங்குகிறது. 4ஜி வோல்ட் உள்ளிட்ட நிலையான இணைப்பு விருப்பங்களை கொண்டுள்ள இக்கருவி ஒரு 3080எம்ஏஎச் பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. அளவீட்டில் 153x76.2x7.7 மிமீ மற்றும் 153 கிராம் எடையும் கொண்டுள்ளது.

சியோமி ரெட்மீ வ்யை1 லைட் அம்சங்கள்.!

சியோமி ரெட்மீ வ்யை1 லைட் அம்சங்கள்.!

ரெட்மி வ்யை1 லைட் ஸ்மார்ட்போனின் அம்சங்களை பொறுத்தமட்டில் இது ஒரு 5.5 அங்குல எச்டி டிஸ்பிளே, மியூஐ 9 மென்பொருள், மற்றும் 1.4ஜிகாஹெர்ட்ஸ் க்வாட் கோர் ஸ்னாப்டிராகன் 420 செயலி கொண்டு இயங்குகிறது. இந்த இரட்டை நானோ சிம் ஸ்மார்ட்போன் ஆனது ஒரு பிரத்யேக மைக்ரோ எஸ்டி கார்டு ஸ்லாட்டைக் கொண்டுள்ளது மற்றும் 128 ஜிபி வரை சேமிப்பு விரிவாக்கத்தையும் ஆதரிக்கிறது.

13 மெகாபிக்சல்,  5 மெகாபிக்சல், 3080எம்ஏஎச் பேட்டரி.!

13 மெகாபிக்சல், 5 மெகாபிக்சல், 3080எம்ஏஎச் பேட்டரி.!

கேமராத்துறையை பொறுத்தமட்டில், இதன் பின்புற கேமராவிற்கான தீர்மானம் 13 மெகாபிக்சல் ஆகும், இது எல்இடி ஃப்ளாஷ் மற்றும் பிடிஏஎப் ஆகிய அம்சங்களுடன் வருகிறது. மறுபக்கம் ஒரு 5 மெகாபிக்சல் செல்பீ கேமரா உள்ளது. இதன் பேட்டரி திறன் 3080எம்ஏஎச் ஆகும்.

Best Mobiles in India

English summary
Xiaomi Redmi Y1 Lite, Redmi Y1 sale today at 12 pm: Price, specs, offers. Read more about this in Tamil GizBo
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X