Xiaomi, ரெட்மி, POCO போன்களுக்கு ஆபத்து.. இந்த போன்களில் ஏதேனும் உங்ககிட்ட இருக்கா? அப்போ உடனே படியுங்க..
சியோமி (Xiaomi), ரெட்மி (Redmi) மற்றும் போகோ (POCO) ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு மிகவும் மோசமான மற்றும் அபாயகரமான பயனர் பாதுகாப்பு சிக்கல் எழுந்துள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளனர். உங்களிடம் இந்த பிராண்டுகளின் ஏதேனும் ஒரு மொபைல் (Mobile) இருந்தால் இந்த பதிவை முழுமையாக படிக்கவும்.
சைபர் செக்யூரிட்டி நிபுணர்கள் Xiaomi, Redmi மற்றும் Poco ஸ்மார்ட்போன்களில் சுமார் 20 முக்கியமான பாதிப்புகளை கண்டறிந்துள்ளனர். புதிய ஆபத்தான வைரஸ் தனிப்பட்ட தரவைப் பயன்படுத்த ஹேக்கர்களுக்கு அணுகலை வழங்கும் திறனைக் கொண்டுள்ளது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், சியோமி, ரெட்மி, போகோ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் பயனர்களின் தகவல்கள் திருடுபோக அதிக வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

சியோமி, ரெட்மி, போகோ போன்களுக்கு வைரஸ் தாக்குதல் ஆபத்து (Xiaomi Redmi POCO Smartphone Faces Dangerous Virus Threat):
கடந்த ஏப்ரல் 25,2024 ஆம் தேதி முதல் ஏப்ரல் 30, 2024 ஆம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்குள், பாதிக்கப்பட்ட சாதனங்களின் பல்வேறு பயன்பாடுகள் மற்றும் சிஸ்டம் ஃபைல்களில் இந்த பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன என்று சமீபத்திய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சியோமி மற்றும் பிற சாதனங்களில் சமீபத்தில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் தாக்குதல்கள் ஓவர்ஸ்கியூர்டு மூலம் வெளியிடப்பட்ட வலைப்பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளன.
இந்த வலைப்பதிவின் படி, சியோமி, ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட்போன்களில் பயன்படுத்தப்படும் MIUI மற்றும் ஹைப்பர் ஓஎஸ் (HyperOS) இல் இந்த சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ஆண்டின் தொடக்கத்தில், சியோமி அதன் சொந்தமான MIUI இயங்குதளத்திற்கு ஹைப்பர் ஓஎஸ் என்று மறுபெயரிட்டது. இது ஆண்ட்ராய்டு 14 (Android 14 OS) ஐ ஆதரிக்கும் திறன் கொண்டது.
சமீபத்தில் வெளியான அறிக்கையின்படி, சியோமியின் ஓப்பன் சோர்ஸ் ப்ராஜெக்ட் ஆப்ஸில் (AOSP) இந்த பிரச்சனைக்குரிய சில குறைபாடுகள் காணப்படுகின்றன. இவை சரிசெய்யப்பட வேண்டும். இந்த பாதுகாப்பு குறைபாடுகள் குறிப்பாக சியோமி சாதனங்களில் இருக்கும் ஆப்ஸ் உடனான பேட்ச் உடன் கண்டறியப்பட்டுள்ளன. சியோமி, ரெட்மி மற்றும் போகோ சாதனங்களில் உள்ள இந்த பயன்பாடுகளில் குறைபாடுகள் கண்டறியப்பட்டுள்ளன.

எந்தெந்த ஃபைல்களை இந்த வைரஸ் தாக்க கூடும்?
1. கேலரி - Gallery (com.miui.gallery)
2. கேட்ஆப்ஸ் - GetApps (com.xiaomi.mipicks)
3. மி வீடியோ - Mi Video (com.miui.videoplayer)
4. ப்ளூடூத் - MIUI Bluetooth (com.xiaomi.bluetooth)
5. போன் சர்வீசஸ் - Phone Services (com.android.phone)
6. பிரிண்ட் ஸ்பூலர் - Print Spooler (com.android.printspooler)
7. செக்யூரிட்டி - Security (com.miui.securitycenter)
8. செக்யூரிட்டி கோர் காம்போனென்ட் - Security Core Component (com.miui.securitycore)
9. செட்டிங்ஸ் - Settings (com.android.settings)
10. ஷேர் மீ - ShareMe (com.xiaomi.midrop)
11. சிஸ்டம் டிரேசிங் - System Tracing (com.android.traceur)
12. சியோமி கிளவுட் - Xiaomi Cloud (com.miui.cloudservice)
சியோமி, ரெட்மி மற்றும் போகோ ஸ்மார்ட்போன்களில் உள்ள இந்த பகுதிகளில் பாதுகாப்பு சிக்கல்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இந்த பாதுகாப்பு சிக்கல்கள் மற்றும் ஹேக்கிங் அபாயம் குறித்து சியோமி நிறுவனம் எந்தவொரு தகவலையும் இன்னும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், இந்த பாதுகாப்பு சிக்கலை சரி செய்யக்கூடிய செக்யூரிட்டி பேட்ச் அப்டேட்டை நிறுவனம் விரைவில் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








