Xiaomi, redmi, poco., அனைத்து ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு., எவ்வளவு மற்றும் காரணம் தெரியுமா?

|

சியோமி, ரெட்மி, போக்கோ ஸ்மார்ட் போன்களின் விலை உயர்வு அமலுக்கு வர உள்ளதாகவும் அதற்கான காரணம் குறித்தும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில்

ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் இந்தியாவில் மொபைல் போன்களுக்கான வரிவிதிப்பு விகிதத்தை 12 முதல் 18 சதவீதத்தில் மாற்றம் செய்தது. மொபைல் போன்களில் அதிகரித்த ஜிஎஸ்டி ஸ்லாட் இன்று முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இதையடுத்து தொலைபேசிகளின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உடனடியாக அமலுக்கு வர உள்ளது

உடனடியாக அமலுக்கு வர உள்ளது

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் தொலைபேசிகளின் விலை உடனடியாக அமலுக்கு வர உள்ளதாக அந்த நிறுவனத்தின் எம்டி மனு குமார் டுவிட்டரில் தெரிவித்துள்ளார். அதேபோல் இந்தியாவில் எம்ஐ, ரெட்மி மற்றும் போக்கோ பிராண்ட் போன்களுக்கு முழுமையான விலை அதிகரிக்கு இதில் பொருந்தும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 5 சதவீதத்திற்கு மேல் லாபம் ஈட்டக்கூடாது

5 சதவீதத்திற்கு மேல் லாபம் ஈட்டக்கூடாது

அதேபோல் சியோமியின் தயாரிப்புகளிலிருந்து 5 சதவீதத்திற்கு மேல் லாபம் ஈட்டக்கூடாது என்ற வீதியை பின்பற்றுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது ஜிஎஸ்டி மாற்றத்தின் படி இந்தியாவில் தொலைபேசிகளின் விலை உயர்த்தவதைத் தவிர வேறு வழியில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!கொஞ்சம் பொறுமை., Google playstore-ல் குவியும் டவுன்லோட்: whatsapp, facebook மிஞ்சும் ஆப்!

ரூ. 17,999 ஆக நிர்ணயம்

ரூ. 17,999 ஆக நிர்ணயம்

தற்போதைய இந்த அறிவிப்பின் படி, விலை அமைப்பு ஏற்கனவே பிளிப்கார்ட்டில் வெளிவந்துள்ளது. போக்கோ எக்ஸ் 2, அதன் 6 ஜிபி + 128 ஜிபி மாடல் முன்பு ரூ. 16,999 ஆக நிர்ணயிக்கப்பட்டது. அது, இப்போது ரூ. 17,999 ஆக விற்கப்படுகிறது.

போகோ நிறுவனத்தின் விலை அதிகரிப்பு

போகோ நிறுவனத்தின் விலை அதிகரிப்பு

போக்கோ நிறுவனத்தின் இந்தியா பொது மேலாளர் சி மன்மோகன் ஒரு டுவிட் மூலம் போகோ எக்ஸ் 2 இன் புதுப்பிக்கப்பட்ட விலையை உறுதி செய்தார். போக்கோ எக்ஸ் 2 இன் 6 ஜிபி + 64 ஜிபி வேரியண்டிற்கு இப்போது ரூ. 16,999 எனவும் 8 ஜிபி + 256 ஜிபி வேரியண்ட் வாங்குபவர்களை ரூ.20,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய விலை நிர்ணயம் விரைவில்

புதிய விலை நிர்ணயம் விரைவில்

புதிய விலை நிர்ணயம் விரைவில் அதிகாரப்பூர்வ சியோமி இந்தியா இணையதளத்தில் நேரலைக்கு வருவதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் தற்போது வரை சியோமியின் வலைத்தளம் இன்னும் மாற்றங்கள் குறித்து விளக்கவில்லை.

எம்ஐ வெளியிட்டுள்ள அறிக்கை

எம்ஐ வெளியிட்டுள்ள அறிக்கை

இதுதொடர்பாக எம்ஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், எம்ஐ ரசிகர்கள், மொபைல் போன்களில் #ஜிஎஸ்டி 12% முதல் 18%-ல் இருந்து 50% அதிகரித்துள்ளதாக தெரிவித்துதள்ளார். அதேபோல் சியோமி நிறுவனம் தங்களின் தயாரிப்புகளை விலையை அதிகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்த புதிய விலை உடனடியாக நடைமுறைக்கு வரும் எனவும் தெரிவித்துள்ளார்.

Best Mobiles in India

English summary
xiaomi redmi smartphones to price hike in india reason of GST

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X